வெள்ளி, 27 அக்டோபர், 2017

தமிழ் ஏன் உலகமொழியாகவில்லை?

Please note that some errors have been introduced into the text of this post by some virus. When we tried to edit those errors, the computer freezes thus preventing edit.  Thus we have to wait until this virus expires or the post can be otherwise edited by some other means.  Please wait. You may read this post if you disregard those virus-generated errors. Your kind understanding is solicited.

வரு என்னும் சொல் எடுத்த “அவதாரங்கள்””
============================================
வரு என்பது ஓர் ஏவல் வினை. பழங்காலத் தமிழன் ஒருவனை அருகில் வருமாறு அழைக்கையில் “வரு!  வரு!”  என்றே கூவியிருப்பான். ஆனால் ,மனிதன் பயன்படுத்தும் எந்த மொழியும் திரிபுகள் அடையாமல் இருப்பதில்லை.  ஆகவே தமிழ் இயன்மொழி என்றாலும் அதிலும் சொற்கள் பல திரிந்தே வழங்குதல் காணலாம். (இயற்சொல், அடுத்துத் திரிசொல்”  என்றார் தொல்காப்பியனார் ) தமிழ்ச் சொற்கள் திரிந்து தமிழிலே வழங்குதலைக் குறிப்பிடுகின்றோம்.   தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளிற் சென்று திரிந்து வழங்குதல் மற்றும் பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து தமிழுக்கேற்பத் திரிந்து வழங்குதல் என்பவற்றை இங்குக் குறிக்கவில்லை. ஒரு சிறு இடுகையில் எல்லாம் விளக்குதல் இயலாத காரியம் ஆகும்.

வரு என்ற வினைச்சொல். ஏவலாக வரும்போது (அதாவது கூப்பிடும்போது)  வா என்று திரிந்துவிடுகிறது.   வகரக் குறில் நெடிலானது மட்டுமின்றி ரகர ஒற்றும் வீழ்ந்துவிடுகிறது.  பார்க்கப்போனால் இது கடுமையான திரிபுதான்.. இருபக்கமும் திரிபு. நாம் பேசும்போது வரு என்பதற்கும் வா என்பதற்கும் உள்ள தொடர்பினையோ மாற்றங்களையோ சிந்திப்பதில்லை. சிந்தித்தல் தேவையில்லாமையால். ஆனால் சொற்களை ஆய்ந்து காண விரும்பும் எவனும் இவற்றையும் இவைபோல்வன பிறவற்றையும் நன்கு சிந்திக்கவேண்டும்.

மலையாளமொழியில் இச்சொல் ஏவல் வினையிலும் வரு என்றே வழங்குகிறது. ஆக, மலையாளக் கவிஞர் வரு வரு கண்ணா என்றே பாடலை அமைக்கிறார். தமிழ்க்கவிஞர் கண்ணா வா வா மணி மணி வண்ணா வாவா என்’கிறார்.  திராவிட மொழிகள் என்பவை ஒரே அடிப்படையிலிருந்து தோன்றித் திரிந்தவை ஆகும்.
வரு >  வருகிறான் என்று நிகழ்காலத்து வினைமுற்றாக வரும் சொல் இறந்த காலத்தில் வந்தான் என்றாகிறது.  திரிபுகளை வரிசைப்படுத்தினால் வரு>  வார் > வா > வ  என அமையும். வினை எச்சமாகும்போது வந்து என்றும் பெயரெச்சாமாய்  வந்த என்றும் தோற்றமளிக்கும்.

அகரவரிசைகள்:

ஒரு வெள்ளைக்காரி பல்கலைக் கழகத்திற் சென்று தமிழ்ப் பட்டப்படிப்பு மேற்கொண்டாள்.  அவள் படித்த ஒரு கட்டுரையில் வந்த என்ற எச்சவினை இருந்தது. வரு வருகிறான் என்பது தெரியும்.  வந்த என்பது தெரியவில்லை.   அகரவரிசையைப் புரட்டிப் பார்த்தால் வருதல் என்பது இருக்கிறது,  வந்த வந்து என்ற திரிபுகள் இல்லை. இணையமூலம் தமிழ்க் களங்கட்குச் சென்று கேட்டறியவேண்டியதாயிற்று. அதை முழுமையாகக் கற்றுக்கொடுக்கவும் அங்கிருந்த நேயர்களுக்கும் கொஞ்சம் இடர்ப்பாடாகவே இருந்தது.  ஏன் அது அகரவரிசையில் இல்லை என்பது அவளுடைய ஆதங்கமாகிவிட்டது.

தமிழ் அகரவரிசைகளைக் கொண்டு சொல்லுக்குப் பொருள் அறிதல் கூடும். வேறு ஏதும் சாய்ந்துவிடாது. வாரான்; வாரீர்; வாராய்: வாரோம் என்றுவரும் இவபோல பலவற்றை எங்கே அகராதியில் காணமுடிகிறது?
கடினமான மொழியாதலால் தமிழ் பிறரிடம் அருகியே வழங்குகிறது.  உலகமொழியாகும் எளிமை இல்லை.

அவன் வருகிறான்  :  இது வாக்கியம்.

அவன் என்பதில் ஆண்பால் வந்துவிட்டது.

பின் வருகிறான் என்பதில் ஏன் ஆண்பாலைக் காட்டவேண்டும்?

“அவன்” ஆணா அல்லது “பெண்ணா” என்று ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? Unless you are describing or discussing a rape case or something….!

அ வரு  என்றால் போதாதா? உலகில் பல மொழிகள் இப்படித்தான் அடிப்படைக் கருத்தை மட்டும் சொல்கின்றன.

திணை, பால் , எண், இடம், வேற்றுமை என்றில்லாமல் எளிமையாய் இயல்கின்றன. இதில் விழிப்பாகக் கவனிக்கவேண்டியது: மொழியில் இத்தகைய வேறுபாடுகள் இல்லையென்றால் அவர்களின் குமுக வாழ்விலும் இவை இல்லையென்று பொருள்கொள்ளலாகாது. பெண்ணியம் முழுமையாய் அவர்கள் வாழ்வில் மிளிர்கிறது என்று கொள்ளலாகாது.  அதற்கு வேறு சான்றுகள் தேவைப்படும். மற்றபடி.  இந்த வகையில் அம்மொழிகள் அமைப்பில் மிக்க எளிமையானவை.

அயலார் கற்கக் கடினமொழி செந்தமிழ். மரபு வழாமையும் இலக்கண விதிகளும் மிக்கு.,  மொழி கடினப்பட்டுவிட்டது.  இத்தகைய கடினமொழியினின்று அயலார் எத்தகு நன்மைகள் அடையலாம்?  சொற்களை எடுத்துத் திரித்து தம்மொழியை வளப்படுத்திக்கொள்ளலாம்,  தவிர எழுத்து, பொருள் யாப்பு அணியென்பவற்றிலிருந்து அவர்கள் கவர்ந்துகொள்ளத்தக்கது சிற்றளவே ஆகும். (திருக்குறள் பஞ்ச தந்திரக் கதைகள் முதலானவை இங்கு குறிக்கப்படவில்லை.  மொழியமைப்பு முதலியவற்றைக் குறிப்பிடுகிறோம்).  பொருளிலக்கணம் முற்றிலும் பயன் தரவல்லதன்று என்று ஒருவாறு துணியலாம். எடுத் துக்காட்டாக காதலன் வந்து தன்னைக் கொண்டு செல்லாமையினால் மனம் நொந்து அவன் வரவேண்டி எண்ணம் மிகுத்து முருகன்பால் வெறியாட்டு மேற்கொள்வது (அகப்புறப் பொருள் ) ஒரு சீனப்பெண்ணுக்கோ அல்லது மலாய்ப்பெண்ணுக்கோ பொருந்தாது.  முருகனுக்குப் பதில் குவான் இன்னையோ அல்லாவையோ இட்டுவைத்தாலும் அம்மக்களிடை வரவேற்பு நிலையை அஃது எய்தப்போவதில்லை.

இன்னும் அடுக்கலாம் எனினும் இத்துடன் சலிப்பின்றி முடிப்போம். 

(உங்கள் கருத்துகள் வேறுபடலாம்.  அவை வாசித்தோர் கருத்துகள் மூலம் எங்களிடம் வருதலை வரவேற்கிறோம்.  Please use the comments column.)

திருத்தங்கள் பின்.

Beware of multiple dots and incorrect  auto corrections as well as  multiple repeat posts by virus. Apologies.  These will be attended to when spotted.



கருத்துகள் இல்லை: