meta-analysis of kariththal.
======================
இந்தச்
சொல்லின் கரித்தல் என்பதன்
பொருளையும் அச்சொல்லின் பிறப்பு அமைப்பையும் கவனித்து மகிழ்வோம்.
இப்போது
கரித்தல் என்று முடியும்
சொற்கள் சிலவிருப்பதாகத்
தெரிகிறது. இவற்றுள்
சுத்திகரித்தல் என்பது ஒரு
முன்மை வாய்ந்த சொல்லாகும்.
சுத்தி
என்பது சுத்தம் அல்லது தூய்மை.
இது உகர முதலாகிய
உத்தம் என்ற சொல்லினின்று
திரிந்தது என்பது தெளிவு.
உ = என்பது
முன் உள்ளது என்றும் பொருள்படும்
ஒரு முதன்மை வாய்ந்த சுட்டடி
ஆகும். இதிலிருந்து
உத்தம் என்ற சொல் தோன்றியது.
உ+ து
+ அம் > உ+
த் + து +
அம் = உத்தம்.
து என்பது உடையது என்று பொருள்தரும் ஒரு விகுதி.
எ - டு : முதல் + து = முதற்று (முதலாக உடையது )
இதில்
இரண்டாவது நிலையில் ஒரு தகர
ஒற்றுத் தோன்றியது. இது
எழுத்துக்களைப்
புணர்த்தியதனால் தோன்றிய
தகர ஒற்று ஆகும்.
இது இன்னும்
நீண்டது. இரண்டாவது
அம் விகுதி பெற்றது.
உத்தம்+
அம் = உத்தமம்.
ஒன்று
மட்டும் இன்றி இரண்டாவது,
மூன்றாவது நான்காவதென்று
விகுதிகள்
பெற்ற சொற்களும் பல.
விகுதிகளைக் கொண்டு
சொற்களை மிகுத்தல் தமிழியல்பு
ஆகும்.
உயிர்
முதலாகிய சொற்கள் மெய் முன்னில்
ஏறித் திரிதல் முன்னர்
விளக்கப்பட்டுள்ளது.
அவ்விடுகைகள் காண்க.
உத்தம்
> சுத்தம்.
சுத்தம் > சுத்தி,
இச்சொல்
முன்னர் விளக்கப்பட்டுள்ளது.
ஆறு நீர்நிலை
முதலிய தூய்மைப் படுத்துவோர்,
அங்கு பிடித்துள்ள
அசடுகளை அரித்தெடுத்தல்
இயல்பு.
சுத்திக்கு
அரித்தல் > சுத்திக்கரித்தல்
> சுத்திகரித்தல்.
இங்கு ஒரு
ககர ஒற்று மறைந்தது. நாளடைவில்
அரித்தல் கரித்தல்
ஆயிற்று.
ஒப்பீடு:
கார்+ ஆக்கு+
இரு + அகம்
= காராக்கிரகம்
இதிலிருந்து
கிரகம்
என்ற சொல் பிறழ்பிரிப்பால்
தனிச்சொல் ஆயிற்று.
அதுபோல்
கரித்தல் தனிச்சொல் ஆகி,
சுத்தி என்பது சுத்தம்
ஆனால் கரித்தல் என்பது செய்தல்
என்று உணரப்பட்டு, கரித்தல்
செய்தலானது.
ஆனால் உப்புக் கரித்தல் என்பதில் கரித்தல் சுவையைக் குறிப்பதாகும் . அது வேறு.
இதன்பின்
செய்தல் என்ற துணைவினை
தேவைப்படும் சொற்களில்
கரித்தல்
செய்கைப் பொருளில் சேர்க்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக