மக்கள் தேவர் நரகர் என்போர் உயர்திணை என்பது பிற்காலத்து இலக்கணியர் தந்த வரையறவு ( definition ) ஆகும். தேவரையும் நரகரையும் நாம் பார்த்ததில்லை என்பதில் ஓர் உண்மையுண்டு. இவர்கள் மேலுலக, கீழுலக வாசிகள் என்றால் நாம் பார்த்ததில்லை என்பதே உண்மை. உயர்ந்த குணங்கள் உடையோர் தேவர்; வெறுக்கத்தக்க குணங்கள் உடையோர் நரகர், ஆனால் நம்முடன் தாம் உள்ளனர் என்றால், பார்த்திருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நம் எதிர்பார்ப்பு அல்லது பட்டறிவு, இவர்கள் யாவரும் ஒப்புமை உடையவர்கள் என்பதுதான். மக்கள்போல் நிமிர்ந்து நடப்பவர்கள். உறுப்புகளிலும் ஒற்றுமை உடையவர்கள். ஆனால் மக்கட்சுட்டே உயர்திணை என்பது தொல்காப்பியனார் தந்த வரையறவு ஆகும்.
பிறப்பு ஒக்கும் என்பதே நாயனார் தம் குறளில் தந்த ஒளி ஆகும். நாய் பூனை முதலியவையும் பாலூட்டிகள்தாம். சில ஒப்புமைகள் உள்ளன என்றாலும் வேற்றுமைகளும் பல உள்ளன.
ஒப்புமை அல்லது ஒத்திருத்தல் என்பதற்கு இன்னொரு சொல் மானுதல் என்பது. இதன் அடிச்சொல் மான் என்பதே.
இப்போது மாந்தன், மனிதன் என்ற சொற்களைப் பார்ப்போம். இவற்றுக்கு நாம் முன் வேறுபொருளை அடிச்சொல்லுக்குக் காட்டி விளக்கினோம். ஆயினும் ஒத்தல் என்ற கருத்தாலும் இச்சொற்களைக் காணலாம்.
மானுதல் - ஒத்தல். மான் - அடிச்சொல். பொருள்: ஒப்புமை.
மான்+ து + அன் = மாந்தன்.
மன் என்பது மான் என்பதன் குறுக்கமெனக் கொண்டு:
௳ன் + இது + அன் = மனிதன்.
ஒப்புடையவன் : தம்முள் தாம் ஒப்புடையவர், அல்லது தேவர் நரகர் என்போருடன் ஒப்புடையவன், சீனர் ஆங்கிலேயர் என யாருடனும் ஒப்புடையவன். இந்த ஒப்புக்கருத்து, சில வகைகளில் விளக்க இடந்தரும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக