இச்சொல் எப்படி அமைந்தது என்பதை ஆய்வோம்.
சில பொருள்களை இடித்துத் தூளாக்கி மருந்து செய்வார்கள். இவற்றைச் சூரணம் என்பர். சிலவற்றை காய்ச்சி எடுப்பார்கள். இன்னும் சில புடம்போட்டுத் தயார் செய்யப்படும். இங்ஙனம் மருந்து செய்யப் பல வழிகளைக் கையாளுவதுண்டு.
தயார் செய்தும் சில சற்று இளகிய நிலையிலேயே இருக்கும். இவை உண்மையில் "இளகியம்" ஆகும். இச்சொல் திரிந்து லேகியம் ஆகிவிட்டதுடன், இளகியம் மறைந்துவிட்டது.
அவிழ்தல் என்பது இளகுதல். சொரிதல், மலருதல், விரிதல், உதிர்தல், நெகிழ்தல் என்ற பொருளுடைய வினைச்சொல்.
இதிலிருந்து அவிழ்+ அது+ அம் = அவிழதம் என்று அமைத்தனர்.
அமைத்தகாலை, இச்சொல இளகிய அல்லது நெகிழ்வாக இருந்த
மருந்துகளைக் குறித்தது. தூளாக இருந்தது தூளம்> தூரம் > செந்தூரம் என்று குறிக்கப்பட்டது போல, இளகிய நிலை மருந்துகளும் அவிழதம், இளகியம் எனப்பட்டன.
இவற்றுள் இளகியம் லேகியம் ஆனதுபோல, அவிழதம்? அவுடதம் >
அவுஷதம் ஆகிவிட்டது. இச்சொல் இப்போது மருந்து என்ற பொதுப்பொருளில் குறிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக