நந்தா என்ற சங்கதச் சொல்லைக் கவனிப்போம். ஒரு சங்கதச் சொல் என்றால் அது தமிழிலிருந்து வந்ததாக வேண்டும். அல்லது பாகதங்களிலிருந்து போந்ததாகவேண்டும். அல்லது அவஸ்தான் உள்ளிட்ட மேலை மொழிகளில் ஒன்றிலிருந்து வந்ததாக இருக்கவேண்டும். நன்றாகச் செய்யப்பட்ட சமஸ்கிருதப் பொதுமொழி, தனக்கென சொந்தச் சொற்கள் இல்லாதது. தொடக்கத்தில் அரமாயிக் எழுத்துக்களை அது பயன்படுத்தியதாக ஜான் கே என்னும் வரலாற்றாசிரியர் கூறுவார்.
நந்தா என்னும் சொல்லோவெனின், சங்கதத்தில் பெருவழக்கு உடையது.
அதைத் தமிழினோடு தொடர்புறுத்த எந்த ஆய்வாளனும் கொஞ்சம் நடுங்கவேண்டுமே!
பின்+ தி > பிந்தி என்றும் முன்+தி = முந்தி என்றும் சொற்கள் அமைந்துள்ள படியாலும் , அல்>அன்>அந்தி என்று வருவதாலும்
நந்தன் என்பதை எளிதாகவே கண்டுபிடிக்கலாம்.
நல் > நன் > நந்தன். அதாவது நந்தா என்பது, மகிழ்வு, நன்மை முதலியன அடிப்படையாக எழுந்த சொல். மகிழ்வு நன்மையாம், கொண்டாட்டம், களிப்பு, புல்லாங்குழல் முதலியன அடிப்படைப் பொருள்கள். குழலினிது என்று வள்ளுவம் கூறுவதால், அதுவும் மகிழ்வின் * தரவேயாகும் என்பதறிக. *derived meaning from happiness.
இச்சொல் பலருக்குப் பெயராகவும், கண்ணனுக்குப் பெயராகவும் பயன்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததுதான். இதன் முழு விவரம் (கீழே) அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.
அல் : இரவு நேரம். அல் > அன். லகர னகரத் திரிபு. இன்னோர் எடுத்துக்காட்டு: திறல் > திறன். ல் >ன் பலமொழிகளில் காணலாம்.
சீனமொழியிலும் உண்டு.
இதைப் போலவே நல் ( நல்லது ) என்பதிலிருந்து நன் வந்தது. பின்
தன் என்ற விகுதி பெற்று நந்தன் ஆயிற்று. இதன் தன்மையை இங்கு
தொடக்கத்திலேயே விளக்கினோம்.
இந்தியச் சொற்கள் பலவும் தமிழிலிருந்தும் முன்னைப் பாகதங்களிலிருந்தும் திரிந்தன. முன்னை என்றால் சங்கதம் உருவாகுமுன் வழங்கிய பழம் பாகதங்கள்.
நன்மை மகிழ்வு. இதுவே அடிப்படை என்றுணர்க.
1 | nanda | m. joy , delight , happiness a flute . of one of Yudhi-shthira's drums of one of Kubera's gems . ; a son {nandana}) ; of Vishnu of one of Skanda's attendants of a Na1ga (also {-ka}) ; of a Buddh. deity Lalit. ; of an attendant on Daksha . ; of a son of Dhrita-rashtra (also -ka}) ; of a step-brother and disciple of Gautama Buddha ; of a son of Vasu-deva . ; of the foster-father of Krishna and ancestor of Durga {-ka}.) ; of a leader of the Satvatas ; of a king of Patali-putra and founder of a dynasty consisting of 9 successive princes . Pur. Kathas. Pan; of the number 9 (because of the 9 Nandas) Jyot. ; of sev. scholars and authors of a mountain (cf. {-parvata} and {nandi-giri}) ; (A}) f. Delight , Felicity (personified as wife of Harsha ; cf. %{nandi}) MBh. i , 2597 ; prosperity , happiness L. ; a small earthen water-jar (also %{-dikA}) L. ; a husband's sister (cf. %{nanAndR}) L. ; N. of the 3 auspicious Tithis (1st , 6th , and 11th day of the fortnight) VarBr2S. ic , 2 (also %{-dikA} L.) ; of the 7th day in Ma1rgas3i1rsha Hcat. ; (in music) of a Mu1rchana1 ; of Gauri1 Hcat. ; of an Apsaras Hariv. ; of a daughter of Vibhishan2a . ; of a girl connected with Sakya-muni Buddh. ; of the mother of 10th Arhat of present Ava-sarpini. ; of the wife of Gopa1la-varman Rajat. ; of a river flowing near Kubera's city Alaka ; a kind of song or musical instrument ManG. ; N. of the 6th day in a month's light half . ; of Durga1 Devi1P. ; of Indra's city W. ; a kind of house |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக