ஒரு நாட்டில் எதிர்கட்சிகள் கூடி மக்களாட்சித் தன்மை அழிந்துவருகிறது என்று ஓலமிட்டனர்.
நாட்டில் ஒரே எமன் இருந்தால் அது சரியில்லை. ஒரே எமன் எல்லாவற்றையும் முடிவு செய்வது போல இருப்பதால் மக்களாட்சி முறைக்கு அது எதிர்த்தன்மை உடையது என்று எதிர்க்கட்சிகள் முழங்கின.
எதற்கும் ஒரு மாற்று மருந்து இருக்கவேண்டுமே!
சரி, ஒரு குழுவை அமைத்து நாட்டை நடத்துவோம். ஒரே எமன் போய் ஒரு நாட்டை ஆளுவது போல் இல்லாமல் எமக்குழு ஒன்று ஆட்சியில் இருப்பதுபோல் இருந்தால் எந்த உயிரை எப்போது வாங்குவது என்று எளிதாகவே முடிவு செய்து விடலாம். எல்லா உயிர்களும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும்.
செய்தியாளர்களுக்கு இது மாறுபாடாகத் தோன்றியது. ஒரே எமன் நடமாடுவதையே இப்போது செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஒரு குழு நடமாடினால் எம நடமாட்டம் பல மடங்காக அல்லவோ கூடிப்போகும்?
இப்படி அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
குழு எமன்`களா அல்லது ஒற்றை எமனா என்று பரிந்துரை செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்கள்.
எமன் அமைப்பில் மக்களாட்சித் தன்மை இல்லைதான். என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை. பல எமன்`கள் முறைக்கு எப்படி வாக்களிப்பது என்று மக்களுக்கும் மருட்சியாகவே இருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக