ஆணை - உத்தரவு.
உத்தரவு என்பது நல்ல
தமிழ்ச்சொல் என்பதை எளிதில் அறியலாம். உ என்பது
முன்னிலை குறிக்கும் சுட்டடி ஆகும். அ. இ, உ. (எ)
என்பன சுட்டுக்கள்.
தரவு என்பது தரு+ வு. இதில் வு என்பது தொழ்ற்பெயர் விகுதி. தருதலே வினை.
எனவே உத்தரவு என்பது
முன் தரப்படுவது. முன்னவனால் தரப்படுவது எனினும் ஒக்கும்.
ஆணை என்பது ஆள் என்ற
சொல்லிலிருந்து திரிந்தது. ஆள் என்ற வினை
ஆட்சிசெய்தல் அல்லது மேல் உரைத்தல்.
ஆள் > ஆ:ளுதல்.
ஆள் > ஆண் > ஆணை.
ஐ என்பது தொழிற்பெயர் விகுதி.
ஆண் > ஆண்டை;
ஆண் > ஆண்டி.
ஆள் என்பது எச்சவினையாம்போது ஆண்டு,
ஆண்ட என்றும் வரும்.
:ளகரம் ணகரமாக மாறுவதற்கு உதாரணங்கள்:
ஆள் > ஆண்.
புள்ளியம் > புண்ணியம். + (இச்சொல் இப்போது தேசிய சேவை செய்கிறது,)
:ளகரம் ணகரமாக மாறுவதற்கு உதாரணங்கள்:
ஆள் > ஆண்.
புள்ளியம் > புண்ணியம். + (இச்சொல் இப்போது தேசிய சேவை செய்கிறது,)
---------------------------------------------
+ இது மறைமலையடிகளார் கூறிய முடிபு.
+ இது மறைமலையடிகளார் கூறிய முடிபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக