சனி, 2 ஜூன், 2018

சுகஸ்த சுவச்ச என்னும் சொற்கள்.

உலகில் ஒருபொருட் பலசொற்கள் மிகுதியாய் உள்ள மொழிகளில்
சமஸ்கிருதம் மேல் நிலையில் உள்ளதென்று தெரிகிறது. ஒருபொருள் குறித்த சொற்கள் ஏராளமாக உள்ளன.  கவிதையோ கட்டுரையோ எழுதவேண்டுமென்றால் சொற்களை எளிதில் கொள்ளப்பெறலாம்.
இதனை மொழிவளம் என்பர்.

தமிழிலும் இத்தகைய சொற்கள் உள்ளன.

சுஸ்த,  சுஸ்தித,   ஸ்வச்ச, விரோக என்று பல காணப்படும் சமஸ்கிருதத்தில்
உள்ள சொற்களைப் பார்ப்போம்.

உகத்தல் என்பது தமிழ் வினைச்சொல்.  இதிலிருந்து உகந்த  ( விரும்பத்தக்க) என்ற வினை எச்சம் வந்துள்ளது காணலாம்.  நோயின்மையே உடலுக்கு உகந்த நிலை.    இதிலிருந்து :   உகந்த >  சுகந்த என்ற சொல்  அமைந்தது.

சுகந்த மணம் தரும் ஊதுபத்தி என்று விளம்பரத்தில் எழுதுவர்.  அகரத்திலிருந்த அதன் வருக்க இறுதிகாறும் உள்ள எழுத்துக்களில் ஒன்றை முதலாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சொல்,  அதற்கேற்ற சகர வருக்கமாகத் திரியும் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது.   உகரத்துக்கு ஏற்றது சுகரம்.  ஆகவே உகந்த என்பது சுகந்த என்றாயிற்று.

வேறு எடுத்துக்காட்டுகள்:

அடுதல் என்றால் நெருப்பில் வைத்துச் சமைத்தலாகும்.   இதிலிருந்து அட்டி என்று சொல் அமைந்து    திரிந்து சட்டி ஆனது, சட்டுவம் என்பதும் இதிலிருந்து  அமைந்ததே.   அடு> சடு>  சட்டி.  அடு>  அட்டுவம்>  சட்டுவம்,

அமணர் >  சமணர்.

இறுதி வடிவங்கள் அமைந்து வழக்கில் வந்தபின்   இடைநிலை வடிவங்கள் மறைதல் பெரிதும் உண்மையாகும்.

இனி,  உக  >  சுக >   சுகம்.

சுக >  சுகத்த > சுகஸ்த >  சுஸ்த.  ( ககர மறைவு_)

சுக >  சுகத்து  இது  அ   >    சுகத்தித  >  சுகஸ்தித > சுஸ்தித.

சுக >   சுகத்த  >  சுவத்த >  சுவச்ச.

இவையெல்லாம் காட்டப்பெற்ற மூலங்களினின்று  வளப்பிக்கப்பட்டவை.

நலம் அல்லது சுகம் ( < உக : உகத்தல்)  குறிக்கும் வேறுசொற்கள்::

அகடம் :   கடு (கடுமை);  கடு> கடம்;   அல் > அ:  அல்லாதது.    அகடம்:
கடுமையல்லாத நிலை;  அகடம் -  உடல் நலம்.

அனாமயா:     அன் +  மாய.     அன் < அல் (அல்லாதது).   லகரனகரப் பரிமாற்றம்.
மாய்தல்; மாய:  இறத்தல், அழிதல்.    அன்+ஆ+  மய.  மாய என்பது மய என்று
குறுகுதல்.  ஆ=  ஆகுதல்.       மாய்தல் அல்லாததாகுதல்.  ஆகவே சுகமான நிலை.

கல்ய  =  நலம்.    கல்லுதல்: தோண்டி அல்லது முயன்று மேற்கொள்வது.
கல்+ய்+ அம் =  கல்ய.   அம்= அ (  மகரம் கெடுதல் ). 

க்ஷேம்ய :  நலம்.   ஏம் =  பாதுகாப்பு.  ஏல் > ஏம். (பழந்தமிழ்ச் சொல்).  ஏற்ற நிலை.  ஏல் >ஏற்ற (ஏல்+து+அ).   லகரமகரப் பரிமாற்றம்.   ஏமம்>சேமம்> 
க்ஷேமம்.

இன்னும் பல.  பின்னர் இடுவோம்.   



கருத்துகள் இல்லை: