குளம்பி குடிக்கும் குறுகுகடை உட்கார்ந்த்
தலசியெடுப் பாரரசுச் செய்தி ==== தொலையவது
வெட்டும் முடிவினைஞர் பேசுவர் இப்போதோ
எட்டுத் திசையுமிணை யம். ( 1 ) -
குளம்பி - காப்பி
தொலையவது - அது நிற்க
அந்தவிருள் காலத்தும் வீழ்ந்த அணிபலவாம்
உந்துபொருள் இக்காலும் உண்டேகொள் === நொந்தனையோ
எந்தக் கலிகாலும் இஃதுண்டே மாறுமோ
பந்தம் குலையா வரை. (2)
இக்காலும் - இப்போதும்.
கலி காலும் - எழுச்சி காலத்தும்
உலகத்தின் பால் பந்தம் கொள்வதால் மனிதன் பிறருடன் முரண்படுகின்றான் .
ஆன அரசியல் மென்குடி வன்படை
மானும் அறம்பொருள் மாறாடக் === காணிடங்கள்
எங்கும்வாய் மூளை எடுத்துச் செலும்மாந்தன்
தங்கும் நிலையோ முரண் . (3)
மாந்தன் வாய் மூளை எடுத்துச் செலும் - மனிதன் எங்கு சென்றாலும்
வாயையும் மூளையையும் எடுத்துச் செல்பவன்; ( ஆகையால் )
ஆன அரசியல் மென்குடி வன்படை மானும் அறம்பொருள் மாறாடக் காணிடங்கள் - அரசியல் மென்மை உடைய குடி வன்மையுடைய படை அறம் பொருள் என எல்லா விடயங்களும் அவன் மாறுபடும் படியாகக் காணுமிடங்கள் ஆகும்; தங்கும் நிலையோ முரண் - அதனால்தான் அவன் எதிலும் முரண் படுகின்றான் . ( உலகில் முரண்பாடு தங்குகிறது ,)
வாய் மூளை இல்லாமலும் வாழ முடியாது; ஆகவே அவனைக் கடிவதில் பொருளில்லை .என்றபடி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக