(பஃறொடை)
எந்தநன் னாளும் எமக்கினிய நன்னாளே
சொந்தவே லைகளைச் சூழ்ந்து முடித்தபின்
நாலுமணி மாலையில் நல்ல படியமர்ந்து,
காலுகை கட்குக் கருதியே ஓய்வுதந்து,
நல்ல கொழுந்துநீர் யாம்விழையும் சிற்றுண்டி
வெல்லம் இலாதபடி உண்டு மகிழ்வேமே.
இங்குப் படத்தில் மகிழ்வீர் இதுகண்டு
பங்குபெற வாரீர் விரைந்து.
கொழுந்துநீர் - தேநீர்.
எந்த நன்னாளும் -மானிடர்க்கு இடரில்லா எந்த நாளும்
எமக்கினிய நன்னாளே - எமக்கும் இனிமைதரும் நல்ல நாள்தான்.
சூழ்ந்து - ஆலோசித்து. சூழ்தல் - ஆலோசனை செய்தல்.
மகிழ்வேமே = மகிழ்வோமே
ஏம் வரின் எம்மனோரை மட்டும் உளப்படுத்தும்.
முன்னிலையாரை உளப்படுத்தாத முற்றுவினை.
இங்குப் படத்தில் மகிழ்வீர் இதுகண்டு -- இதை "இங்கு
படத்தில் இது கண்டுமகிழ்வீர் " என்று உரைநடையாக்கிக்கொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக