இலவசம் என்ற சொல்லை மறுநோக்குச் செய்வோம்.
இது இலாவண்யம் என்ற சொல்லை ஒத்த பாணியில் பின்னாளில் ஆக்கப்பட்ட சொல்லே ஆகும்,
இலாவண்யம் என்பது "ஊரில் இல்லாத அணியை உடையது" என்று பொருள்படும். அணி என்பது அழகு ஆகும்.
இலாவணியம் என்பது இலாவண்யம் என்றும் தன் தலை இழந்து லாவண்யம் என்றும் பெயரானது, ஈண்டு இறுதியில் வரும் யா என்ற இறுதி, ஆயா(ள்) என்பதன் முதற்குறை, இங்கு ஈற்றில் வந்தது, அம் விகுதி பெறாது வரின், யா என்று முடிந்து பெண்பெயராகும்.
விலைவசமும் இலவசமும்
விலைவசமும் இலவசமும்
இலவசம் என்பது விலையின்றி வசமாவது என்று பொருள்தரும், இல - விலை கடன் முதலியன இலவாக; வசம் - ஒருவற்கு வசப்படுவது. ஆகவே இலவசமாயிற்று.
லாவணியம் என்பது இகரம் இழந்தமை போல, இலவசமென்பது தன் தலையை இழக்கவில்லை.
இந்தியத் தேர்தல்களின்போது " இலவசம்" என்ற சொல் பெரிதும் வழங்கியது,
நுழைவு இலவசம், அனுமதி இலவசம் என்பன காண்க.
அனுமதி என்பதில் அனு என்பது அண் என்ற சொல்லிற் பிறந்தது. அனு எனில் அண்மி நிற்பது. திரிபுச் சொல். அனுபந்தம் என்ற சொல்லில் இதன்பொருள் தெளிவாகிறது. அணுகிப் பற்றி நிற்கும் பகுதி. மதி என்பது ஏற்றுக்கொள்ளுதல் குறிக்க ஆளப்படுகின்ற சொல். அண்மி வர ஏற்பதென்பது பொருள்.
அண்மி வருகையில் சரி என்று ஏற்பது அனு + சரி + அணை. சரி என்பதில் இகரம் கெட்டது. அனுசரணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக