திங்கள், 10 ஜனவரி, 2022

கபாலி என்ற பதம்.

 இன்று கபாலி என்ற சொல்லைச் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

கபாலி என்ற சொல்லின்பின் சமய வரலாறுகளும் பிறதொடர்புகளும் இருத்தல் கூடும். அவற்றைப் பற்றிப் பின்னர் "ஆர அமர"ச்  சிந்திக்கலாம்.    ஆர - நிறைய.  அமர -  in a settled manner or taking time and with due attention.  ஆர்தல் - நிறைதல்.

கபாலம் என்பது தலையைக் குறிக்கிறது.

மனித உடலில் கடுமை அல்லது கெட்டித் தன்மை வாய்ந்த பகுதி கபாலம்.  மற்ற உயிரினங்களிலும் இவ்வாறே பொருள்கொள்ளலாம்.  சில உயிரினங்கள், எ-டு: புழு, பூச்சி முதலியவற்றில் தலை விலங்குத் தலைபோல் கெட்டித் தன்மை இல்லாததாய் இருக்கலாம்.  இஃது இருக்கட்டும்.

கடுமைக்  கருத்து.  (கடு)

பான்மை அல்லது பகுதியாய் இருத்தல் கருத்து.  (பால்)

கடு  + பால் + அம்.

கடுபாலம்.

கடுபாலம் >  கபாலம்.  ( உடலின் கடினமான பகுதி, அல்லது பல்தொடர்புகளும் உள்ள பகுதி. )   A complex  organ or part of the body.

இப்போது வல்லின எழுத்துக்கள் இடைக்குறையில் மறையும் என்பது கூறினோம்.  பழைய இடுகைகள் காண்க.

அண்மையில் வெளியிட்ட இடுகை:

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_9.html 

உங்களுக்கு ஓர் எ-டு:

தடுத்தல் வினைச்சொல்.

தடு > தடுக்கை. (கை விகுதி பெற்ற சொல்).

தடுக்கை > ( இடைக்குறைந்து)  > தக்கை.

உள்ளீட்டினை வெளிவராமல் பாதுகாப்பது "தக்கை"  ( தடுக்கைதான், வேறென்ன?)

எனவே,  கபாலம் என்பது உடலின் கடினமான பகுதி என்பதையே   பொருளாகக் கொண்டுள்ள சொல்.  இலக்கணப் படி:  இடைக்குறை.

கபாலம் > கபாலி :  கபாலம் உடைமை அல்லது கபாலம் பயன்படுத்துநர்.

அடிச்சொல்: கள் - கடு.

கள் > காள் > காழ் > காழ்த்தல்  ( கடுமை அடைதல்).

கள் > கடு > கடுமை.  கடு> கடி.

கள் > கடு> கடி+ இன் + அம் > கடினம்.

காழ்+ பாலம் >  காபாலம் ( முதனிலை குறுகி) > கபாலம்  ( எனினுமது).

குறுகுதலுக்கு எ-டு:   தாவு > தாவு+ அம் > தவம்.  ( இல்லற நிலையினின்று துறவுக்கு மாறுதல் என்ற கருத்து).  இதற்கு வேறு திரிபு விளக்கங்களும் உள.

இவற்றினுள் பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை.  எப்படிச் சொன்னாலும்  மூலச்சொல் ஒன்றானால் பெரிதுபடுத்தப்பட மாட்டாது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை: