சனி, 16 அக்டோபர், 2021

நமோ நம, நமோ நம! என்ற வாழ்த்துத் தொடர்.

 இப்போது நாம் தலைப்பில் குறித்துள்ள தெய்வவாழ்த்துத் தொடரைக் கவனித்து அதன் அமைப்பை அறிந்துகொள்வோம்.  இது ஓர் அருமையான சிறந்த, மனநலம் வருவிக்கின்ற தொடராகும்.  இது தமிழிலிருந்து சென்ற தென்பதை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூறியுள்ளனர்.  அவர்கள் கூறியவற்றை இவண் எழுதுதலைத் தவிர்த்துக்கொள்வோம்.  அவற்றை அவர்களின் எழுத்துக்களில் அல்லது நூல்களில் கண்டுகொள்க.  இவர்கள் கூறிய கருத்து அல்லது சொல்லாக்க விளக்கம் எதுவும் இங்கு கைக்கொள்ளப் படவில்லை. மறுப்பதற்கு அவை மறுவாசிப்புக்கு அருகில் இல்லை.

இப்போது இத்தொடரை ஆய்வு செய்வோம்.  

நமோ  என்பது நலமோ என்பதன் இடைக்குறை.  இடைக்குறைகள் தமிழில் பெரிதும் வழங்குபவை.  இவ்விடைக்குறைகளுடன்,  பகுபதங்களில் வருவன எனப்படும் தொகுத்தல் விகாரத்தையும் அடக்கிக்கொள்ளவேண்டும்.   எ-டு:  என்னில்  >  எனில்;  தன்னில் > தனில்.   இவை தேடாமல் தரத்தக்க எளிமையன ஆகும்.

நம என்பது நலம்  அவை என்பது.   நலம் அ என்பதில்  அ என்பது சுட்டும் பன்மை விகுதியும் ஆகும். அ என்பது உரிமையும் காட்டும்: "நம".    உன கழல்கள் என்னும் தொடரில் உன் என்பதனோடு அ சேர்ந்தது. " கழல்கள் உன" என்பது வாக்கியமாய்க்  கழல்கள் உன்னவை என்று பொருள்படும்.  உன்னது என்பது ஒருமை.  வருகின்ற அன் அ என்பது வருகின்றன என்றாகி அ பன்மை குறித்தது போலுமே  ஆகும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:  பல்+ அ = பல. பல் என்பதன் பொருள் - சில என்பவற்றிலும் மிக்கவை , எண்ணிக்கையில் மிக்கவை.

ஒப்பீடு:  நலம் அல்லது நன்மை என்பதே பிறமொழிகளிலும் வணக்கம் கூறும் சொற்களாய் உள்ளன. எ-டு:  Good Morning.  (  இங்கு Good  என்பது  "காட்"  ( கடவுள்) என்ற பொருளுடையதன்று என்று இப்போது முடிவு செய்துள்ளனர் ). எனவே நலம் என்பதே இதன் பொருளாகவேண்டும்.

நலமே நலமாகும்( தன்வினை), நலமாக்கும்.(பிறவினை).

நம என்பது நலம் அவை என்று மட்டுமின்றி நம்மவை ஆகும் என்றும் இரட்டுறலாகும்.

நாராயணன் என்பவர் நீரின் அமைப்பு என்பது வேதங்கள் சொல்வது.

"நலமோ நலம் பல "  அல்லது "நலமோ நம்மவை"என்ற முழக்கமே நமோ நம.  நாராயணதே நமோ நம!

நாராய என்பது நீர் ஆய  என்பதே.  இயற்கைத் தெய்வம். இறைவன் எங்குமுளான்.  இயற்கையிற் பொதிந்து இயல்கின்றான் என்பதே தத்துவம் ஆகும். பாலில் நெய்போல் என்பது அப்பர் வாக்கு.  அது அப்பர் ( நாவுக்கரசர்) வாக்கும்  upper வாக்கும் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை: