இச்சொல்லை ஆய்வு செய்து காண்போம். இதைச் சுருக்கமாகவே செய்துவிடலாம்.
அறுத்தல் என்பது வினைச்சொல்.
அறு + அணம் - அறணம்> (தலையிழந்து ) ரணம்.
அறுத்த புண்.
முதலெழுத்தாக றகரம் வரக்கூடாது, ரகரமும்தான் வருதல் ஆகாது. றகரத்துக்குப் பதில் ரகரம் எழுதுவதால் இலக்கண விதி காக்கப்பட்டது என்று எண்ணலாகாது.
இது மாதிரி அமைந்த இன்னொரு சொல்:
அறு + அம் + பு + அம் = அறம்பம், றம்பம் > ரம்பம்.
அறு - அறுத்தல் வினை.
அம் - அழகு ( அழகாக).
பு - இடைநிலை.
அம் - விகுதி அல்லது இறுதிநிலை.
பொருள்: அறுக்கும் வாள்.
ரணம்: சொல் இவ்வாறு மாறவே, அறணம் என்ற சொல் வழக்கிறந்து.
ரணமென்பது தலைக்குறைத் திரிபு. அறணம் என்றே எழுதி, விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் இடுக.
மொழியை ஒழுங்குறக் கையாளவில்லை என்றால், தவறான வடிவங்களே ஆட்சிசெய்யும்.
அழகாக வெட்ட, அறம்பமே வேண்டும். கோடலியால் அது ஆகாது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக