பங்காள முத்து
இப்போது இந்த முத்து ஏதும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்கம் உள்ளிட்ட முன்னைய வங்காள தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த முத்துக்களையே இது குறிக்கிறது. இவற்றைப் பங்காள முத்து என்றனர். மன்னர்கள், குறு நில ஆட்சியாளர்கள் முதலானோர் இப்பெயரை இட்டிருத்தல் கூடும். (இவற்றை வாங்கினோர் என்பதால் )
தமிழ் நாட்டு முத்துக்களே உண்மையான மதிப்புமிக்க முத்துக்கள். முத்தாரம் (முத்தியாரா ) என்ற சொல் இந்தோனேசியா மலேசியா முதலிய நாடுகளில் வழங்கும் மொழிகளிலும் ஊடுருவியுள்ளபடியால், தமிழக முத்துக்கள் உண்மையான உயர்ந்தவை என்பது பெறப்படும், மேலும் முத்து என்ற தமிழ்ச்சொல் மலாய் மொழியில் தகுதி என்றும் உயர்வு என்றும் பொருள்தருவது இதை எடுத்துக்காட்டுகிறது. பெர்முத்து திங்கி bermutu tinggi (high quality ) என்ற மலாய்த் தொடர் இதனை வலியுறுத்தும்.
நாளடைவில் பங்காள முத்து என்றால் பொய் முத்து என்ற பொருள்
ஏற்பட்டுவிட்டது. வங்காளம் என்ற சொல் பங்காளம் என்று திரிவது
வகர பகரப் பரிமாற்றமாகும். இதனைப் போலி என்று இலக்கணங் கூறும். போல இருத்தலின் போலி.
வங்காளிகள் உண்மையில் "பங்காளிகள்" ; எப்படி எனில் இவர்கள் ஒரு பங்கு மங்கோலியக் கலப்பு உடையோர் என்பர். கூடிய மங்கோலியக் கலப்பு உடையோர் சற்று வெண்மையாகவும் குறைந்த கலப்பு உடையோர் சற்றுக் கருப்பாகவுமிருப்பதாகச் சொல்லப்படும். பங்கு (part) 1 வெண்மைக் கலப்பினால் பங்காளிகள் ஆகி அது வங்காளிகள் என்றும் திரிந்ததென்ப. 3
ஆங்கிலேயர் வளையல்களை அறிந்ததும் வங்காள
நாட்டிலிருந்துதான். அதனால் வளையலுக்கு ஆங்கிலத்தில்
பேங்கிள் bangle என்ற பெயர் உண்டாயிற்று.
Notes:
----------------------------------------------------------------------
1 அதாவது தோல் மஞ்சள் நிறமும் இப்போது வெண்மையாகக் கருதப்படுகிறது. வெளிறிய மஞ்சள் என்பர் அறிஞர் yellowish white.
2 edited. will review.
3 திராவிட மொழி பேசிய பங்கு (bang) இனத்தவர் பெயரிலிருந்து இந்தச் சொல் வந்தது என்பர். இவர்கள் பங்குத் (பாதித் ) திராவிடர். காலக் கணக்கீடு 1000 BCE. பங்கு பங்காளி முதலிய இன்னும் தமிழில் வழக்குடைய பதங்களாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக