தேநீர் செயும்பையன் என்றார் அவர்மொழியின்
வீணீர்மை விண்ணெரி தீ. (1)
எடுபடாப் புன்மொழி எங்கும் இயம்பிக்
கெடுபடல் காத்தல் கடன். (2)
யாவரும் மன்னரே மக்கள் ஆள் மாண்பினில்
தேதரும் தீதிலார் காண். (3)
பொருள் :
இது பிரதம மந்திரி மோடி அவர்களைப் பற்றிய சில வரிகள்.
1. தே நீர் = tea. செயும் = செய்யும். வீணீர்மை = வீண் தன்மை . விண்ணெரி = ஆகாயத்தில் எரிகின்ற நெருப்பு போன்றது. ஆகவே வீண் பேச்சு என்பது எல்லோருக்கும் தெரியும் .
2 எடுபடா = மக்கள் ஏற்க முடியாத . புன்மொழி = கீழ்த் தரமான பேச்சு . இயம்பி - சொல்லித் திரிந்து. கெடுபடல் = தீமையுட் படுதல். காத்தல் = (கேடின்றிக்) காத்துக் . கொள்ளுதல். கடன் = கடமை.
3.யாவரும் = எல்லாக் குடிமக்களும் . மக்கள் ஆள் = மக்கள் ஆட்சி (செய்யும்)
தே தரும் - தே நீர் விற்கும் . தீதிலார் = தீமை இல்லாதவர்கள்.
Even with the revelation that Mr Modi was a tea boy and that he was marred but not with his wife now, the Congress still lost.
`
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக