தமிழ்மொழியின் சொற்களில் கடை, இடை, முதலெனக் குறைந்து விட்டாலும் முழுச்சொற்கள் போல் வழங்கிய சொற்கள் பலவாகும். இவற்றை யாம் கணக்கெடுக்கவில்லை என்றாலும், இங்கு ஆய்ந்து வெளிபடுத்தியுள்ள பலவான சொற்களிலிருந்து நாம் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இயன்மொழியாகிய தமிழில் இயற்சொற்களே மிகுதி என்று யாம் நினைக்கின்றோம். எண்ணிக்கை செய்து பார்க்கவில்லை.
கம்பி என்ற சொல்லும் இடைக்குறையே எனினும் இது தெரிவிக்கப்படுவதில்லை. கம்பிகள் பெரும்பாலும் கடியவை. அதாவது வெகுதிட்பம் உடையவை, இவற்றை வளைக்க இயலும் என்றாலும்!
கடு எனபதே அடிச்சொல் ஆகும்.
கடு > க ( கடைக்குறை) > க + பி (விகுதி) > கம்பி என்று காட்டலாம்.
கடு > க > கப்பி ( இது சாலையைக் கெட்டிப்பதற்காக இடப்படும் கடுங்குழைவு ). இதை இட்டு உண்டாக்கிய சாலை: கப்பிச்சாலை.
இதனைப் பின்வருமாறும் காட்டலாம்:
கடு > கடும்பி > கம்பி.
கடு > கடுப்பி > கப்பி.
வல்லெழுத்துக்கள் மறைவுறும் என்பது முன்னர் இடுகைகளில் கூறப்பட்டுள்ளது.
பீடு > பீடு+ மன் (அன்) > பீடுமன் >பீமன். பின்னர் வீமன்.
(பீடுடைய மன்னன்).
அடங்கு > அடங்கு+ அம் > அடங்கம் > அங்கம்.
உள்ளுறுப்புகள் அடங்கிய வெளி மேனி அல்லது உடல்.
கடத்தல் ( கடல் கடத்தல்) > கடப்பு + அல் > கடப்பல் > கப்பல்.
இங்கும் வல்லொலி மறைந்தது.
விழு+ பீடு+ அண் + அன் > விபீடணன் > ( விபீஷணன் ).
(விழுமிய பீடுடைய மன்னன்).
கப்பி என்பது ஓர் இருபிறப்பி. சல்லிக்கற்கள் சாலையில் மேற்பகுதியை மூடிக்கொள்வதால் கப்பி ( கப்புதல் > கப்பி) எனினுமாம்.
சமத்கிருதமென்பது, வால்மிகி முனிவர் முதலில் கவி இயற்றிய மொழி. பின்னர் வியாசன் என்ற மீனவர். பாணினி என்போன் ஒரு பாணப்புலவன்.
பிராமணர் கவி இயற்றிய மொழி தமிழ். தொல்காப்பியர் பிராமணர். அகத்தியனாரும் பிராமணர் என்பர். சமத்கிருதம் தென்னாட்டில் உருவான மொழி என்பர். அதன் செல்வத்தில் பங்குகொள்ளவே மேல்நாட்டினர் அதை இந்தோ ஐரோப்பிய மொழி என்றனர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக