Continue reading from http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_8.html
based on the word: காய்தல் : ஒளி வீசுதல் .
based on the word: காய்தல் : ஒளி வீசுதல் .
காயத்திரி
என்பது ஒரு மந்திரத்திற்கும்
பெயராய் உள்ளது. காயத்திரி
என்பதற்குச்
சமஸ்கிருதப் பேரகரவரிசைகள்
பல ஆழ்ந்த பொருளுரைக்கும்.
ஆனால்
இச்சொல்lலை ஏனை இந்தோ ஐரோப்பிய
மொழிகளில் காண இயலவில்லை .இது ஒரு
திராவிடச் சொல்லே என்பது
இதனால் தெளிவாகிறது.
காயா என்பது
வெற்றிகொண்டது, பற்றப்பட்டது
என்ற பொருளில் வரும்
ஒரு சொல்லாம்.
காயத்திரி என்பதற்கு அல்லது அதன் தொடர்புடைய சொல்லுக்கு ஒரு பாடல், ஒரு பா
அடியளவு என்றும் பொருள் காணப்படுகிறது.
இவை
எங்ஙனமாயினும் இதை ஒரு
தென்சொல்லாகக் கொண்டால்,
காய = ஒளி
வீச, திரி = மாறு அல்லது மாற்றம்
தருவது என்று கொள்ளலாம்.
திரிதலாவது: மாறுதல்
என்பதாம். இருள்
திரிந்து ஒளியாய் மாறுவது
எனல் பொருத்தமே .
காயத்தை
அதாவது உடலை; திரி = திரியாக எரியத் தருவது என்று
கூறினாருமுளர்.
தமிழிலும்
இனிய பொருளே கிட்டுகின்றது
என்பதறிக. இது எந்தமொழிச் சொல் என்பதன்று ஆய்வு; தமிழில் பொருள் கூறல் இயலுமா என்பதும் இயலுமாயின் யாது பொருளாம் என்பதுமேயாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக