எம் "சொல்" எழுதி எதையும் சேமிக்கமுடியாது என்று போராடிக்கொண்டிருக்கிறது. தமியேம் யாது செய்வேம் இப்போது?
கணினியை நிறுத்தி வைக்குமுன் உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அது கட்டுரையாக வராமல் ஒரு கவிதையாக வந்துவிட்டது. கண்டமாதிரி வரைந்துள்ளேம், கண்டுமகிழவும்.
கணினியை நிறுத்தி வைக்குமுன் உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அது கட்டுரையாக வராமல் ஒரு கவிதையாக வந்துவிட்டது. கண்டமாதிரி வரைந்துள்ளேம், கண்டுமகிழவும்.
சொல்லென்னும்
எழுதிக்குச் சோர்வு தோன்றி
சூழ்ந்தெழுதும்
அனைத்தையும் சேமிக் காமல்
ஒல்லேதான்
குவித்திட்ட குப்பை மேட்டில்
ஒதுக்கியவை
அழித்தற்கு முன்னிற் கின்ற
நல்லதலா
நடப்பைத்தான் மேற்கொண் டாடி
நலிவிலெமைஅழுத்திற்றே என்செய்கோ யாம்?
வல்லவொரு
கணினிசார் மேதை தன்னை
வரவழைக்கக்
கலிதானும் வந்த தாமோ?
எழுதி : எழுதும் மென்பொருள்
சொல்லென்னும் எழுதி:
The word processor known as MS WORD
சோர்வு: failing to function; giving error messages.
சொல்லென்னும் எழுதி:
The word processor known as MS WORD
சோர்வு: failing to function; giving error messages.
சூழ்ந்து : யோசித்து
ஒல்லே = விரைந்து
நலிவு : துன்பம்
செய்கோ : செய்வேம்
கலி : பேரிடர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக