சிப்பந்திகள் முற்காலத்தில் தனியாய்ச் செயல்படாமல் தம் வேலைத்தலைவரைப் பற்றியவாறே சென்றுள்ளனர் என்பது சொல்லாய்வின் மூலம் அறிந்ததாகும். எடுபிடி என்பார் போலவேதாம். எடுபிடிகள் ஏவுவாரை ஒட்டியவாறே நின்று உத்தரவுகளைப் பெற்றுச் செயலாற்றவேண்டும். சிப்பந்தியரும் அன்னவரே ஆவர்.
இதில் நாம் உணர்தற்கு முன்மையான சொல் பந்தி என்பதே.
பலர் இருந்து உண்பதே பந்தி.
பல் > பன் > பன் தி > பந்தி ஆம்.
முந்தி பிந்தி என்ற சொற்கள் போலவே இதுவும். முன் தி : முந்தி; பின் தி: பிந்தி.
மந்தி என்பதும் அன்னதாம்.
மன் - மனிதன் என்பதன் அடிச்சொல்.
மன் தி > மந்தி. மனிதன் போன்ற விலங்கு.
பல் என்பதில் இறுதி லகர ஒற்று -னகர ஒற்றாக மாறும்.
பல் > பன். இவ்வாறு சொற்புணர்ச்சியிலன்றி சொல்லும் தனியாய் மாறும்.
எடுத்துக்காட்டு: திறல் > திறன்.
ஆகப் பல் என்ற பன்மைக் கருத்தினின்றே பந்தி வந்துள்ளதென்பது மெய்ப்பிக்கப்பட்டது.
பண்டை நாட்களில் பந்துகள் பல கயிற்றுப் பிடிப்புகளால் உருவானவை ஆம்.
பல் > பன் > பந்து. இப்போது தேய்வையால் பந்துகள் உருவாகின்றன.
பல் என்பது பிடித்துக்கொள்ளுதலையும் குறிக்கும்.
பல் > பன் > பன் து அம் = பந்தம். மணவுறவுகளால் பற்றுடையராதல். உறவால் பலராதல். ஒன்றை இன்னொன்று பற்றுவதானால் அது ஒருமையில் நடவாது; பன்மை வேண்டுமாதலின் பந்தம் போலும் சொற்களில் பன்மைக் கருத்து உள்ளிலங்குவதாகும்.
சிப்பந்தி என்பதில் சில் பல் இரண்டுமுண்டு. சில் என்பது சி என்று கடைக்குறை ஆனதென்றும் கொள்ளலாம்; அன்றிச் சில் + பந்தி > சிற்பந்தி > சிப்பந்தி என்று திரிபென்றும் கொள்ளலாம். இருவழிகளும் நன்றே.
இவை முன் சற்று வேறு விதமாக விளக்கப்படினும் ஒன்றென்றே அறிக.
எழுத்துப் பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக