பலருக்கும்
பாத்தூண் வழங்கிப் பயன்தரினும்
உலரும்
பசியும்நீர் உற்றுழலும்
பிற்பொழுதில்
நலம்பழ
நாளெண்ணி நன்மனமே கொண்டுவந்து
நிலம்போலும்
பேணஉமை நின்றிடு நன்றியர்யார்?உரை:
பாத்தூண் : பகுத்து அளிக்கும் உணவு.
உலரும் பசி: வயிறு உதடு முதலிய உலர்ந்துபோகும் பசி.
நீர் : நீங்கள் பிற்பொழுதில் : பின்னாளில்/
நலம் பழ நாள் எண்ணி : முன்னாளில் செயத நன்மைகளை எண்ணிப்பார்த்து.
கொண்டுவந்து : கொண்டு உவந்து;
நிலம்போலும்: பூமியைப் போல்
பேண உமை : உம்மைப் பேண ; உங்களைப் பாதுகாக்க
நின்றிடு நன்றியர்: இருக்கின்ற நன்றியுள்ளவர் யார், யாருமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக