வகுப்பில் பாடத்தை நன்றாக ஒப்பிக்கவில்லை என்றால், அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவனுக்கு "முட்டை" கிடைத்ததாகக் கேலி செய்தல் இன்றும் உள்ளது. இத்தகு பயன்பாடு எல்லா இன மாணவர்களிடமும் காணப்படுவ தொன்றாம் (சீனர், மலாய்க்காரர், இந்தியர் என). ஆகவே இவ்வாறு கருதுவது உலக வழக்கு என்னலாம். எப்போதும் இவ்வாறு "முட்டைகளை" வாங்கும் மாணவனை, முட்டாள் என்றும் கூறுவதுண்டு.
ஆனால் இவ்விரண்டு சொற்களும் முட்டு என்ற சொல்லிலிருந்தே வருகின்றன.
முட்டு + ஆள் = முட்டாள்.
இஃது இரண்டு சொற்கள் ஒன்றாகிப் புனைந்த சொல்.
முட்டு + ஐ = முட்டை. (வட்டமாக இல்லாமல் ஒரு பக்கம் முட்டிக்கொண்டிருப்பது).
இங்கும் முட்டு என்றே சொல்லே நின்றது என்றாலும் சொல்லமைப்புப் பொருளில் தொடர்பு வழக்கிலிருந்து வருகின்றது.
ஆகவே முட்டை வாங்கியவன் முட்டாள் என்று சொன்னால் அது ஒத்துக்கொள்ளத் தக்கதே ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு - பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக