திங்கள், 30 அக்டோபர், 2017

தக்கை தடுக்கையிலிருந்து......




இன்று “தக்கை” என்ற சொல்லின் அமைப்பை அறிவோம்.

ஒரு புட்டியில் நீர் உள்ளது. அது ஊற்றிப்போகாமலும் காய்ந்து விடாமலும் இருக்கவேண்டுமானால் அப்புட்டியின் வாயை அடைக்கவேண்டும். எழுத்துத் தமிழில் அங்கு பொருத்தப்படும் அடைப்பினை “அடைப்பு “  என்றோ “அடைப்பான்” என்றோ சொல்லலாம்.

பேச்சில் இதை “தக்கை”  என்பார்கள்.  அல்லது ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவோரும் உளர்.

இது ஓர் இடைக்குறைச் சொல்.

நீர் வெளியில் ஊற்றிவிடாமல் தடுப்பதால் அது ஒரு தடுக்கை. இதில் உள்ள டு என்ற எழுத்தைக் குறைத்தால் அது தக்கை என்று சுருங்கிவிடுகிறது. 

இத்தகைய சுருக்குச் சொற்கள் பல தமிழில் மிளிர்கின்றன.

“தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்” என்ற பாடல்வரியில் எல்லாம் என்ற சொல் “எலாம்” என்று குறைந்தது.

இல்லார் என்பது இலர் என்றும் குன்றும்.

இதுபோன்றதொரு மாற்றமே தக்கை என்ற சொல்லில் நிகழ்ந்துள்ளது காண்க.

தடுக்கை > தக்கை.

இத்தகு பல வசதிகளை உடைய மொழி தமிழாகும்.

குறைச்சொற்கள் தனித்தகுதி பெற்று முழுச்சொல் என்ற மதிப்புடன் மொழியில் வருதலும் உண்டு. இப்படியுள்ள வசதியால் நமக்குச் சொ/ற்கள் அதிகம் கிடைக்கும்.  புதிய சொற்கள் கிட்டும். மொழி வளர்ச்சி காணும்.
தடுக்கை என்ற மூலம் வழக்கிறந்தது நல்லதுதான், அதன்மூலம் தக்கை என்ற சொல் நிறைச்சொல்லாய் நிற்கிறது.





தங்கு > தக்கு > தக்கை.  ( வலித்தலும் ஐ விகுதியும்) எனினுமாம்,
 


கருத்துகள் இல்லை: