வியாழன், 29 மே, 2014

முஸ்தீபு:

இப்போது முஸ்தீபு என்ற சொல்லை அணுக்கமாக ஆராய்வோம்.

சொல்லைப் பார்த்தாலே.........கேட்டாலே தெரிகிறது அது தமிழாக இருக்க முடியாதென்று.  எப்படி?  "ஸ்" வருகிறதே,  தமிழில் "ஸ்" ஒலி இல்லையே!
"ஸ்"  வருமாயின் உறுதியாகச் சொல்வேன்,  அது தமிழன்று என்று.

இருக்கட்டும்.இந்தச் சொல்லை அமைத்தவரை நாம் பாராட்ட   வேண்டும். முஸ்தீபு என்பதென்ன என்று சொல்ல வேண்டுமாயின், முன்னரே தயார்ப்படுத்துதல் என்று சொன்னால் ஏறக்குறையச் சரியாகவிருக்கும்.

இந்தச் சொல் இப்போது அவ்வளவாக  வழங்கவில்லை. ஒரு 40 /50 ஆண்டுகளின்  முன் வெளிவந்த சில புத்த‌க‌ங்கள் தாளிகைகளில் கிடைக்கும்.

முஸ்தீபு:

மு  <  முன்.
தீ   <  தீட்டுதல்.
பு    ‍  விகுதி.

மு+தீ +பு  =  முத்தீபு.    இப்படியே விட்டிருந்தால் அழகிய தமிழ்க் குறுக்கச் சொல்லாக அமைந்து தமிழை அழகுபடுத்திக்கொண்டு இருந்திருக்கும்.

ஆனால், அமைத்தவருக்கு மன நிறைவில்லை.

ஆகவே சொல்லை அழகு படுத்தவேண்டுமே!  Polish it!

முத்தீபு >  முஸ்தீபு.

இப்போது மிக நன்றாக அமைந்துவிட்டதே!.


தமிழ் வாத்தியார்  இது என்ன சொல் என்று கேட்டால், இந்தி , உருது என்று எதையாவது சொல்லிவிடலாம். யாராவது அதை அவர்கள் சொல் என்று சொல்லாமல்  -  ஏற்காமல்  போய்விடுவாரோ! போதிய சொற்கள் இல்லாமல் எத்தனையோ மொழிகள் தவித்துக் கொண்டிருக்கும்போது.....

கருத்துகள் இல்லை: