திங்கள், 5 மே, 2014

வே > வி

முன் இடுகையில் வே > வி திரிபு பற்றி கண்டோம்.  வே> வி என்று திரியும் என்பது வி > வே என்று திரியும் என்றும் பொருள்படும். மக்கள் சொற்களை பலுககுவதற்கு எது எளிதானது என்பதைப் பொறுத்தே இத்திரிபுகள் அமைகின்றன.

இனி இன்னோரு திரிபு கண்போம்.

வேண்டல்  - விண்ணப்பம் என்பவை ஏறத்தாழ ஒரே பொருளுடையவை.
வேண்டல் என்பதில்  அல்  இறுதி நிலை அல்லது விகுதியாய் நிற்கின்றது.
விண்ணப்பம் என்பதோ,   விண் என்பதுடன் "அப்பு+ அம்  " என்பனவும் உள்ளன.அப்பு  என்பது அனுப்பு என்பதன் இடைக்குறை போல் தோன்றுகிறது. அன்றி, அப்பு -  ஒட்டு என்று பொருள் கொண்டாலும் இழுக்கில்லை.

 விகுதி ஆய்வை விட வேண் > விண் என்பதே நாம் ஆயப் புகுந்தது.

வேண் என்பதில் உள்ள  பொருண்மை விண் என்பதில் இல்லை  ஆதலினால்,அப்பு (அனுப்பு ) என்ற இடை நிலை
  தேவைப்பட்டது போலும்.

வே > வி  திரிபுக்கு இது  நல்ல உதாரணம் ஆம்.  

கருத்துகள் இல்லை: