உருவம் என்பது ரூபம் என்று மாறி. இறுதியில் ரூப என்றானது.
அ, இ,உ என்று முச்சுட்டுக்களில், உ என்பது முன் தோன்றுதலையும் குறிக்கும். பிற அர்த்தங்களும் உளவெனினும் அவை இப்போது கிடக்கட்டும்.
உருத்தல் : முன் தோன்றுதல்.
உரு + அம் = உருவம். வகர உடம்படு மெய் பெற்றது.
வழக்கம்போல், வ > ப என்று திரிந்து, தலை "உ" தொலைந்து, ருகரம் ரூகாரம் ஆகி, ரூப , ரூபா என்ற சொற்கள் அமைந்தன. இது மகிழ்வு தரும் விளைவுதான்.
பேச்சு வழக்கில் உருவம் என்பது ரூப என்று திரிவதில்லை. வேறு சொற்களில் தலை போவது கண்ட பண்டிதன்மார், இது புனைந்தனரென்றே சொல்லத்தகும்.
இந்தோ ஐரோப்பியத்தில் ரூப உள்ளதா என்று நீங்கள் தேடிப்பார்த்துச் சொல்லலாமே!

"ஊழ்வினை உருத்து வந்தூட்டும்"
( சிலப்பதிகாரம் ).
உரு + அம் = உருவம். வகர உடம்படு மெய் பெற்றது.
வழக்கம்போல், வ > ப என்று திரிந்து, தலை "உ" தொலைந்து, ருகரம் ரூகாரம் ஆகி, ரூப , ரூபா என்ற சொற்கள் அமைந்தன. இது மகிழ்வு தரும் விளைவுதான்.
பேச்சு வழக்கில் உருவம் என்பது ரூப என்று திரிவதில்லை. வேறு சொற்களில் தலை போவது கண்ட பண்டிதன்மார், இது புனைந்தனரென்றே சொல்லத்தகும்.
இந்தோ ஐரோப்பியத்தில் ரூப உள்ளதா என்று நீங்கள் தேடிப்பார்த்துச் சொல்லலாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக