கெடார்நாத் என்பது இந்தியாவில் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஒரு மலை நகரம் ஆகும். இங்குத்தான் கெடார்நாதன் கோவில் உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே. இந்தக் கோவிலுக்கு யாம் சென்றதில்லை என்றாலும் சென்றுவந்த ஒரு பற்றரான நண்பரிடம் அக்கோவிலைப்பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன். தமிழ் நூல்கள்: "கற்றிலனாயினும் கேட்க" என்று சொல்கின்றபடியினால் போய் அறியாவிட்டாலும் இந்த சிவத்தலத்தை அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சியே ஆகும்.
கெடார் என்பது பயிர்விளையும் நிலம் என்று பொருள்படும் என்று கூறுகிறார்கள். ஆன்மிகப் பயிரை வளர்க்குமிடம் என்று இதற்குப் பொருள் கூறுவர். கெடார என்ற சங்கதச் சொல்லைச் சுட்டிக்காட்டுவர். இச்சொல் சமத்கிருதத்துக்கு முந்திய பாகத ( பிராகிருத ) மொழிகளிலும் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் பாகதங்களிலிருந்தே சங்கதம் திருத்தி அமைக்கப்பட்ட மொழி ஆகும்.
2013ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த நகர் அழிந்து பல்லாயிரவர் மாண்டுவிட்டாலும், கோவில் மட்டும் அழிவின்றித் தப்பியது ஒரு வியப்பே ஆகும். இங்கு மந்தாகினி என்ற ஓர் ஆறு ஓடுகிறது. குளிர்காலத்தில் இங்கு வாழ்வோர் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்துவிடுவர் என்று அறிகிறோம்.
கேட்டறிந்த செய்திகளைக் கொண்டு யாம் ஒரு கவிதை எழுதி வெளியிட்டோம். 12 வரிகள் உள்ள அந்தக் கவிதையில் நான்'கு வரிகளே இப்போது நினைவில் உள்ளன. பிற அழிந்தன.
இந்த சிவத்தலத்தைப் பற்றிய அந்த நான்'கு வரிகள் வருமாறு:
ஆதிசங்கரர் அமைகல் உடையது கெடார் நாத--நகர்;
ஓதி எங்கணும் பரந்தஒளிச்சிவம் விடார் மூத--றிஞர்
யாது வந்து மந்தாகினி கரைப்புனல் அடாக் கீழு---தலால்
மோதிச் சாயவும் முனைவர் அரன்'தனை தொழார் அமைந்திலரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக