இது கொவிட் தொற்றுக் காலமாக விருப்பதால், வீட்டினுள் பூட்டிக்கொண்டு வாழவேண்டிய நிலையில் பலர் உள்ளனர். நேரம் போவதற்குத் தொலைக்காட்சி பார்க்கலாம். வானொலி கேட்கலாம். கணினியில் வரும் செய்திகள் வாசிக்கலாம். ஆனால் இன்னொன்றும் செய்யலாம். அதுதான் ஒரு சிறிய குளம் அமைத்து, அதனைச் சூழச் செடிகொடிகள் வளரவிட்டு இயற்கையைப் போற்றி மகிழ்வது. பார்ப்பதற்கு வீடு குளிர்ச்சியாக இருக்கும்.
திரு கரு-ஜீ அவர்கள், இப்போது ஒரு குளம் அமைத்துக்கொண்டு உள்ளார். விரைவில் நல்ல செடிகொடிகள் தொட்டியைச் சூழ அமைப்புறும். செழித்து வளரும். அது முழு அமைப்பை அடைந்த பின்னர் இன்னொரு படத்தை எடுத்து உங்களுக்குத் தருவோம். இப்போது தொடக்கநிலைக் குளத்தைக் கண்டு, தோன்றியபடி நீங்களும் பின்பற்றலாமே. செலவு ஒன்றும் அதிகம் ஆகாது.
நாய் வளர்ப்பவராக இருந்தால், அது குளத்தில் போய்ப் பாய்ந்துவிடாமலும் செடிகொடிகளைக் கடித்துவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டிய கூடுதல் வேலையும் உங்களுடையதாகிவிடும்.
வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக