அது தமிழில்லை, இது தமிழில்லை என்ற வாதம் உண்டாதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், வெள்ளைக்கார வரலாற்றாசிரியன் உருவாக்கிய "ஆரியர் இந்தியா வருகை" மற்றும் "ஆரியப் படையெடுப்பு" முதலிய தெரிவியல்களே (theories) ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின்மேல் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன, ஆனால் அவற்றிலெவையும் ஆரியர் என்போரால் நடைபெறவில்லை. மேலும் ஆரியர் என்ற பெயருக்குரிய மனிதர்கள் யாருமில்லை.
ஆர் என்பது ஒரு விகுதி. வந்தார், போனார், இருந்தார் என்பவற்றில் ஆர் வந்துள்ளன. அகத்தியனார், தொல்காப்பியனார் என்று ஆர் என்ற வணங்குரிமை பெற்ற அறிவாளிகள் பெயரிலும் ஆர் வருகின்றது. மற்றும் ஆர்தல் என்ற வினைச்சொல் உள்ள மொழி, தமிழ் ஆகும். ஆகவே நம்மொழியில் அது விகுதியுமாகிறது. வினையுமாகிறது. அரு > ஆர், கரு> கார், வரு > வார். தரு>தார் எனப்பல சொற்களில் முதலெழுத்து நீண்டு ரகர ஒற்றில் சொற்கள் முடிகின்றன. அரு என்றால் மிகுதியாய் இல்லாதது என்று பொருள். ஆளுக்கு ஆள் அகத்தியனாரைப் போல இருந்துவிட்டால் அவர்களுக்கு ஆர் என்ற பெயர் இறுதிப் பட்டம் இருக்கமுடியாது. அரியன செய்தனர், செயற்கரிய செய்தனர், அதனாலேதான் "ஆர்" என்ற இறுதிகொடுத்துச் சொல்லாக்கம் செய்கிறோம். வரலாற்றால் அரியராக எப்போதோ தோன்றுகிறார். அவர்தான் "ஆர்" என்ற ஒட்டுக்கு உரியவர். அரு> ஆர் என்ற திரிபையும் மறக்காதீர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக