செவ்வாய், 27 மே, 2014

தைரியம்

தையல் என்பது அடிப்படையில் ஒன்றில் மற்றொன்றைப் பிணைத்தல், இணைத்தல் என்றெல்லாம்  பொருள்படும்.  துணிகளை இணைத்து ஆடைகளை உருவாக்கும் கலையை இது   இன்று குறிக்கிறது. தையலூசி. தையற்பொறி, தையல் இயந்திரம் என்பன அக்கலைக்குரிய துணைக்கருவிகள்.

ஒன்றில் மற்றொன்று இணையும்போது, அவை ஒன்றாகி மேலும் திடம்பெறுவன ஆகின்றன.

சிவனுடன் இனைந்து ஒன்றாகிப்   பேராற்றல் ஆகிவிட்ட நாயகி, தையல் நாயகி ஆகின்றாள். உறையூற்றித் திடமாகிவிட்ட  காய்ச்சிய பால் "தயிர்" ஆகிறது.

தை > தய் > தயிர்.

இது: பை > பய் >பயிர் என்ற  அமைப்பினைப் பின் பற்றியது.
      பை > பய் > பயல்.  (அல் விகுதி).
      மை > மய் > மயல்.  (அல்)  மை > மையல் எனினுமாம்.

பை -  இளமை . பை > பயல்.  பை < பையன்.

மனத்தில் உறுதி வந்தினைந்தால்,  தை > இரு+ இயம் = தைரியம் ஆகும்.
இகரம் கெட்டு "ரி" ஆனது.   :இரு+ இயம் > இரியம்>  ரியம்..


இதைத் தைரியம்  (dhairiyam)   என்று எடுத்தொலிக்க   வேண் டாம்.

தைரியம் :  திட இணைப்பு என்று பொருள்படும்.

கருத்துகள் இல்லை: