தீபாவளிப் பண்டிகை --- அதைக்கொண்
டாடுவதும் எண்டிசை!
தாபாவொடு நல்லிசை ---- கனிச்சாறு
தாகமதற் கில்லிலே.
இருப்பதும் இருபதுபேர் ---- ஆயினும்
இருவரே வந்துசெல்வார்.
வெறுப்பதும் நோய்நுண்மியே---- அதுதரும்
வேதனை விளைமுடிவே.
மிச்சமோ அண்டாவிலே ---- எடுத்து
மேல்வரா அன்பர்கட்கே,
உச்சிமுன் பைக்கட்டுகள் ---- தருவோம்
உண்ணுக என்றுசொல்வோம்.
வேறென்ன நாம்செய்வது ----- கட்டு
விலகாத சட்டநிலை!
யாரும் உண்டுமகிழ் ---- என்பது
யாம்பாடு தீபாவளி.
எண்டிசை - எட்டுத்திசை மக்கள்
தா பா - தருக பாட்டு.
இல்லிலே - வீட்டிலே
மேல் வரா - மேலே வீட்டுக்குள் வரமுடியாத
இருபதுபேர் - விருந்தினர் அழைக்கப்பட்டவர்கள்.
விளை முடிவே - நாம் செய்த முடிவே. விளை - விளைந்த
கட்டு = கோவிட நடமாட்டம், கூட்டம் பற்றிய கட்டுப்பாடுகள்.
உச்சி - நண்பகல்
உச்சி முன் - உச்சிவேளை வருவதற்கு முன்னரே.
யாம் பாடு - நாங்கள் பாடும்
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக