வியாழன், 20 ஜனவரி, 2022

மைனா என்ற குருவியின் பெயர்

 இந்தச் சொல் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வழங்குகிறது.

மதனா  ( மதனன்) என்ற சொல்லைச் சமத்கிருதத்தில் கண்டு, இந்தோ ஐரோப்பிய வேர் என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் பற்றிக்கொண்ட சொல்லிலிருந்து வருகிறது என்று முடிவு செய்தனர்.

கொஞ்சம் தடம்விலகுவோம்:   உயிர்நூலார் இதற்கு வகைதெரிய வைத்த பெயரை "பற்றிரி" என்று  மொழிபெயர்க்கலாம்.  கிளைகளைக் காலால் பற்றிக்கொண்டு இருக்கும் குருவிவகை.[  ( குருவி --குரீஇ). ] ( பற்று + இரு+ இ ):  நாம் ஆங்கிலச்சொல் passerine  என்பதைக் குறிக்கிறோம்.   ஆங்கிலச்சொல் அமைந்த அதேசொல்லின் தொடக்கத்தைத் தொட்டுவிட்டது போதும். அமைப்பில் இது ஒரு காரண இடுகுறி. தாங்குதல் என்னும் வினையடியாக,  நீர் தாங்கும் ஒரு தேக்கேனத்தை,  தாங்கி என்று அமைக்கும்போது ஆங்கிலச் சொல்லையே எழுத்துப்பெயர்ப்புச் செய்துவிட்டோம் என்ற குறை எழக்கூடும்.  பற்றிரி என்ற அமைப்பில் அந்தக் குறைபாடு எழவில்லை.  

இது அழகிய ஒலிகளை எழுப்பும் ஒரு பறவை ஆகும்.

மய -  கேட்பாரை மயக்கும் தகைமை குறிக்கும் அடிச் சொல்.

நா -   இப்பறவை இத்தகை நாவை உடையது என்பது.

மய + நா > மைநா > மைனா  ஆனது.

மை > மய் > மய.  அல்லது மய > மய் > மை.

மயல் என்ற சொல் மையல் என்றும் வரும். எனவே ம - மை என்பன தொடர்பு உள்ளவை.

இன்னொரு வகையில்,  மை - மையலைத் தரும் ஒலிஎழுப்பும்,  நா- நாவை உடைய குருவி என்பது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்பு:

also mina, name given to various passerine birds of India and the East, 1769, from Hindi maina "a starling," from Sanskrit madana- "delightful, joyful," related to madati "it gladdens," literally "it bubbles," perhaps from PIE root *mad- "moist, wet" (see mast (n.2)). The "talking starling" of India is Eulabes religiosa.

இது  சரியில்லை. தமிழறியார் செய்த ஆய்வு.