தியாகம் என்ற சொல்லை மறுபார்வை செய்தறிவோம்.
தீயாகம் என்பதே குறுகித் தியாகம் என்றானது என்பது விளக்கப்பட்டது. முன் எழுதிய விளக்கம் எதுவும் மாற்றம் பெறவில்லை. அதுதான் இங்கு இன்னும் கொள்ளப்படுகிறது.
முதன்முதலாக, இது கணவன் இறக்க, மனைவியும் உடன்கட்டை ஏறிய செயல்களிலிருந்து ஏற்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இத்தகு நிகழ்வுகளில், அவள் தீயில் அழிந்துவிடுகிறாள். தொடக்கத்தில், தீயில் வெந்து மடிவதை இடக்கரடக்கலாகக் குறிப்பிடும் ஒரு வழியாக இச்சொல் ஏற்பட்டிருத்தலே நடைபெற்றிருக்கக் கூடும். நாளடைவில் பிற பொருட்களை எரித்தலையும் எதையும் கொல்லாமல் விட்டுக்கொடுத்தலையும் இது குறித்திருத்தல் தெளிவு. காதல் தியாகத்தில், விட்டுத் தரப்படுவது ஒரு மனத் தொடர்பு என்பது காணலாம். இதில் திடப்பொருள் என்பது எதுவுமில்லை.
முன் இதுபற்றி எழுதியது இவண் காண்க.
https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_60.html
தீயில் விழுந்து சாம்பலாகு என்பதையே "தீயாகு" என்பது குறிக்கிறது. அம் விகுதி இணைந்து "தியாகம்" ஆகின்றது, முதலெழுத்தும் குறுகிவிடுகிறது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக