இப்போது கத்தோலிக்க மதத்தில் உள்ள "கண்காணியார்களுக்கு" ( bishops ) பெரும்பாலும் கிறித்துவ வெளியீடுகளில் மேற்றிராணியார், அதிமேற்றிராணியார் என்ற பதங்கள் வழங்குகின்றன.
இப்பெயர்களைப் பார்ப்போம்.
மேல்+ திரு = மேற்றிரு என்று வரும்.
மேல்+ திரு + அரண் + இ > மேற்றிரணி.
திரு என்பதில் ஈற்று உகரம் கெட்டது. ஆகவே மேற்றிர் + அரணி > மேற்றிரணி என்றாகும்.
இது எளிதாகப் பலுக்குதல் பொருட்டு, மேற்றிராணி ஆயிற்று. இது வழக்கிலும் ( அதாவது பயன்பாட்டிலும் ) ஏற்பட்டிருத்தல் கூடும். புனைந்தோரும் அவ்வாறு நீட்டியிருக்கலாம்.
ராணா, மகாராணா என்பவை: அரணா, ராணா, என்று வந்திருப்பதால் இது மேற்றிராணி என்று வருவது சரியான திரிபே ஆகும். இதுபற்றிய இடுகை காண்க.
https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html
அரண் உடையவனே அரசன். ஆதலின் அரணன், அரணா, ராணா என்பவை அரசனுக்கு வழங்கிய பெயர்கள். தமிழ்நாட்டுக்கு அப்பால் அன் விகுதி வழங்குவது அருமை.
இது மேற்றன் என்ற சிரியப் பதத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்டதுண்டு.
எனவே மேற்றிரு அரணியே மேற்கண்டவாறு திரிபுற்றது. அரணி என்பது காவலர் என்று நல்ல பொருள் தருகிறது.
மேல் + திறன் > மேற்றிரண் என்று திரிதலும் கூடும். மேற்றிரன் > மேற்றன் என்றும் திரிதலும் கூடுவதே.
மேல்+திரு+ஆணை+ ஆர்> மேற்றிராணையார்> மேற்றிராணியார் என்றும் ஆகலாம். இது பல்பிறப்பிச் சொல்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக