ஞாயிறு, 2 ஜனவரி, 2022

நந்தன், நந்தி.

 எதற்கும் ஒரு நல்ல பெயரிட்டு அழைப்பதென்றால்,  பிற சொற்களைத் தேடித் திரிவதைவிட,  நல் -   நன் என்ற அடிச்சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதும் சொல்லமைத்துக்கொள்வதும் ஒரு திறன் என்றே சொல்லவேண்டும். உங்கள் தம்பி நல்லவன் என்று குறிப்பிட அவனை நல்லதம்பி என்றே சொல்லலாம். நல்லிளவல் என்று சொல்லலாம் என்றாலும் இளவல் என்ற சொல் சற்றுக் கடினமானது என்று சிலர் கருதுவர்.

விகுதிகளில் பழையது அல் விகுதி. இது வினையிலும் அல்லாதனவிலும் வரும்.  மணல் என்பதில் அல் விகுதி உள்ளது.   மண்+ அல் >  மணல் என்று வரும்.  மணல் என்பதற்கு மண் என்ற சொல்லையே எடுத்து, அல் விகுதி யிட்டு, மணல் என்ற சொல்லைப் படைத்துக்கொண்ட தமிழன் சொல்லமைப்பில் திறன்பல கொண்டோன் ஆவான். வட்டமாகவும் நெடிதாகவும் கூடி அமைந்த ஒன்றை குழல் என்று அல் விகுதியுடனே அமைத்ததும் திறனே.  கு என்பது வட்டமாய்ச் சுற்றிவந்து சேர்ந்ததைக் குறிக்கிறது. கு என்பது சேர்ந்துள்ள அனைத்துக்கும் நல்ல துவக்கமான தலை எழுத்து.   கு> குழு> குழல்..  தாயுடன் கூடித் திரிவது குட்டி.  கு> குடு> குட்டி.   இதிற் சிறுமைக் கருத்தும் உள்ளது.  மறைவுநிலையுடன் கூடி உள்ளிருப்பது குட்டு. இவற்றிலெல்லாம் கூடியிருத்தற்  கருத்து நிலைபெற்றுள்ளது.

அல் விகுதியே  பின்னர் அன் என்றும் ஆனது.  லகரம் 0னகரமாகும்.  எடுத்துக்காட்டு:  திறல் >  திறன்.  இதைப்போலவே, நல் என்பதும் நன் என்றாகும்.  மற்றும் சில எழுத்துக்களின் புணர்ச்சியிலும் ல் என்பது 0ன் ஆகும்.

நல் >  நன் > நந்தி.  

நல் > நன் > நந்தன்.

நல் > நன் > நந்துதல் ( நன்மையாதல், இச்சொல் கெடுதற்பொருளிலும் வரும்.  இதைப் பின்னொருகால் விளக்குவோம். )

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: