காலண்டர் என்று நாம் சொல்லும் நாட்காட்டியைக் குறிக்கும் அதே பெயர். ஆங்கிலத்தில் எப்படி உருப்பெற்றதென்பதைத் தெரிவிக்கும் கதைகள் உள்ளன. இதற்குக் கூறப்பெறும் சொல்லாக்க விளக்கங்களில், உள்ளது எவ்வளவு, கதை எவ்வளவு என்று எளிதில் அறிய முடியவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்த கிறித்துவ பூசாரிகள் பிறையைப் பார்த்து, உரக்கக் கூவி எத்தனை நாட்கள் இம்மாதத்தில் உள்ளன, எந்தெந்த விழாக்கள் வருகின்றன என்று தெரிவிப்பார்களாம். கெலெ என்ற இந்தோ ஐரோப்பிய மூலச்சொல் கத்துதல் என்று பொருள்படும். கத்திச் சொன்னதனால் "கெலெ" என்பதிலிருந்தே இந்த நாட்காட்டிக்குப் பெயர் அமைந்தது என்று ஐரோப்பிய மொழியறிஞர்கள் கூறுவர். இப்போதுள்ள ஆங்கிலத்தில் "கால்" என்பதும் அழைப்பது, ஒலி எழுப்புவது என்றே பொருள்படும். காகிதம், அச்சு இயந்திரம் முதலிய இல்லாத அல்லது வழக்குக்கு வராத காலத்தில் இது அவர்கள் கூறுகிறபடி நடைபெற்றுச் சொல் அமைந்திருக்கலாம்.
தமிழில் இதற்கு முன்பே "கலித்தல்" என்ற சொல் வழக்கில் இருந்தது. இந்தக் "கெலே" என்பது இந்தோ ஐரோப்பியத்தில் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இச்சொல் கலித்தல் வினையிலிருந்து அயலில் சென்று வழங்கியிருத்தல் தெளிவு..
கலித்தல் - பொருள்: ஒலித்தல்.
இலத்தீனில் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டு: கல்குலஸ். தமிழர் கல்லைக் குலுக்கிப் போட்டுக் கணக்குப் பார்த்தபடியால், அதிலிருந்து "கணக்கு" என்று பொருள்படும் கல்குலஸ் என்ற சொல் உருவெடுத்தது. எண்களை (1-9 & 0 ) வழங்கியவர்களும் இந்தியர்களே என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாறு.
பஞ்சாங்கம் இருந்தபடியாலும் அதிலிருந்து நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டதாலும் நாளை மட்டும் அறிவதற்கு ஒரு தனி ஏடு முன்னர் ஏற்படவில்லை. ஐந்து அடங்கிய ஏடு பஞ்சாங்கம்.
ஒரு நாளுக்கு ஒன்றாகக் கிழித்து நாளை அறியும் ஏடுகள் வந்த பொழுது, தமிழர் அதனைக் காலத்தைக் கண்டுபிடிக்கும் ஏடு என்ற பொருளில் " காலகண்டர்" என்றனர் . கண்டு கண்டாகக் காலம் கணிக்கப்பட்டது எனினுமாம். இது காலண்டர் என்பதனுடன் ஒலியொற்றியது போலிருப்பினும், இது வேறு சொல்லே என்றறிக.
காலே என்ற இந்தோ ஐரோப்பிய மூலத்தையும் தமிழே வழங்கியுள்ளது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக