ஒரு குடியில் பிறக்கும் குழந்தைகள் வளர்ந்து வயது (அகவை) வந்தபின்பு திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களும் மணவயதுடையவராகிப் பின் அவர்களும் பிள்ளைகள் பெற்றுக்கொண்டு, பின் அந்தப் பிள்ளைகளும் அகவை எய்தி...........
இப்படியே வந்துகொண்டிருப்பதுதான் வம்மிசம்.
வருமின் > வம்மின் என்று சுருங்கும். இடையில் உள்ள "ரு" மறைந்துவிட்டது. அவ்வளவுதான்.
வ+ மின் = வம்மின்.
மின் ஒரு ஏவல் விகுதி. இதை வியங்கோள் வினைமுற்றுக்குரிய விகுதி என்பார்கள். வரு+க = வருக என்பதில் ககரம் இறுதியில் வந்ததுபோல.
நாம் மின் என்ற விகுதியை இங்கு ஆய்வு செய்யவில்லை. ஆதலால் அதை விடுப்போம்.
வரு என்பது பகுதி; அது வ- என்று சுருங்கும்.
மேலும் மேலும் தலைமுறையில் குழந்தைகள் பிறந்து அவர்கள் பிறப்பிக்கிற படியால் "மிசை" என்பதைச் சேர்க்க வேண்டும்.
ஆக, வ+ மிசை = வம்மிசை ஆகிறது.
அம் என்ற சொல்லமைப்பு விகுதி சேர்த்தால்: வம்மிசையம்
என்று வரும். இங்கு மிசை என்பதில் வரும் "ஐ"காரத்தைக் குறுக்கலாம். அப்போது
வம் மிச் அம் என்றாகும். ச்+ ஐ = சை. அதில் ஐயைக் எடுத்துச் சையைக் குறுக்கினால், ச் மிஞ்சுகிறது.
வம் மிச் அம் = வம்மிசம் ஆகிறது.
இது ஒரு பேச்சு வழக்குச் சொல். திட்டும்போது உன் வம்மிசம்
கருவத்துப் போக என்று கிழவி கத்துவதுண்டு. கொஞ்சம் பழங்காலக் கிழவிகளைச் சொல்கிறேன்.
இதுபின் "வம்ஸ" என்று மெருகேற்றப் பட்டது.
மலாயில் வங்ஸ என்றிருக்கும். புத்திரி வங்ஸ என்றால்
குலமகள் இளவரசி.
வரு என்பது இறந்த காலத்தில் வ என்று குறுகும். வந்தான், வந்தாள், வந்தது.
வம்மின் ஈங்கு ( புறநானூறு. 294.) [ நினைவில் இருந்து.] தேடிப் பார்க்கவும். வம்மின் = "வா'ங்க" (என்பது).
மிசை என்பது எளிய சொல்தான். மிசை > மீசை. உதட்டின் மீதிருக்கும் முடி. மித : தண்ணீரின் மேல் நில் அல்லது உலவு என்று பொருள். மிதம் = பளு அற்ற நிலை; மிதப்பது. மிதை > மிசை த> ச போலி. இது மோனையாகவும் வரும்.
மே , மேல் , மீ மி means up.
மலர்மிசை ஏகினான் ......குறள்.
தமிழ் "வம்மிசையம்" வளர்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக