செவ்வாய், 30 நவம்பர், 2021

கருவி, கருத்து, கரு>கார், காரணம், காரியம்.

 இந்தச் சொற்களைப் பற்றிச் சிந்தித்துச் சிலவற்றைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனையிலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொண்டால், அதைச் சிந்தனைப் பேறு அல்லது சிந்தனைச் செல்வம் என்று குறிப்பிடலாம்.  ஒருவர் பெற்று மகிழத் தக்க பான்மைப் பொருளைத்தான் ( சிந்தனைச்) செல்வம் அல்லது (சிந்தனைப்) பேறு என்று சொல்கின்றோம்.  அரிசியை ஆக்கினால்தான் சோறு கிட்டுகிறது; அதைப் போலவே, சிந்தனை செய்தால்தான் அதிலிருந்து பெறத்தக்க நல்லது எதாவது கிடைக்கும்.

உலகின் பொருட்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. வேறு எந்த நிறம் உடையதானாலும், அதை அடுப்பில் வைத்து எரித்தவுடன், அது சற்றுக் "கருவல்" நிறத்தை அடைந்துவிடுகிறது. கருமயிர், கருமணி, கருமுரல் முதலிய சொற்களிலும், கருப்பன் என்ற சொல்லிலும், கருமை நிறமே குறிக்கப்படுகிறது. ஆனால் கருவலி என்பது மிகுந்த வலிமை என்று பொருள்படுகிறது: ஆதலின் இங்கு கரு என்ற சொல் மிகுதி குறிக்கிறது. கருமான் என்பது கொல்லனைக் குறிப்பதுடன், கலைமான், பன்றி என்ற பொருள்களையும் தருகிறது. கருமாயம் என்றால் அதிகவிலை என்று பொருள். கருப்பூரம்   என்பது நீருக்கும் நெல்லுக்கும் பெயராதலுடன்  கற்பூரத்தையும் குறிக்கிறது.  எனவே,  "கரு" என்ற சொல் முன்னிணைந்துவிட்டால், அது கருப்பு நிறத்தைத்தான் குறிக்கவேண்டுமென்பதில்லை.

முன்னைய ஆய்வுகளின்படி, கள் என்பது கறு என்பதன் மூலம்.   கல் என்பது கரு என்பதன் மூலம். இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டே நாம் சொற்கள் பலவற்றுக்குள் புகுந்து வெளிப்பட்டிருக்கிறோம்.

கரு என்பது கார் என்று திரியும்.  கார்முகில் -  கருமுகில் அல்லது கருமேகம். இவை  நிறம் குறிப்பன.  ஆனால் கரு> கார்> காரியம் என்பதில் செயல் குறிக்கப்படுகிறது.  கரு> கார்> காரணம், காரணி என்பவற்றில்,  செயலே உள்ளுறைவு ஆகும். நன்னூலில் "கருவி காரியங் கருத்தன் "(நன். 290). என்ற  நூற்பாவில் அன் விகுதி பெற்ற வடிவம் வருகின்றது.  இது கருத்தா என்று பொருடருவதே. உந்துவன் (நல்லுந்துவன் ) என்ற வடிவில் அன் விகுதி வருதல் போலும் இக் கருத்தன்.  நிலா என்பது ஆ விகுதி பெற்றுவருதல் போலும் கருத்தா.  அர் விகுதிக் கருத்தர் என்ற வடிவும் உளது.  இக் கருத்தன் எனற்பாலதற்குச்  "செயலோன்"  எனற்பாலதே பொருளாகும்.

கருத்தல் என்ற வினை எங்கும் கிட்டவில்லை என்று ஆய்வாளர்கள் சொல்வர்.  இவர்கள் தேடிப்பார்த்தவர்கள்.  கரு + அணம் >  காரணம்,  இது எவ்வாறு எனில், ஒரு+ உயிர் > ஓருயிர் என்பதுபோலுமே திரிபன்றி வேறில்லை. ருகரத்தின்முன் உயிர்வர, முதனிலை நீண்டது காண்க.

கருவி என்பது எந்த நிறத்திலும் இருக்கலாம், கருத்துக்கு நிறம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், காரியம் என்பவற்றில் கருமை ஏதுமில்லை.

கரி என்ற சொல்லும் உள்ளது.  இது எரிகையில் கருநிறம் அடைந்த மரக்கட்டையைக் குறிக்கும்.    கரு + இ = கரி என்பது சரியாக வருகிறது.  இங்கு கரு என்பது கருநிறம் குறிக்கிறது.

கரி என்பது கருமை நிறமுள்ள, முழுமையாய் எரிந்துவிடாத மரப்பொருளைக் குறிக்கிறது.  கருப்பாய் உள்ளமையால் பன்றிக்கும் யானைக்கும் கருமான் என்ற பெயர்.  கருமான் என்ற கொல்லன்பெயரில் மான் என்பது மகன் என்பதன் திரிபு.  யானை பன்றி என்பன குறிக்குங்கால் மா ( விலங்கு) என்ற சொல்லின் கடைமிகையே "மான்".  இதற்கு எடுத்துக்காட்டு:  கோ(த்தல்) >  கோர்(த்தல்).  கோர் என்பது மறுக்கப்பட்ட வடிவம்.

ஆனால் கரு என்பது சரு என்று திரியும்.  எடுத்துக்காட்டு: 

சருக்கம் என்பது படைப்பு என்று பொருள்படுகிறது.  அதாவது செய்யப்பட்டது.

சரு>  சார் > கார் என்று திரிதல் கூடும்.

ஆர்தல் என்ற வினை சார்தல் என்றும் திரியும்.  ஆர்தல் செய்தல், நிறைதல் என்ற பொருளில் வரும்.  அரு என்பதும் ஆர் என்று திரியத்தக்கது.

அரு> கரு>< சரு.

ஆர் > கார் >< சார்.

உயிருடன் இருந்த ஒருவன் மறைவு எய்திவிடினும் அவன் வாழ்ந்ததற்கான சான்றாக அவன் விட்டுச்சென்றவை இருத்தலேபோல்,  சரு, அரு, சார், ஆர் என்பன வாழ்கின்றன.  ஆதலின் முன் இருந்த ஆய்வாளர்கள் கரு என்பது மறைந்த வினைச்சொல் என்று மொழிந்தமையின் ஏற்புடைமை அறிந்து மகிழற் பாலதே.

எழுதருகை என்ற  மீட்டுருவாக்கத்திலிருந்து எச்சரிக்கை  என்ற தமிழ்ச்சொல் வந்ததாக முன்னர் மொழிநூலார் கூறியுள்ளனர்.  எழுதருகை போல,  கரு, என்ற மீட்புரு இனிய ஆய்வே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

 


ஞாயிறு, 28 நவம்பர், 2021

நோய்நுண்மி உருமாற்றம்

 பழைய நோய்நுண்மி பவனி முற்றவில்லை

நுழைய முந்துகிற  புதிய உருமாற்றம்!

இழையும் வாசலிலே இறுதி செயல்வேண்டும்

தழைய விடலாமோ தரணி அறிவியலார்?


அதுவே பரவிடிலோ  கதறும் உலகிற்கே

சிதைவே அன்றியினிச் சேரும் நலமுண்டோ?

முதலே நாமடைந்த முடியாத் துன்பமெலாம்

விதமாய் வரும்போது விடுதல் விளக்கேது?


நோய்நுண்மி -  வைரஸ்

உருமாற்றம் -  mutation

இழையும் - நடமாடும்

வாசல் --  அது தோன்றிய இடம்

தழைய -  அது விருத்தி அடைய ( இதற்குரிய வினைச்சொல், தழைதல். தழைத்தல் அன்று).


முதலே = முன்னர்

( இங்கு  ஏகாரம் இசைநிறை.  அதாவது ஏகாரத்துக்குப்  பொருளில்லை. முதல் - முன்பு என்று மட்டும்  பொருள் கொள்க. )

விதமாய்  - உருமாறி, வேறுவிதமாய்.

விதம் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபடுவதால் உண்டாகும். விதத்தல் என்பது வினைச்சொல். விதந்து  என்பது வினைஎச்சம். ஆகவே விதமாய் எனின், தனிநிலையாக என்று பொருள்கொள்ளவேண்டும்.

பவனி என்பது பரவு அணி > பரவணி என்பதன் இடைக்குறை.

இங்கு நடமாட்டம் என்பது பொருள்.  பரவணி > ப(ர)வணி> பவனி.

திரிபுச்சொல்.

சனி, 27 நவம்பர், 2021

பஞ்சமி என்றால் சாதிக்குறிப்பா?

 






பஞ்சமி என்ற சொல்லை இன்று தெரிந்துகொள்வோம்.

பஞ்சம் என்பது சங்கதத்தில் ஐந்து என்று பொருள்படும்.   ஐந்து என்ற தமிழ்ச்சொல்,  அஞ்சு என்று "ஊரிய" வழக்கில் திரியும்.  இது பின் ஒரு பகர ஒற்று முன்வந்து நிற்க,  அஞ்சு > பஞ்சு > பஞ்சம் என்று ஆனது.  பகர ஒற்று முன் நிற்பதாவது:  ப் + அ > ப;  ஆகவே [ப்]+ [அ]ஞ்சு - பஞ்சு ஆகும்.

பகர ஒற்று ஏன்  முன்வந்து நிற்கவேண்டும்?

"நிலந்தீ  நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"

என்று தொல்காப்பியனார் விளக்குகிறார்.  தமிழரிடமிருந்து கிரேக்கரும் உரோமானியரும் இதைத் தெரிந்துகொண்டு,  அவ்வாறே  ஐம்பூதங்களைக் கொண்டனர்.

ஆதியில் இறைவன் மட்டுமே இருந்தான்.  அவன் உலகைத் தோற்றுவிக்கப் புதியனவாக ஐந்து படைத்தான். அந்த ஐந்தும் மேலே கூறப்பட்டன.  அவன்றன் ஆணைப்படி தோன்றிய புதுமை ஐந்து.   புதியன பிறந்தனவாதலினாலும் முன்னில்லாதவை ஆதலினாலும்,  பிறப்பஞ்சு  என்றும்,  புது + அம் =  பூதம் என்றும் அவை பெயர்பெற்றன. பூதம் என்பதில் பு என்ற எழுத்து நீண்டு சொல் அமைந்தது. இஃது முதனிலை ( முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்று அமைந்த சொல்.

பிறப்பு அஞ்சும் கலந்ததே உலகம் ஆதலின் பிறப்பஞ்சம் > பிரபஞ்சம் ஆயிற்று. எல்லா மொழிகட்கும் வேண்டியாங்குச் சொற்களைத் தமிழ் வழங்கியுள்ளது.  அதிலும் பிரபஞ்சம் என்பது எளிதில் அறியக்கூடியதே.  பிறப்பஞ்சம் என்பதில் ஒரு பகர ஒற்றுக் குன்றி இடைக்குறையானது.  பின்பு, அறிந்தோ, அறியாமலோ, றகரம் ரகரமாகத் திரிபு அடைந்தது.  சொல்வரலாறு அறியாமல் திருத்துகிறவர்களும் உலகில் பலர். எழுத்தாணிக்கு, ரகரம் எளிது; றகரம் சற்று கடினம் எனலாம். கல்லில் செதுக்குவதற்கும் ரகரம் நன்று.  ஆகவே யாரையும் குறை சொல்வதற்கில்லை.  

நாளடைவில் பிறப்பஞ்சம் என்பது முதற்குறைந்து, ( இங்கு முதல் என்றது முதலசையை)  பஞ்சம் ஆயிற்று.  பஞ்சம் என்பதும் ஐந்து என்ற பொருளில் வழங்கியது.

செல்வச் சுருக்கத்தையும் செழிப்பின் தளர்வையும் குறிக்கும் பஞ்சம் ( பணமின்மை, உணவின்மை முதலியவை ) வேறு ).

இறைவன் அரு.  உருவில்லாத  செம்மையை உடையவன்.  அவனுக்குப் "பான்மை"  ( ஆண்பால் பெண்பால் ) என்பதும் இல்லை.  படைக்கப்பட்ட ஐந்தையும் கண்டுதான் அவ் அருவாகிய இறை உள்ளதை நாம் உணர்ந்துகொள்கிறோம்.  அது ஆதிப்பர சக்தி  ஆகும். இவ்வுணர்வுத் தொடரே திரிந்து "ஆதிபராசக்தி" என்றும் உணரப்பட்டது.  உடல் ஏதும் இல்லாதது ஆதிபராசக்தி யானாலும்,  ஐந்தினாலும் நாம் உணர்ந்ததனால்,  அது "பஞ்சமி" என்று உணரப்பட்டது.

ஜகத் ஜனனி, பஞ்சமி, பரமேஸ்வரி.

பரம அஞ்சு அம்  இ. > பரஞ்சமி > பஞ்சமி என்றுமாகும்.  சம் என்பது ஒன்றாதலும் குறிக்கும்.   தம்> சம்.  தம்மில் தம் வெளிப்பாடு.   இவ்வாறும் மீட்டுருவாக்கம் செய்தல் தகும். 

பரம்  -  கடவுள். தெய்வம்.

சம் -  இணைதல்.  இது தம் என்பதன் திரிபு.

இ -  இயற்றுதல் குறிக்கும் விகுதி அல்லது பெண்பால்  விகுதி.

இன்னோர் எ-டு:  இலக்குமி.  பத்தினி :  பத்தி + இன் + இ.  (பற்று> பத்து).

பஞ்சமி என்பது தெய்வப் பெயராய் இயங்குகையில் ஐந்தாம் சாதி அன்று.  மனிதன் தான் தொழில் செய்து அதனால் சாதிக்குள் இருப்பவன்.  கடவுளுக்கும் ஐந்தொழில் உண்டென்று கூறப்படினும் இந்தத் தொழிலென்ற சொல்லுக்குத் சாப்பாட்டுக்கு வேலை செய்வதாகிய தொழில் என்ற பொருள் இல்லை.    "தன்மை" அல்லது இயங்குநலம் என்பதே பொருள். அறிக.  சாப்பாடு சம்பளம் எல்லாம் கடவுளுக்கு இல்லை.  வைரஸ் என்னும் நோய்நுண்மி இப்போது அதை மெய்ப்பித்துவருகிறது. எப்படி என்பதை இங்குக் கூறவில்லை.

பிறப்பஞ்சமி >பஞ்சமி.  ஐந்து பூதங்களும் அவளுக்குள் அடக்கம் என்று உணர்ந்து நாம் அடங்கவேண்டும். முதற்குறை அதாவது முதலசைக் குறை என்று விரித்துரைக்கலாம்.

தெய்வத்துக்கு உணவு வைப்பதென்பது, நம் தற்குறித் தன்மையைத் தணித்துக்கொள்ளும் ஒரு பக்தியோகம் ஆகும்.

கவனமாய்ப் இடுகைகளைப் படித்து வந்தால் சொல்லாய்வுத் திறன் உங்களிடம் குடிகொண்டுவிடும்.

பஞ்சமி என்ற சொற்குப் பிற பொருளும் உள.  எதுபோல என்றால், மாரி என்பதற்கு மழை என்ற பொருளும் இருப்பது போல.

பிறருக்கும் விளக்குக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

 

வெள்ளி, 26 நவம்பர், 2021

இரட்டித்துப் பெயரமைதல்.

 வினையினின்று பெயர்ச்சொல் அமைதல் இவ்வாறும் நிகழும்.

எழுது என்பது எழுத்து என்று இரட்டித்து, ஒரு பெயராகிறது.

எழுது -----  எழுத்து.

பொருது -  பொருதுதல்.   இது பொருத்து என்று அமையும்.

எலும்பின் பொருத்தில் வலி ஏற்படுகின்றது என்பர்.


வியாழன், 25 நவம்பர், 2021

முதல், இலாபம், வட்டி, பொலிசை

 முதல் வட்டி என்ற சொற்கள்,  தமிழில் பொருத்தமாக அமைந்து, தம் உட்கருத்தை நன்கு தெரிவிக்கும் சொற்கள் என்று யாம் வகைப்படுத்துவோம். இவை அவ்வாறு ஒன்றையும் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் எண்ணினால் அதற்காகவும் யாம் மகிழ்வெய்துவோம். காரணம், எமக்குக் கிடைக்கும் எந்த வருமானத்திலும் அதனால் எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதுடன்,  அது உங்கள் கருத்துவன்மையையும் காட்டவல்லதாய் இருக்கிறது. சிந்திக்காமல் பின்பற்றுத லென்ப  தொரு மடமையாதலின்.

வட்டி என்பது வட்டம் என்ற சொல்லுடன் தொடர்பு உடையது.  முதலென்பதை வட்டியானது வட்டமாகச் சூழ்ந்து நிற்கின்றது,  நிலவு "கோட்டை" கட்டி வானத்துக் காய்தல் போலுமாம்.   வட்டி என்பது  முதலின் சூழ்வு என்பதானது ஓர் அணியியல் முறையில்  ---  முற்றாகவோ பகுதிப் பற்றாகவோ - -  நிற்பதுதான். These terms initially arise in a metaphoric sense. and are of figurative usage. Some of their such inclinations might have been lost over time.

தமிழ்க் கணக்காய்வாளர்,  பற்று,  பற்றுவரவு என்ற பதங்களையும் பயன்படுத்துவர்.  பற்றி நிற்கும் தொகை, பற்று ஆகும்.  அதில் வரவு கிட்டுமானால் அது பற்று வரவு எனப்படும். இதைச் செட்டியார்களின் கணக்கப் பிள்ளைகளிடன் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஆங்கிலத்தில் சிறப்பான பொருளியல் பட்டங்கள் பெற்ற  உறவினரும் நட்பினரும் உள்ளனரெனினும், அவர்கள் இப்பெயர்களின் விளக்கங்கள் (தமிழில்)  அவர்களுக்குப் பெரிதும் புரிதல் இல்லாதவை என்று கழறுகின்றனர்.

பொல் என்பதும்,  பொல்லுதல் என்ற வினையும் தொடர்புடையவை.  விரித்துரைத்தாலன்றி அவற்றின் தொடர்பு சற்று வெளிப்படையாக உணரப்படுத  லற்றவை.  ஒரு சிறு இடுகையில் ஒளிவிலிருந்து தெளிவு தோன்றாமற் போகலாம் எனினும், சிறிது முயல்வோம். பொல்லுதல் என்பது துளைத்தல் என்னும் பொருளும் ( உம் வருதலால் பிற உறைவுகளும் உளவென் றறிக).  உடைத்து.   இதிற் பிறந்த பொலிசை என்னும் சொல்லும் வட்டி என்ற பொருளில் வரும்.  முதலினின்று பகுதிபட்டு நிற்கும் இலாபம் என்றும் பொருள்படுவது.   வட்டி என்பது இலாபம் தான்.   ஆனால் அது முதலுக்குக் கிட்டும் இலாபம்.   பொருள் விலைபடுத்தப்பட்டுக் கிட்டும்  தொகை, இலாபம் என்று சொல்லப்படுகிறது.  முதல் என்பதன் பாங்கில் இல்லாத பயம் ( பயன்) இலாபம்.   இலா+ பயம் >  இலாபயம்> இலாபம்.  வலிமிகுதல் வேண்டுமென்பது வாக்கியச் சொற்புணர்ச்சியில்.  சொல்லாக்கத்தில் வலி மிகுதலால் பயன் ஒன்றும் இல்லாததுடன்,  நாத்தடை ஏற்படுத்துதலால் அது இடைக்குறையும் அல்லது தொகுப்புறும். 

சொல்லாக்கத்தில் இரு அல்லது மேற்பட்ட பாகங்கள்,  பாகப்படாமல் இணைதல் முதன்மையாகும்.  பாகங்கள் இணைகையில் பாகங்களாகவே இருத்தல் சொல்லமைப்புக்குச் சரிவருவதில்லை.  ஒருசொன்னீர்மை இன்றியமையாதது.  துரோணாச்சாரியார் வில்வித்தையில் உணர்வித்ததுபோல்  குருவியின் தலைமட்டுமே தெரியவேண்டும். இருபாகங்களில் இருபொருளும் தோன்றுமாயின் அதன் புதுப்பொருள் பெறப்படுவதில் ஊறு விளையும் என்பதறிக. 

பொலிசை என்னில், அது முதலை ஊடுருவிச் செல்வதாகிய வட்டி என்று வரையறை  செய்யலாம்.   பொலி + சை > பொலிசை.  வலிமிகாது. பொலிச்சை என்பதன்று,  பொலிசை என்பதே.  அது முதலைத் துளைத்து வருகிறது. அதாவது முதலின் எல்லாப் பாகங்களுக்கும்ம் வட்டி பெறப்படும் என்பது கருத்து. எனவே துளைத்தல், ஊடுருவுதல் யாவும் இங்குப் பொருள்தருபவை என்பது காண்க.

இதைப்  பொல்லுதல் அடியாக,  பொல்லி + இசைத்தல் என்று இட்டு,   பொல்லி இசை > பொல்லிசை > ( இடைக்குறைந்து அல்லது தொகுத்து) பொலிசை எனினும் அது.  பொலிதல்,  அழகுறுத்தல் என்று விவரித்து,  பொலிசை - முதலென்பதை அழகுபடுத்துவது என்று கூறினும் அதனால் நட்டமொன்றுமில்லை. வைத்துக்கொள்ளுங்கள்.

பாகம் என்பது பகம் என்றும் குறுகி அமையும்.   இலா + பகம் >  (முதலில் ) இல்லாத பாகம் எனினுமது. இலாபகம் > இலாபம்  ( இடைக்குறை). பயன் என்பது இதன் இரண்டாம் சொல் எனில்,  இலா பயன் =  முதலின் பகுதியல்லாத பயன்,  பயன் = பயம்,  ஆகையால்: இலா + பயம் > இலாப(ய)ம் > இலாபம். (  இடைக்குறை).   இவ்வாறு அமைதல் கண்டுகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

குறிப்பு:

இலவசம்   ( ஒப்பீட்டு  ஆய்வுக்கு)

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_30.html

புதன், 24 நவம்பர், 2021

நோய் பிற இடர் நீங்கப் பூசை


 

வெண்பா

நோய்த்தொற்று  நீங்கவும் நொய்ம்மை விலகவும்

தாய்த்தன்மை கொண்டு தளர்ந்தாரைப் ---- போய்த்தேற்றும்

சேவையன்பு  மேலோங்கி  சீர்நிதியம் காணவும்

ஆவன சேர்பூ   சனை.


நொய்ம்மை -   இன்னல்காலம்  poverty, indigence, looseness.

போய்த் தேற்றும்  -  சென்று பாதுகாக்கும்

சீர் நிதியம் காண -  பொருளாதாரம் பெருக

நிதியம் சீர் காண என உரைநடைப் படுத்திக்கொள்க.

ஆவன சேர் =  வேண்டியன விளைக்கும்

பூசனை - பூசை

( இன்னல்காலம், பேச்சுவழக்கில் கஷ்டகாலம் என்பர் )

படம் உதவியவர்:  திருவாளர்  கருணாஜீ

விருட்சம் மரம்

 விய் > விரி என்பன அடிச்சொற்கள்.  அடிச்சொற்கள் என்பவற்றுக்கு அடிப்படைப் பொருள் ஒன்றோ பலவோ இருக்கும்.   ஒன்றுக்கு மேற்பட்ட உறைவுகள் உடைய அடிச்சொற்கள் எவ்வாறு அந்நிலையை அடைந்தன என்று சிந்திக்கலாம். மனிதர்கள் சற்றுப் பெற்றுப் பெருகியபின், சிலவேளைகளில் பெரிதும் தொடர்பற்ற நிலையில் தங்கி வாழவும் நேர்ந்ததுண்டு.  எப்போதாவது கண்டுபேசித் தொடர்பு கொண்டோரும்  எப்போதும் தொடர்பு கொண்டோரென்றும் இருவாறு இவர்களைக் கூறுபடுத்தலாம். எப்போதாவது அல்லது அருகியே தொடர்பு கொண்டவர்கள் ஒரே ஒலி உடைய சொல்லை இருவேறு உள்ளுறைவில் பயன்படுத்திய நிலையில் ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டாகிவிடும்.  அதனால்தான் ஒவ்வொரு பண்டை மொழியிலும் ஒரே பொருளுடைய சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்டனவாகவும் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளனவாகவும் உருக்கொள்ள நேர்ந்தமை அரிதினுணரப் பாலனவாய் உள.  ஒரே சொல் பலவேறு வடிவங்களையும் மேற்கொண்டன.  இவ்வாறு வந்த சொற்களில்  tsai  என்ற சீனமொழிச் சொல்லும் உள்ளது.  பல்வேறு திரிபுகள் பெற்று,  அது chua என்று திரிந்துவிட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுவர்.  பாட என்ற தமிழ் எச்சவினை,  பஜ  என்று வரும் இன்னொரு திரிபுடன் தொடர்புறுத்தக் கூடியது.  ஆய்வினாலான்றி இதனை உணர்தல் குதிரைக்கொம்புதான் என்று உணர்க.

மரங்கள் வளர்ந்து மேலுயர்ந்து கொம்புகளும் கிளைகளுமாய்  இலைகளைப் பரப்பி விரிந்து நிற்பனவாகும்.  இவை கீழே வேர்களை விரித்தும் மேலே இலைகளை விரித்தும் இடம்கொள்பவை.  அதனால் அவற்றைப்  பெரிதும் "ஊறு"டைய,  உணரத்தக்க நிலையின்றி மரத்துப் போனவை என்பதால் " மரம் " என்று பெயரிட்டு வழங்கிய அதே வேளையில் வேர்களையும் இலைகளையும் விரிச்ச நிலையில் ( விரித்த நிலையில்  த - ச போலி )  அவை விரிச்சம் எனப்படுதலும் மிகமிகப்  பொருந்துதல் உடையதே  ஆம். 

விரிச்சம் என்ற சொல் திருத்தம்பெற்று விருட்சம் ஆயிற்று.  பழங்காலத்தில் "ஊரிய" (கிராமத்து)   நாப்பாட்டினை  அவ்வாறே ஏற்றல் இழிவென்ற கருத்து மேலிட்ட நிலையில் அதைத் திருத்தி விருட்சம் என்றாக்கி ஏற்றுக்கொண்டமை,  அன்றை நிலையைச் சமாளித்த உத்தியே ஆகும்.   பேரன் வளர்ந்த பின் தாத்தா இறத்தல் போல, விரிச்சம் என்பது எங்கும் வழங்கவில்லை. என்றாலும் முயலை மோப்பமிட்ட உதவியுடன் வேடன் கண்டுபிடித்தமை போல,  அதனை நாமும் மீட்டுருவாக்கம் செய்யத் தடையொன்று இலாமை உணர்க.

இதன்மூலம் மரமென்பதன் காரணமும் விருட்சமென்பதன் காரணமும் வெளிப்படுகின்றன.

 வில் என்பது விரிவு குறிக்கும் மூலம். வில்> விர்> விய் என்பன அடித்திரிபுகள். விர்> விரி;  விர்> விரு என்பன அவ்வடித் திரிபுகளின் மாற்றுகள்.  ஆகவே விரிச்சம், விருச்சம் எல்லாம் அடிப்படையில் வேறுபாடற்றவை. அக்கா தங்கைகள். நீங்கள் பயன்படுத்தும் விலை என்ற சொல்லும் விருட்சம் என்ற சொல்லும் உறவினர்கள்.

மொழிப்பெயர்களும்கூட வழக்கெல்லையும் பயன்பாடும் கருதிய கற்பனைப் பெயர்களே ஆகும்.  அவை உணர்வூட்டப் பயன்படுபவை;  ஆய்வுக்கு அத்துணைப் பயன் உடையவை ஆகமாட்டா. பயன்பாட்டு எல்லையும் தன்முனைப்பாக ஏற்பட்ட கற்பனை  ஆகவும் வாய்ப்பு உள்ளது.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


பிறக்கிணை - பிரக்ஞை

 நன்றாக இருந்த ஒருவன் மயக்கம் அடைந்துவிடுகிறான். மயக்கம் தெளிந்தவுடன், முன்னிருந்த இணையான நிலையை அடையும்போதுதான், "பிறக்கிணை"  திரும்பிவிட்டது என்று சொல்கிறோம். அதாவது,  பிறகு இணையான நிலை. 

இந்தப் பிறகு இணை என்ற தொடர் திரிந்து, பிறகு இணை > பிறக்கு இணை> பிறக்கிணை ஆயிற்று. பிறக்கிணை என்று சொல்லாமல் "பெறக்கண" என்போரும் உண்டு.

இது அயற் கற்பனை க்கு எட்டியவாறு, "பிரக்ஞை" எனப்பட்டது.  இதிலும் ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. இணை என்பது,  க் இணை > கிணை > ஞை ஆயிற்று.

எந்த மொழியாயினும், நிலைமைக்கு ஏற்றவாறு புதிய சொற்களைப்படைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் முன்னேற்றம் இல்லை. ஒரே சொல்லாக ஆக்க முடியவில்லை யென்றால், ஒரு சொற்றொடராகவாவது அமைக்கவேண்டியது கடமை.  "air filter" என்ற சொற்றொடர்போல. மொழிகளின்  மூலம் புதிய கருத்துகளுக்கு உருவம் கொடுப்பது அத்தகையது.

மயக்கத்துக்குப்பின், அல்லது மயக்கத்திலே இருக்கும்போது இன்னும் நலமாகத் திரும்பாத நிலையில் அவன் "பிறக்கிணை" இழந்துவிட்டான் என்பர். இதன்பின் உடன் நினைவிழந்த நிலையும் அதே சொல்லால் குறிக்கப்பட்டது. அதற்கு ஒரு தனிச்சொல் ஏற்படவில்லை.  ஒரே சொல் போதுமானதாகும்போது, இன்னொரு சொல் தேவைப்படாது.   சிறுசிறு மாற்ற நிலைகளுக்கும் அதே சொல் போதுமானதாக இருக்கும்.

பூசாரிகள் சேவைக்கு  இணையாக வழக்கப்படி ஏதேனும் வழங்குவதும் மக்களிடை காணப்படுவது ஆகும்.  அவர்களுக்கு மரியாதை அல்லது பணிவு தரும் வண்ணம் " தக்க இணை" வழங்கவேண்டும்.  இதுவே,  "தக்க இணை"  ஆகி,  தக்க இணை > தக்கிணை > தட்சிணை ஆனதும் காண்க.

பக்கம் >  பட்சம்,

பக்கி >  பட்சி 

ஆனவையும் காண்க.  இவைபோல்,  தக்கிணை > தட்சிணை ஆகும்.  ஆனால் பிறக்கிணை இவ்வாறு திரியவில்லை.

இலையில் இட்டதை உண்பதே " நாகரிகம்''  அல்லது ஏற்புடைய நெறி என்னலாம்.  நேராகச் சட்டியிலிருப்பதையே போய் எடுக்கக்கூடாது என்று அம்மா சொல்வார்கள். அதைப்போல "ஊரிய"  அல்லது கிராமத்து வழக்குகளை  ஒப்பிடலாகாது என்று நினைக்கலாம்,   இலையிலிருப்பது சட்டியிலிருந்துதான் வந்தது என்று மெய்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகும்போது சட்டியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது ஆய்வோன் கடனாகிறது.  இதற்கு ஏன் கவலை கொள்வது?  சிலருக்கு "ஊரிய" வழக்குகளில் உண்மையைக் கண்டெடுக்க  முடியவில்லை போலும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

திங்கள், 22 நவம்பர், 2021

மலரோடு மதுரம்

 மது என்ற சொல்லை நாம் அணுகி அதனுட் புகுந்து பொருள்கண்டுள்ளோம். அவை இங்கு உள்ளன:

மது:   https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_12.html

தேன்மது  https://sivamaalaa.blogspot.com/2016/10/blog-post_27.html

இன்னும் சிலவும் உள. அவை பட்டியலில் கண்டுகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html என்னும் இவ்விடுகையிலும் காணலாம்.

மது + உரு + அம் =  மதுரம்.

மது - மயங்குவதற்கு,  உரு -  வெளிப்பாடு,  அம் -   அமைத்துத்தருவது,  மேலும் அம் விகுதி.  

து என்பது, வல்லினத் தகர ஒற்றின் மேலேறிய உகரமாதலின்,  மது உரு என்ற இரு சொற்புணர்ச்சியில் இரட்டிக்கும் என்று வாதிட்டாலும்,  பின்னர் இடைக்குறையும்,  மத்துரம் > மதுரம் ஆம் என்பதால் இந்த வாதம் நொடித்த வாதம்.  மேலும் இது வாக்கியச் சொற்சந்தி அன்று. இரட்டித்தலை எழுப்பாமை நேரத்தை மீத்துத்தரும்.

மயக்குக்கு உருத்தருவதாகிய தேன் இனிமை, மதுரம்.

மலரோடு மதுரம் மேவும் -  எனின், மலரில் இனிமை மேலேறிய(து) என்பது.

மனங்காணும் -  மவுனமானது என்பது பொருள்.

மோகன இராகம் -  காதலைத் தூண்டும் இராகம் அல்லது பாட்டு.

மது உரம் > மதுரம், உகரம் கெட்டது; உரம் - தெம்புதருவது எனினுமாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

குப்பை வீசும் குதூகலம்

 குப்பை எறிகின்ற முட்டாள் --- பிறரொடு

கூடிவாழ் தன்மையை எட்டான்!

எப்பையி லேனும  திட்டு --- அதை

எறிந்திடக் குப்பையின் தொட்டி.


இருப்பதை ஈங்குகண் டானோ --- அவன்

இருப்பி  னிறந்தவன்  தானோ? 

பொறுப்புடன் காரிய மாற்ற ---  அவன்

புகுந்திடல் இன்றிலே மாற்றம்.


வீசிய குப்பைகள் தம்மால் ---  வெள்ளம்

வீடு வரைமிகுந்  தேறி,

நாறிய துண்டடா  சென்னை  ----   செய்தி

நானிலம் கேட்டது மென்ன?


பொருள்:


எட்டான் -  அடையமாட்டான்

எப்பையி லேனும் -- எந்தப் பையிலாவது

(எப்பையிலேனும் அது இட்டு - எப்பையிலேனுமதிட்டு)

குப்பையின் தொட்டி -  வேண்டாத, வீசுகிறவற்றை இடும் கலம்

ஈங்கு - இங்கு

இருப்பின் இறந்தவன் -  வாழுகையில் பிணமானவன்

இன்றிலேமாற்றம் -  இல்லாவிட்டால் ஏமாற்றம்

வீடுவரை -   வீட்டினுள்ளும் என்க.

நானிலம் -  உலகம்.

கேட்டது - தொலைக்காட்சி முதலியவற்றால் அறிந்தது.



 

ஞாயிறு, 21 நவம்பர், 2021

வேற்றுமை முற்றுவினை விகுதிகள்

 அம்மா வந்தது,  தங்கை பாடியது,  அக்காள் காய்கறி வெட்டியது என்றெல்லாம் உயர்திணைப் பாங்கிலன்றி  இவர்களைச் சொல்வதென்பது தமிழ் இலக்கணப்படி ஏற்கவியலாதது என்றபோதிலும்,  தமிழகத்துச் சிற்றூர்களில் இவ்வாறு சில குழுக்களிடையே பேச்சு நிகழ்வது உண்மையாகும். ஆள் என்ற பெண்பால் விகுதி பெண்ணாட்சி குறிக்கும் ஏற்ற நிலையிலிருந்து பணிவின்மை குறிக்கும் நிலைக்கு இறங்கிவிட்டதனால்,  அப்பணிவினைத் தக்கவைத்துக்கொள்ளும் சிறந்த நோக்குடன் தான் இவர்கள் இவ்வாறு அஃறிணையில் பேசுகின்றனர் என்பது உண்மை. இதனை இலக்கணியரும் ஒப்புவர் என்பதனுடன், அதனை "வழுவமைதி" என்றும் ஏற்றுக்கொள்வர் என்பது நீங்கள் அறிந்ததுதான்.

சமஸ்கிருத மொழி நன்கமைக்கப்பட்டு அப்பெயரில் குறிக்கப்பட்ட காலத்தில், தமிழகச் சிற்றூர்வழக்கையே தன் வினைமுற்றுக்களில் பயன்படுத்திக்கொண்டது. அதே  இதே உதே  ( உது ஏ ) என்ற தமிழ்வடிவங்களில் உள்ள முதனிலை எழுத்துக்களை விலக்கிவிட்டு,  ஈறுகளைச் சமஸ்கிருத இலக்கணம் ஏற்றுக்கொண்டது.  மேலும் திணைப் பாகுபாட்டுக்கும் இடந்தரவில்லை.  எடுத்துக்காட்டாக:

நந்தனுதே! ஶைலசுதே! ஹர்ஷரதே!

கோஷரதே! ஹாஸரதே! மத்யகதே!

என்பன காண்க.

அள் அன் விகுதிகளைப் பான்மை காட்டுமாறு சங்கதம் பயன்படுத்துவதில்லை. இதனை ஒரு வேறுபட்ட முன்போக்குச் செலவு என்றும் சிலர் கருதலாம்.

அண்ணன் என்ற தமிழ்ச்சொல்,  ஏ என்னும் விளி பெற்று, அண்ணனே என்று வரும்.  விகுதி பெறாமல்,  அண்ணே என்றும் அண்ணா என்றும் விளியில் வரும். என் பிரிய பதியே என்று தமிழில் வருதலைவிட்டு,  பிரியபதே என்று சங்கதத்தில் வருவது  அண்ணனே என்று வாராமல் அண்ணே என்று சிற்றூர்களில் பேசப்படுவது போலுமே ஆகும்.

வினை எச்சத்தையே முற்றாகப் பயன்படுத்தி மலையாளம் முதலியவை புதுமை மேற்கொண்டன என்னலாமோ?  தமிழிலும் வினைமுற்று வளர்ச்சி என்பது பிற்காலத்தது ஆகும்.

( சேர்க்கப்பட்ட கூடுதல் பாகிகள் ( பாரா) காணாமற் போயின.  சில தட்டச்சுப் பிறழ்வுகளும் காணப்பட்டன.  பின்னவை திருத்தப்பட்டன).

(Different devices were used for additions to the post. This could have been the cause.

This will be  monitored. )


தூஷித்தல் என்பதன் மூலம்

 தூஷித்தல் என்ற பதமும் அவ்வப்போது எழுத்திலும் பேச்சிலும் வந்து நம்மை எதிர்கொள்கிறது. இது என்ன மொழிச்சொல் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்தச் சொல்லில் " ஷி " இருக்கிறது.  அதுதவிர, இச்சொல்லின் சிறப்பமைவு என்று ஒன்றுமில்லை, இயல்பான சொல்லே இது.

மலேசியா சிங்கப்பூர் முதலிய இடங்களில் வாழும் தமிழர்க்கு,  இந்த ஒரு சொல்லில் "ஶி" யை எடுத்துவிடுவதால், "  ஷி " என்பதிலிருந்து முற்றிலும் விடுதலை அடைந்துவிட முடிவதில்லை.  ஷியைத் தவிர்த்த மறு நிமிடமே,  ஒரு நண்பர் எதிரில் வருகிறார்.  அவர் பெயர் "பஷீர்!".  அவருடன் அன்பாகப் பேசுமுகத்தான் " என்ன பஷீர் ஐயா நலமா!"  என்று கேட்கும்போது , நாம் தவிர்த்த "  ஷி " வந்துவிடுகிறது.  அவர் பெயரைப் போய் " பசீர்" என்பது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. 

தொல்காப்பியனார் இலக்கணம் செய்த காலத்தில் நாம் வடவொலிகள் என்று குறிக்கும் திறத்தின அப்போதுதான் தமிழ்மொழி பேசுவோரை வந்தடைந்திருந்தன என்று எண்ணுவது சரியாக இருக்கும்.  அந்தத் தொடக்க நிலையில் அவற்றை விலக்கிவைத்தல் என்பது எளிதாக இருந்திருக்கும். ஆகையால் அந்த ஒலிகள் தமிழுக்குத் தேவையில்லை என்று அவர் கருதியிருக்க வேண்டும்.  எனவே தமிழ்ச் சொற்களில் அவற்றை விலக்குதல் நலம் என்று அவர் சூத்திரம் செய்தார்.

அவர் நூல்செய்த காலமோ இரண்டாம் கடல்கோளுக்குச் சற்றுப் பின்னர்!  தமிழர் பல நூல்களைக் கடல்கோளில் அப்போது இழந்துவிட்டிருந்த நிலையில் அவர் நூல்செய்தார். தமிழ் என்ற மொழிப்பெயர் அமைந்ததே,  எல்லாம் அமிழ்ந்து போய் அழிந்துவிட்ட பின்புதானாம்.   அமிழ் என்ற சொல்லினின்று பிறந்ததே தமிழ் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர்.  அமிழ் - தமிழ் என்று பெயர் அமைந்தது என்று கருதுவர்.  நூல்கள் அழிந்துவிட்டன என்றால் ஒவ்வொரு நூலுக்கும் படிகள் (copies)  ஆயிரக் கணக்கில் இருந்திருக்கும் என்று எண்ணவேண்டாம்.   ஓர் ஆசிரியர் இயற்றிய நூலுக்கு ஒரு படிக்கு (காப்பி)  மேல் எங்கும் இருந்திருக்குமா என்பது ஐயப்பாடுதான்.  எல்லாம் மெனக்கெட்டு கையால் எழுதிப் பகர்ப்புச் செய்த நூல்கள்.  " வடசொற் கிளவி வடவெழு தொரீஇ "  என்றார் தொல்காப்பியனார்.

தூஷித்தல் என்பதில் ஷி இருப்பதால் அது வடசொல். அதாவது தமிழரின் வீடுகளுக்கு வெளியே மரத்தடிகளில் சாமிகும்பிட்டவர்களால் கையாளப்பட்ட ஒலி.  அப்படிச் சொல்லும் மந்திரங்களில்  "ஶ்"  "ஶீ  ஷீ ஷீ"  " உர் உர்" என்று ஒலி எழுப்பினால்தான் நன்றாக இருக்கும்.  வடம் - மரத்து அடி ( மரத்தடி) என்பதும் பொருள்.  

அதை எடுத்துவிட்டு,  தூசித்தல் என்றால் அது தமிழ்.   இப்போது இது "எழுத்தொடு புணர்ந்த சொல்" ஆகிவிட்டது,  தொல்காப்பியர் கூறியபடி.

தூசித்தல் என்பது,  தூசியைப்போல் ஒருவரை இழித்துப் பேசி, பரப்பிவிடுதல் என்பது தான்.

தூசு >  தூசு + இ >   தூசி > தூசித்தல்.   ( தூசியைப்போல் தூற்றுவது).

தூ > துப்பு.

தூ > தூவு

தூ > தூசு >  தூசி.

தூ  >  தூற்று.

தூ > தூள்.

து > துளி.

எல்லாம் பொடிகளைக் காற்றில் பரப்புதல் அல்லது அதுபோல்வது.

தூசு + அன் + அம் >  தூசனம் > தூஷனம் என்றானது.

இது ஒரு செயலொப்புமைச் சொல். தூவுதல் என்பதனோடு ஒப்புமை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

 

சனி, 20 நவம்பர், 2021

நவநீதம் - புதுமை, வெண்ணெய்.

 நீதி பிழைத்தான் என்றெண்ணிய பாண்டியன் கோவலனைக் கொன்றான்.  இந்த வாக்கியத்தில் "பிழைத்தான்"  என்பதற்குப் பிசகினான், தவறினான் என்று பொருள். "மிஸ்டேக்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, தெளிவான பொருளை "டோர்ட்" என்னும் சட்டத்தொகுதி சொல்கிறது.  "Genuine Mistake" ---  உடலின் தேய்க்கும் மருந்தைக் குடிக்கும் மருந்தென்று எண்ணிக் குடித்துவிட்டீர் என்பதை உதாரணமாக முன்வைக்கலாம். உதாரணம்:[ உது-  முன்னால்; ஆர் - நிறைவாக; அணம் -  விகுதி, (நிற்பது எனல்பொருட்டு).]

நீதி என்ற சொல், நீதம் என்ற வடிவும் கொள்ளும். இரண்டும் நில் என்ற அடிச்சொல்லிலிருந்து வருவன:

நில் >  நி > நீ.  (  சொல் - கடைக்குறை - முதனிலை நீளுதல் ).

நில் > நீதி  ( தி தொழிற்பெயர் விகுதி).

நீதி + அம் >  நீதம்.  (  து என்பதில் உகரம் கெட்டது).

இது என்ற சொல் இடைநிலையாக வரும். இஃது,  " இது" என்றும்,  து என்று தலையிழந்தும், த் என்று மெய்யாகக் குறுகியும் வரும்,  சொல்லாக்கத்தில் ).

நி + த் + அம் > நீ + த் + அம் > நீதம்,   ( நி நீண்டது;  த் இடைநிலை).

நீதிக்கு நில் பகுதியானது,  ஏறக்குறைய நீதி ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் ஒன்றாக நிற்பதாலும் காலம் முதலிய காரணிகளால் கோடாமையும் ஆகும் ).  அதாவது:  நிற்பது நீதி. 

நவநீதம் என்ற கூட்டுச்சொல்லில் இரண்டு பாகங்கள் உள.  நவம் என்பது ஒன்று; நீதம் என்பது இன்னொன்று.  நவநீதம் - புதுமை எனின்,  நவம் - புதுமை; நீதம் - நிற்பது, புதுமையாய் முன்னிற்பது.

நவம் - புதுமை,  நீதம் - நெய்,  புதியது நெய்க்கு முந்திய வெண்ணெய்.  ஆகவே வெண்ணெய் என்பதும்  பொருள். திவாகர நிகண்டு இப்பொருளைத் தருவது காணலாம்.

நெய் என்ற சொல், நெய்+ து + அம் > நெய்தம்> நீதம் என்று திரிந்து இங்கு நெய்யைக் குறித்தது. நவ எனவே, வெண்ணெயைக் குறித்தது.  நீதம் என்ற இவ்வாறு திரியாத சொல், நெய்யைக் குறிக்காது.

இங்கு திரிபாக வந்து நெய்யைக் குறித்தது  " நீதம்" ஆகும். இது கூட்டுச் சொல்லிலன்றி இப்பொருள் தாராது உணர்க. முதற்குறையாய்க் கையாளப் பெற்றிருந்து நெய்யென்ற பொருள் போந்தவிடத்து அவ்வாறு கொள்க. வந்துழிக் காண்க.

"நவநீத சோரனும் என்று --  வருவான் என்று,

இராதாவும் ஏங்குகிறாள் நின்று  !  

கண்கள் காணாமலே -- சுகுமாரன்

கனிவாகப் பேசாமலே   (நவநீத )   "

மருதகாசியின் பாடல். 

இப்பாட்டில் நவநீதம் என்பது வெணணெயைக் குறித்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 19 நவம்பர், 2021

சென்னை வெள்ளம் ( வேண்டுகோள் கவிதை)

 

சென்னைநகர் தண்ணீர்க்குள் அமிழ்ந்து காணும்

சீரகன்ற நிலைகண்டோம் துன்பம் கொண்டோம்

மின்னலொடு பேய்மழையால் மக்கள் அல்லல்

மிசைபொருளும் உண்ணீரும் இல்லா வாட்டம்!

பன்னரிய பல்லிடர்கள் அடைந்தார் முன்னர்,

பின்னிதுநாள் காறுமதில் விடுபா டின்றி!

இன்னுமதே நேர்ந்ததுவே திறமாய்த் துன்பம்

இனிவாரா வழிகண்டு பணிசெய் வீரே.



ஒண்ணும் பெரியோர் ஒன்றுபட் டுதவி

நண்ணிடும் நலமே பண்ணுதல் கடனே.



அரும்பொருள்

விடுபாடு -  துன்பத்தில் மாற்றம்

சீரகன்ற - கெடுதலான

மிசைபொருள் - உணவுப் பொருள்

பின்னிதுநாள் காறும் - இன்றுவரையிலும்

பன்னரிய - சொல்லிட முடியாத

ஒண்ணும் - இயலும்

நண்ணிடும் -  ஏற்ற

மேற்றிராணியார், அதிமேற்றிராணியார் ( bishops arch~)

 இப்போது கத்தோலிக்க மதத்தில் உள்ள "கண்காணியார்களுக்கு"  ( bishops )  பெரும்பாலும் கிறித்துவ  வெளியீடுகளில்  மேற்றிராணியார்,  அதிமேற்றிராணியார் என்ற பதங்கள் வழங்குகின்றன. 

இப்பெயர்களைப் பார்ப்போம்.

மேல்+ திரு = மேற்றிரு என்று வரும்.

மேல்+ திரு + அரண் + இ > மேற்றிரணி.

திரு என்பதில் ஈற்று உகரம் கெட்டது.  ஆகவே மேற்றிர் + அரணி > மேற்றிரணி என்றாகும்.

இது எளிதாகப் பலுக்குதல் பொருட்டு,  மேற்றிராணி  ஆயிற்று.  இது வழக்கிலும் ( அதாவது பயன்பாட்டிலும் ) ஏற்பட்டிருத்தல் கூடும். புனைந்தோரும் அவ்வாறு நீட்டியிருக்கலாம்.

ராணா, மகாராணா என்பவை: அரணா,  ராணா, என்று வந்திருப்பதால் இது மேற்றிராணி என்று வருவது சரியான திரிபே ஆகும்.  இதுபற்றிய இடுகை காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரண் உடையவனே அரசன்.  ஆதலின் அரணன், அரணா, ராணா என்பவை அரசனுக்கு வழங்கிய பெயர்கள். தமிழ்நாட்டுக்கு அப்பால் அன் விகுதி வழங்குவது அருமை.

இது மேற்றன் என்ற சிரியப் பதத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்டதுண்டு.

எனவே மேற்றிரு அரணியே மேற்கண்டவாறு திரிபுற்றது.  அரணி என்பது காவலர் என்று நல்ல பொருள் தருகிறது.

மேல் + திறன் > மேற்றிரண் என்று திரிதலும் கூடும்.  மேற்றிரன் > மேற்றன் என்றும் திரிதலும் கூடுவதே.

மேல்+திரு+ஆணை+ ஆர்>  மேற்றிராணையார்> மேற்றிராணியார் என்றும் ஆகலாம்.  இது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


கோவிட் ஆனாலும் குற்றவாளிகள் ஓய்வுகொள்ளவில்லை(வன்புணர்வு)

 கோவிட் சுழலில் நாடு சிக்கியிருக்கலாம்,  குற்றம்செய்வோர் தங்கள் நடபடிக்கைகளில் குன்றிவிடவில்லை.  இங்கு குறிக்கப்படும் குற்றவாளிக்கு நீதிமன்றம் சரியான தண்டனை வழங்கியுள்ளது. செய்தியைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

https://theindependent.sg/man-force-feeds-alcohol-to-13yo-and-brutally-rapes-her-repeatedly-for-2-hours-at-kallang-riverside-park-appeals-for-lighter-sentence/ 

“The victim suffered serious harm as he had used significant violence against her in the course of the assaults... in addition, the appellant exhibited significant opportunism, took deliberate steps to conceal his offences.



பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

வியாழன், 18 நவம்பர், 2021

பாதிரி என்னும் தமிழ்ச் சொல்

 கிறித்துவ மதப் பூசாரிகட்குப் பெரும்பாலும் "பாதிரியார் " என்று சொல்வதுண்டு.  இது கிறித்துவ மதம் பின்பற்றப்படும் நாடுகளில் பூசாரிகட்கு வழங்கும் பெயர். கத்தோலிக்கர் வாழும் இத்தாலி, ஃச்பெய்ன் முதலியன எடுத்துக்காடுகள்.  இந்நாடுகளில் பூசாரியைப் "பாட்ரி" என்பதால், தமிழரும் அதைப் பின்பற்றி  "பாதிரி" என்றனர். இந்த அயற்சொல் தமிழில் சற்று மென்மையாக ஒலிக்கப்பட்டு வழங்கிவருகின்றது. இது எழுத்துப்பெயர்ப்புச் சொல் ஆகும்.

பாதிரி என்று ஒரு தமிழ்ச்சொல்லும் உள்ளது. இது ஒரு பொன்னிறமான மலரையும்  செந்நீலமான இன்னொரு மலரையும் குறிக்கும்.  நம் ஒளவை மூதாட்டி,  இப்பாதிரி மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்பதை ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். சொல்லியும்  அல்லது ஏவினாலும் செய்யாதவனுக்கு இது உதாரணமாகும்.  பூக்காமல் காய்ப்பது பலாமரம்.  பூத்துக் காய்ப்பது மாமரம்.  பூத்தாலும் காய்க்காது பாதிரி என்பது.

பாதிரி ஒரு பூவைக் குறிக்குமானால் அது தமிழ்ச்சொல்.  பாதிரி என்பது கிறித்துவ ஐயரைக் குறிக்குமானால் அது அயற்சொல்லின் எழுத்து அல்லது ஒலிபெயர்ப்பு.  (Padri).  கிறித்துவக் குருக்கள் என்று சொல்வதுண்டா  என்பதை நேயர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வரும் இடுகைகளில் ஒன்றில், மேற்றிராணி, அதிமேற்றிராணி என்று வரும் சொற்களின் அமைப்பை ஆராய்வோம்.  இதை நீங்கள் அறிந்திருந்தாலும் பின்னூட்டம் இட்டுத் தெரிவிக்கவும்.

ஆனால் "பா" என்ற ஐரோப்பியச் சொல்,  அப்பா என்பதன் தலையிழப்புச் சொல் ஆகும். [ (அப்)பா.]

எங்கள் நன்றி.

மெய்ப்பு பின்.



செவ்வாய், 16 நவம்பர், 2021

சிங்கப்பூர்க் குடியுரிமை மெலிவுறும் அறிகுறியா?

 குடியுரிமை சிங்கையிலே பெறுவதற்கே

கூடிடுவர் அண்டையினர்   என்பதெலாம்

நெடிகுறைந்த காயமுறை  கலயமென்றால்

நீள்வருநாட் பின்புலத்தின் காட்சியென்றே

படியறையும் தாளிகைகள் கூறுவதாய்ப்

பாரிலினி நடைபெறுமோ பகர்ந்திடுவீர்

நொடியினிலும் நீங்கிவிடாக் குடிமையொளி

நொங்கிவிடும் என்னுமொரு தெரிதிறமோ?


செல்வ முடையோரும் சேரோம் எனநீங்கின்

சொல்வதற் கன்னதும் சோர்வுதரும் --- நெல்லதிலே

நீங்கின் உமிநன்று; நேர்நீங்கும் தீயோரே;

யாங்கும் விழைவோம் நலம்


குடியுரிமை -  சிங்கப்பூர்க் குடியுரிமை

அண்டையினர் -  அருகிலுள்ள நாட்டினர்

நெடிகுறைந்த -  வாசம் நீங்கிக்கொண்டிருப்பதான

காயம் -  பெருங்காயம்

உறை -  உள்ளிருக்கும்

கலயம் -  சிறுபாத்திரம்

நீள்வருநாள் -  நீண்ட பிற்காலம் இனிவருவது

பின்புலத்தின் காட்சி - பின் திரையில் தெரியும் உண்மை

படியறையும் -  செய்தியைக் கேட்டறிந்தவாறே சொல்லும்

தாளிகைகள் - பத்திரிகைகள்

பகர்ந்திடுவீர் -  சொல்லிடுவீர்

நொடி -  செழிப்பும் வருமானமும் இல்லாத காலம்

குடிமையொளி - குடிகளுக்கு உள்ள பீடும் புகழும்

நொங்கிவிடும்  -   ஊட்டம் குறைந்துவிடும், மெலிந்துவிடும்

தெரிதிறமோ -  அறிகுறியோ


சேரோம் -  " நாங்கள் குடிகளாகச் சேரமாட்டோம் ( என்று)"

அன்னதும் - அத்தகையதும்

நெல்லின் உமி நீங்கினால் அது நல்லது; அதுபோல் தீயோர்

நீங்கினாலும் நல்லதே என்பது இப்பாடல்.


இது ஒரு செய்தியின் அடிபடையிலெழுந்த கவிதை.

அறுசீர் விருத்தம்.  இதற்கான இதழ்ச் செய்தியை

இங்கு சொடுக்கி வாசிக்கவும்:

https://theindependent.sg/gong-li-to-renounce-singapore-citizenship/


திங்கள், 15 நவம்பர், 2021

பராமரிப்பு

 இன்று பராமரிப்பு என்ற சொல்லைப் பார்ப்போம்.  தமிழுலகப் பயன்பாட்டில் உள்ள இச்சொல்லின் பொருள் "௷ய்ன்டெனன்ஸ்" (maintenance) என்பதற்கு ஒப்பாகும்.

கெடுதலுற்ற ஒரு பொருளை ஒரு தரம் மட்டுமோ அல்லது ஒரு குறுகிய கால அளவிலோ பழுதுபார்த்தல் அல்லது சரிசெய்தல் என்பதை "ர்ப்பேர்" என்பர் ஆங்கிலத்தில்.  நீடித்த போக்கில் ஒன்றன் பயன்பாடு தேய்ந்து கெட்டுவிடாமல் போற்றிக்கொள்வது  பராமரிப்பு ஆகும்.  அதாவது பரவலான முறையில் அதனைக் கவனித்துப் பயன்படுமாறு வைத்துக்கொள்வது.

பராமரிப்பு  என்பதில் பர என்ற அடிச்சொல் வருகிறது.  இது பரவலாக - அதாவது நீடித்த நிலையில் செய்யப்படுவதைக் குறிக்கிறது.

ஆம் என்பது ஆகும் என்பது செயலாக்கத்தைக் குறிக்கவருகிறது.  ஆகும் என்பது ஆம் எனல் கு தொகுந்தது.

இதுபோலும் காரியத்தை அருகில்  சென்றுதான் நடாத்த முடியுமாதலால் அருகில் என்பதைக் குறிக்கும்  "அரு" என்பதும் அங்கு உள்ளது.

இக்காலத்தில் தொலைவிலிருந்துகூட ஒன்றைச் சிறப்புறுத்துகிறார்கள்.  ( updates,  remote configurations etc).  இந்தச்சொல் உண்டான காலத்தில் இவைபோலும் வசதிகள் இருந்ததில்லை. இச்சொல்லை உணர்ந்துகொள்ள நீங்கள் பண்டை மன்பதைக்குள் நுழைதல் வேண்டும்.  மன்பதை - குமுகாயம் - சமுதாயம்.

இ என்பது வெகுகாலமாகவே இயற்றுதற் குறிப்பாகவும் வினையாக்க விகுதியாகவும் வந்துள்ளது.

அசைஇ,  நிலைஇ , தழீஇ  என்று பண்டை வழங்கிய வினையாக்க விகுதி இது..

செய்வித்தல் என்ற பிறவினையிலும் வி என்பது பிறவினையாக்க விகுதியாகக் கூறப்படினும், உண்மையில் வ் என்பது வகர உடம்படுமெய்.  இ என்பதே வினையாக்கம் செய்கின்றது.  இலக்கணநூல்கள் இவ்வாறு பிரித்து உணர்த்துவதில்லை.  இலக்கணமென்பது மொழிநூலன்று, சொல்நூலுமன்று என்பதறிக..  நீங்கள் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்பிக்கும் நூலே இலக்கணம்.

இ எனபது ஒரு சுட்டுக் குறுஞ்சொல். இயற்றுதல் என்ற சொல்லும் இதிலிருந்து தோன்றியதே  ஆகும்.

ஆகவே   அரு+ இ என்று இணைந்து அருகில் நிகழ்த்து என்று பொருள்தரும் சொல்நெசவு இதுவாகும்,  அருஇ > அரி > அரித்தல்.  அருகில் போய்ப் பிடித்து இழுத்துச் சேர்த்தல் " அரித்தல்"  என்பதும் காண்க. " மிதக்கும் விதைகளை அரித்து எடு" என்ற வாக்கியம் உணர்க.

எல்லாம் இணைக்க,

பர + ஆம் + அரு + இ = பராமரி  ஆகின்றது.

மேலனவாய விளக்கங்களை மற்றுமொரு முறை வாசித்துக்கொள்ளலாம்.

இவ்வாறே பராமரிப்பு,  பராமரித்தல் என்பவை உண்டாயின.

பர + ஆம் > பராம்,  பர என்பதில் ஈற்று அகரம் கெட்டது. பர்+ஆம் என்று இணைந்து பராம் என்று பொலிந்தது.

அரு + இ எனபதில் அரு என்ற முதலின் உகரம் கெட்டது.  அர் இ > அரி என்று விளைந்தது.

பராம் அரி > பராமரி இயல்புச் சேர்க்கை. ம் அ > ம.

பரா மரிப்பு என்று பிரித்தால் பரவலாகச் செத்துப்போவது என்று பிசகான பொருள் கிட்டும்.  அது தவறு.

இது அயற்சொல் அன்று.  மூலச்சொற்களை அல்லது அடிச்சொற்களை மட்டும் கொண்டு உருவாக்கிய வினைச்சொல் இது.  பரவலான காலவட்டத்தில் அருகில் இருந்து இயற்றுவது என்று அழகாக இதன் பொருள் போதருதல் காணலாம்.

பர ஆ மரு(வு) இ என்று காண்டலும் பொருந்துவதால் இது இருபிறப்பி ஆகும். பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.


அறிக மகிழ்க.


மெய்ப்பு  பின.



ஞாயிறு, 14 நவம்பர், 2021

காப்பியில் சீனிபோல் கலப்பு இனம்

 கசக்கும்  குளம்பியில் உட்கலந்த சீனி

இசைந்த தெதோவொன்று  சாதி  ----  மசக்கையால்

மண்விரும்பும் கர்ப்பிணிபோல்  மங்கலுறல்  ஆகாதே

கண்தருமோர் காட்சியே கொள்.


அரும்பொருள்:  குளம்பி - காபி என்னும் பானம். குளம்பி - காப்பி( மொழிபெயர்ப்புச் சொல் )

  சீனி  ---சர்க்கரை.  இசைந்தது   -  பொருந்தி நிற்பது.

சாதி  -   முன்னோர் தொழிலடிப்படைப்   பிரிவுகள்.  

எதோ ஒன்று -  தீர்மானிக்க முடியாதது .  மசக்கை -  

கர்ப்பிணிகட்கு  வரும் நிலை.  கர்ப்பிணி - பிள்ளைத்

தாய்ச்சி.  மங்கல் -  அறிவுகுறைதல்.  

கண்தருமோர் காட்சி - கண்ணால் கண்டவைகயே  

நம்புதல்.  


இந்திய தேசத்தில் ஏற்பட்ட  போர்களில்,  உள்ள 

மக்களில் பலர் கற்பழிப்பு,  கைது, கடத்தல் 

எனப் பல காரணங்களால்  இனங்கள் 

கலந்துவிட்டனர் என்பதும்,  இப்போதுள்ள 

சாதிகளிற் பலவும் கலப்புகள் என்பதுமே உண்மை. 

 கருப்பு நிறம் வெகுவாகக் கலந்திருப்பதால்

கறுப்பினமாகிவிட்டதே  காணக்கிடக்கின்றது.   

வெளியார் கலப்பு என்பது காப்பியில் சீனிபோல  

ஏற்பட்டதுதான் .   இப்போதுள்ள   சாதிகள் 

பெயரளவில் உள்ளவையே ஆகும்.   சேர சோழ 

பாண்டியரின்   வழித்தோன்றல்களையே  

( வாரிசு ) கண்டுபிடிக்க முடியவில்லை.


ஒவ்வொரு போரின் பின்னும் இலட்சக்கணக்கில் 

கலப்புகள் பிறந்தனர்.  பண்டைக்காலத்தில் 

கருக்கலைப்பு வசதிகளும் மருந்துகளும் இல்லை. 

இதனால் சாதிகளும் பல்கிவிட்டன.  சங்க காலத்தில்

 9  சாதிகள் இருந்திருக்கக் கூடும்.


ஒரு ஓர் வடிவங்கள் கவிதையில் ஒன்றுக்கு இன்னொன்று

மாற்றீடாக வரலாம்.  இது இலக்கணம்.




சனி, 13 நவம்பர், 2021

ஆராதித்தல் வினைச்சொல்

தோற்றுவாய்:  ஆய்வு நலம்  

ஆராதித்தல் எனபது பூசை செய்தல் என்று பொருள்படுகிறது. உபசரித்தல் என்றும் இன்னொரு பொருள் உள்ளது.   ஆயினும் இதன் சொல்லமைபுப் பொருள் சற்று வேறுபட்டது.  மணம் என்ற சொல் வாசனை என்றுகூடப் பொருள்கொள்ளத்  தக்கதாய் இருந்தாலும், அது மண்ணுதல் ( நீரால் தூய்மைசெய்துகொள்ளுதல் ) என்ற வினையினின்று புறப்பட்ட சொல்லே.  வானவூர்தி ஓரிடத்தில் வானிலேறி இன்னொரு நாட்டில் போய் இறங்கிவிடுவதுபோல, சொற்களும் சில புறப்பட்ட இடம் வேறாகவும் இறுதி அடைவு வேறாகவும் இருத்தல் தெளிவு.  சில சொற்களுக்கு இருபதுக்கு மேற்பட்ட பொருள்கள்கூட இருக்கின்றன. நீங்கள் ஓய்வாக இருக்கையில் அவை எவ்வாறு இத்தனை பொருள்வேறுபாடுகளை அடைந்தன என்ற ஆய்வைச் செய்யலாம். இதனைச் செய்தால், தமிழுலகு உங்கட்குக் கடப்பாடு உடைத்தாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


வினைச்சொற்கள்

ஆராதித்தல் என்பதில் உள்ள வினைச்சொற்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

ஆர்தல் -   நிறைதல்.  ஆர என்ற எச்சவினை.

ஆதல்   -  ஆகுதல் என்ற வினை.   

தி என்னும் இடைநிலை. அல்லது வினையாக்க விகுதி எனினுமாம்.

~ தல் என்பது தொழிற்பெயர் விகுதி.

எனவே,  ஆர +  ஆதி   =  ஆராதி   ஆகின்றது.  "நிறைவாகு" என்ற பொருள்.

இது இரு வினைச்சொற்களை இணைத்து ஆக்கப்பட்ட கூட்டுவினை ஆகும். ஒரே சொல்லிலிருந்து இன்னொரு புதுவினை ஏற்பட்டதுமுண்டு.

அதனை இன்னோர் இடுகையில் சொல்வோம்.

நிறைவாக்கும் ஒரு பூசையைத் தொடங்கி  அதைத் தெய்வத்துக்குச் சாத்துதல் என்பதே இதன் பொருள் ஆகும்.

ஆமோதித்தல் என்பதில் ஆம் + ஓது + இ என, இறுதி இகரம் மட்டுமே வினையாக்க விகுதி ஆயிற்று. மூழ்கு, பழகு என்பவற்றில் கு வினையாக்க விகுதி.

நிறைவுக்கருத்து உள்ளபடியால் உபசரித்தல் அல்லது ஓம்புதல் என்பதும் மற்றொரு பொருளாயிற்று.

ஆர்தல் என்பது கலந்த மற்ற வினைகளும் உள்ளன. அவற்றைப் பின்பு காண்போம்.  பணிவும் கவனிப்பும் அலங்காரங்களும் நிகழ்வுடன் ஒன்றித்திருத்தலும் எனப்  பலசாயல்கள் இவ்வினையில் உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



வியாழன், 11 நவம்பர், 2021

தாம்பூலம்

 இன்று தாம்பூலம் என்ற சொல்லினைக் காண்போம்.

இச்சொல்லில்  பூலம் என்பது புல்லுதல், புல்குதல் என்ற வினைகளுடன் தொடர்புடைய சொல்.

புல்லுதல்  -  ஒன்றுபடுதல்.  

புல்குதல் என்பதும் இதற்கிணையான பொருள் உடையது.

அடிச்சொல் புல்  என்பது.

புல் + அம் =  பூலம்  என்பது ஆடவர் பெண்டிர் ஒன்றுபடுங்கால்,  அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து வருங்கால் வாய் நாவு முதலியவை தூய்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ளும் அடைகாய் முதலியவற்றைக் குறிக்கும் சொல்.  பூலமென்பது முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உருக்கொள்ளும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் என்பர். இலக்கணக் குறியீடு.  தொழில் என்றது வினைச்சொல் எனற்பொருட்டு.

இது பெரிதும் மங்கல விழாக்களில் பயன்பாடு கண்டது. பண்டையர் இயற்கையில் கிட்டும் வெற்றிலை முதலியவற்றைக் கையாண்டு தங்களை தூய்மைப் படுத்திக்கொண்டனர்.  இதுபோதுள்ள செயற்கை மருந்து வகைகள்  அக்காலத்தில் இல்லை.  Chlorhexdine, betadine  எனல் தொடக்கத்து இக்காலத்து மருந்துகள் முற்காலத்திலில்லை அல்லது பயன்பாடு காணவில்லை.

ஒரு வாய்ப்பு அந்நிலையைத் தருங்கால் இட்டுக்கொள்வது "தரித்தல்"  ஆகும்.  தரு> தரி > தரித்தல்.  தரி என்பதில் இகர ஈறு வினையிலிருந்து இன்னொரு வினையைப் பிறப்பித்தது.  ( தரு- இ- த்தல் ).  தருவித்தல் என்பது பிறவினை. இவ்வாறு ஒன்றிலிருந்து பலசொற்களை மொழிக்குப் படைத்துக்கொண்டது அறிவுடைமை.  முயற்சியின்றிக் "கடன்"கொள்வது சோம்பல் ஆகும். 

தாம் என்ற முன்னிணைப்பு, ஒருவருக்கொருவர்  அல்லது தம்மில் தாம் பதிந்து வாழத்தொடங்கும் இல்லற வாழ்வு நிலையைக் குறிக்கவரும் அழகிய சொல்லமைப்பு.

தம் + பதி > தம்பதி என்பதும் இத்தகைய நிலை உணர்த்தம் சொல்லாகும்.  தம் என்பதும் பதி(தல்) என்பதும் தமிழே.

பதிவுத் திருமணம் என்ற தொடரில் பதிவு வருகிறது.

எனவே  தாம் புல்லி மகிழத் தேவையான ஒன்று தாம்பூலம் என முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




புதன், 10 நவம்பர், 2021

வெற்றிலைக்கு இன்னொரு பெயர்.

 நம் வலைப்பூவில் வெற்றிலை பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எழுதியுள்ளோம்.   அவை இங்கு உள்ளன.  படித்து மகிழவும்:

வெற்றிலை:   https://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

சருகு பிளகு  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_16.html

குரங்குக்கு மறுபெயர்கள்  ( வெற்றிலையைக் குறிப்பிடுகிறது)

https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_27.html

வெற்றிலை இல்லா வினை: https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_2.html  (கவிதை)

வெற்றிலை---  - - வேறு பெயர்கள்  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7697.html

வெற்றிலை பெரும்பாலும் பல், நாவு முதலியவற்றை __ தூயதாக்குகிறது என்று வெற்றிலை போடுகிறவர்கள் சொல்கிறார்கள்.   போயிலை ( புகையிலை) யும் பலர் போடுகிறார்கள்.  நம் வீட்டுப் பாட்டிக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் சிவகிரிப் போயிலை கிட்டாமல்  சிறிது இன்னலுற்றார்.  பின்பு கொண்டுவந்து அது கடைகளில் கிடைத்தது.  என்ன மகிழ்ச்சி!  ஆனால் போயிலைக்கு விலை அதிகம்.  போயிலையினால் புற்று நோய் வருகிறது என்று ஐயப்பாடு இருப்பதால்,  அது அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தபடுகிறது.  .  

வெற்றிலைக்கு "நாவிலை"  என்பது மற்றொரு பெயராகும்.  ஆகவே நாவு தூய்மைப் படுவதற்கு வெற்றிலை இன்றியமையாதது என்று நம்  பாட்டி பூட்டிகள் காலத்தில் நம்பினர் என்று நாம் கருத இடமுண்டு.

தாம்பூலம் என்பது வெற்றிலையை மட்டும் குறிக்காமல்,  பாக்கு அல்லது சீவல்,  சுண்ணாம்பு, கத்தக்காம்பு  (கற்றைக்காம்பு) என வாயில் போடுவதற்குரிய பொருள்களின் தொகைச்சொல் என்று தெரிகிறது.   இதைத் தாம்பூலம் தரித்தல் என்பர்.

தாம்பூலம் என்பது பூலம் என்றும் குறுக்கம் அடையும்.

முகபூசணம்,  தக்கோலம், சுருளமுது, அடைக்காய்  என்பனவும் தாம்பூலம் என்பதற்கு மறுபெயர்கள்.

உதடுகள் சிவந்து சாயம் பூசியது போலும் தோன்றுதலால் முகபூசணம் ஆயிற்று. முகம் என்றது உதட்டைக் குறித்தது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

If you entered the compose mode please do not move your mouse over published material. You may be making unwanted changes . Please help by exiting the compose mode quickly.


செவ்வாய், 9 நவம்பர், 2021

ஸ்தம்பித்தல் சொல்லமைப்பு ( மாற்றுமுடிபு)

"தம்பித்து உயர் திசையானைகள் தளர" என்றான் கம்பநாடன், இராமாயணத்தில்.

ஒரு பொருள் அதன் பிறபாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பாடாமல்,  தொடர்பறுந்த நிலையில் நின்றுவிட்டால் அது தம்பித்துவிட்டது என்று சொல்லவேண்டும்.   ஒரு மனிதனின் இருதயம் 1  நின்று போனால் அது தம்பித்துவிட்டது என்று சொல்வது சரியான உரையாகிறது.  அதாவது பிற இணைப்புகளுடன் இயங்காமல் தாம் அல்லது தானாகிவிட்டது.  இதன் சொற்பகுதி தன் என்றாலும் தம் என்றாலும் முடிபில் வேறுபாடு தோன்றாது.

பிற பான்மைகள் பற்றிச் செல்லாது தானாக அல்லது தாமாகச் சுருங்குதல் அல்லது செயலிழத்தல்.

பிற்காலத்தில் தம், தன் என்ற பகுதியுடன் விகுதி பெற்று அமைந்த சொற்கள் ஒரு ஸகர மெய் எழுத்தை முதலாகக் கொண்டிருக்குமாறு உருக்கொண்டன.  இங்குக் கூறியது,  தான்,  தாம் என்ற வடிவங்கட்கும் பொருந்துவது.  ஒரு சொல் மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்குதலைத் தமிழ் ஏற்கவில்லை. ஆனால் சில மொழிகள் அதனை ஏற்றன. இது மொழிமரபுகளில் வேறுபாடு ஆகும்.

எ-டு:  தான் >  ஸ்தான்~~ 

 இவை பின் ஒரு விகுதியும் பெறும்.

இதனை இன்னொரு வகையிலும்  விளக்கலாம்.  

தம்பித்தல் என்பது தடைப்படுதல் என்ற பொருளும் உடையதாதலின்  தடு என்பதை பகுதியாகக் கொண்டு:-

தடு >  தடும்பி  >  தம்பித்தல்>  ஸ்தம்பித்தல்.

தடுப்பித்தல்  -  இதில் வல்லெழுத்து வந்தது  (டு).   ~பித்தல் என்ற பிறவினையிலும் வல்லெழுத்தே  மிக்கு வந்தது.  இதனை மென்மை செய்ய. "தடும்பித்தல் >  தம்பித்தல் என்று அமைக்கலாம்.  டு இடைக்குறைந்து சொல் மெலிந்தது.  செய்யுளில் இவ்வாறு மெலித்தல் செய்யத் தொல்காப்பியம் வசதி செய்கிறது.  கவிஞர் இதை எதுகை மோனை நோக்கிச் செய்வர்.  சொல்லமைப்பில் இதுவும் கைக்கொள்ளப்படும் உத்தியாகிறது.

இவ்வாறு சொல்லுக்கு இன்னொரு வகையில் அமைபுரைக்க முடிவதால், இச்சொல் இருபிறப்பி என்று உணர்க. முன் இடுகையில் இதைச் சொல்லாமல் தவிர்த்துவிட்டோம். எல்லா வடிவங்களையும் நாம் சொல்வதில்லை.  நேயர்கள் ஆய்வுசெய்து சொல்ல வாய்ப்பும் அளிக்கவேண்டுமன்றோ?

குறிப்பு:

1.ஈர்(த்தல்) - வினைச்சொல்.

ஈர்+து + அ + அம்   >  ஈர்தயம் >  இருதயம் 

து. அ என்பன இடைநிலைகள்.  அம் என்பது விகுதி.

ஈரல் என்பதும் ஈர் என்ற அடிப்பிறந்த சொல்லே.

இருதயம்  இடைக்குறைந்தால்  இதயம்.

இரத்தத்தை ஈர்த்துக் குழாய்களில் வெளியி லிடும் உறுப்பு.

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர் என்றே திரியும்.  எ-டு:  ஈராறு கரங்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 8 நவம்பர், 2021

திரவநிலை

 நில் என்பது ஒரு வினைச்சொல்.  கால் இருக்கும் இடத்திலிருந்து நகராமல் அவ்வாறே (உட்காராமல் கிடக்காமல் ) இருபதைத்தான் நில் என்ற வினைச்சொல் குறிக்கிறது. நில் என்ற சொல்லைப் பல பொருட்சாயல்களில் பயன்படுத்தலாம்.  இதை  எழுத்துமொழியில் அவ்வளவு விரிவாகப் பல சாயல்களில் பயன்படுத்துவதில்லை.  " அவர்களின் வீட்டில் ஏழு பசு(க்கள்)  நிற்கின்றன"  என்பர்.  இவ்வாறு சொன்னால், " நின்றுகொண்டேதாம் இருக்கின்றனவோ., படுப்பது தூங்குவது எல்லாம் இல்லையோ?"  என்று சொல்வாருண்டு. (இதை ஒரு கேள்வி என்று கொள்வதற்கில்லை ). பசுக்கள்  நிற்கின்றன என்றால்,  அங்கு அவை வளர்க்கப்படுகின்றன என்று பொருள்.  எனவே, பேச்சுத்தமிழ் நில் என்ற சொல்லை குறுகிய பொருளில் எடுத்துக்கொள்ளவில்லை என்று இதன்மூலம்  அறியலாகும். பல்பொருளும் பல்பொருட் சாயல்களும் உள்ள ஒரு சொல்லை, குறுக்கிப் பொருள்கொள்வது தவறாகும்.  நிற்க என்று கடிதத்தில் எழுதினால் எழுந்து நிற்க வேண்டு மென்பது பொருளன்று.

எழுத்தில் உள்ளவையெல்லாம் சரியானவை என்றோ பேச்சில் உள்ளவை எல்லாம் தவறானவை என்றோ கொள்வதற்கில்லை.  ஒவ்வொன்றையும் ஆய்ந்துதான் முடிவுசெய்யவேண்டும்.

நிலை என்ற சொல்  நில் + ஐ என்று விகுதி பெற்று அமைந்த சொல்.  உலகிற்  பொருள்கள் காற்றுப்போலும் நிலையிலோ ( வாயு),  கட்டி போலும் நிலையிலோ ( திடப்பொருள் ) , திரவநிலையிலோ ( நீர்போலும் )  இருக்கும். இவற்றுள் 

திரவநிலை என்பதைப்  பார்ப்போம்.

இம்மூன்று வகைப்  பொருள்களில்  நீர்தான் திரண்டுவந்து அலையாகிக் கரையில் மோதுவதை மனிதன் முதன்முதல் அறிந்துகொண்டான்.  பின்பு காற்றும் இவ்வாறு திரண்டு புயலாவது கண்டுகொண்டான். தமிழில் அமைந்து கிடக்கும் திரட்சிக் கருத்துச் சொற்கள் பெரும்பாலும் நீர் பற்றியவையே ஆகும். இவற்றில் பலவும் நீரியன்மை தழுவிய சொற்கள்

திரள்,  திரள்தல்,  ( வினைச்சொற்கள் ).

திர என்பது அடிச்சொல்.  திர் எனினுமாம்.

திர + அள் =  திரள்.

திர + ஐ  =  திரை  (  அலைத்திரட்சி )

திர +  வ் + அம் = திரவம்  ( வகரமெய் --உடம்படு மெய்).

திர + ஆ + அகம்=  திராவகம். ( சில மருந்துச் சரக்குகள் திரட்சியாகிக் கரைந்து  உள்ளிருக்கும் நீர் ),  ஆ என்பது ஆகுதல் வினை.  வகர மெய்  -- உடம்படுமெய் ).

திரள்வு + அகம் > திரவகம் (  ள் கெட்டது) >  திராவகம் ( திரிபு)  என்றும் விளக்குவதுண்டு. எவ்வாறாயினும் ஒன்றுதான்.

திர -  திரு.  ( திரட்சி).  மதிப்புத் திரட்சியும் ஒப்புமையுடைய கருத்தே.

திர -  திரி  ( மாறுபட்டுத் திரளுதல் )

இன்னும் உளவெனினும் அடுத்துக் கிட்டும்  வாய்ப்புகளில் உரையாடுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.








 

ஞாயிறு, 7 நவம்பர், 2021

07112021 கோவிட் நிலைமை

 [Sent by Gov.sg – 7 Nov]


As of 6 Nov 2021: 

- 1,666 cases in hospital

- 299 require O2 supplementation 

- 65 under close monitoring in ICU 

- 74 critically ill in ICU

- Overall ICU utilisation rate: 72.8%  


3,871 cases discharged; 550 are seniors aged 60 years and above.


Over the last 28 days, of the infected individuals: 

- 98.7% have mild/no symptoms

- 0.8% require O2 supplementation

- 0.3% are in ICU

- 0.2% died


As of 5 Nov: 

- 85% of population completed full regimen/received 2 doses of vaccines

- 86% received at least 1 dose

- 17% received boosters


As of 6 Nov, there are 3,035 new cases. The weekly infection growth rate is 0.83.


go.gov.sg/moh061121

சனி, 6 நவம்பர், 2021

சோதிட நம்பிக்கையில் சோர்வில்லை

 பேர்மாற்றம்  செய்தால் நாளும்

கோளுமே  பார்த்துச் செய்க,

நேர்மாற்ற  மாகத் துன்பம்

நேராமை போற்றிக் கொள்க; 

யார்கூற்றுக் கொண்டாய்   என்றே

என்னைநீர்  கேட்பீ ராயின்.

கூர்ஈற்றுக் கோளாய் வோனே

கூறினான்  ஈதென்  பேன்நான்.   


இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்தக்

கலக்கமில் கணியன் தானும்

கழறின யாவும் ஏற்றான்;

துலக்குறப்  பேரைப் பேர்த்தான்

இன்னொரு பேரை வைத்தான்! 

மயக்கறு நம்பிக் கையில்

மகிழ்தலம் ஆர்ந்த  தம்மா.


இதில் பெறப்படும் படிப்பினை யாதென்றால்,  சோதிடத்தை நம்பவில்லை என்றிருப்பவர், நம்பாமல் இருக்கலாம்.  அதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறார்கள்.  நம்பாதே என்று நீர் சொல்லி அதை நாலு பேர் கேட்டுவிட்டால், உலகம் உம் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது என்று இறுமாந்துவிடுதல் அறியாமை ஆகும்.

இந்தச் செய்தியைப் படித்து இதை உணர்ந்து கொள்ளலாமே. (கீழே, அரும்பொருள் யாப்பியல் குறிப்புகள் இவற்றுக்கு அப்பால்  தரப்பட்டுள்ளது.  சொடுக்கி வாசிக்கவும். )

அரும்பொருள்:

நாளும் கோளும் -   சோதிடம்.

இலக்கத்தி னோடேழ் பத்தின்ஆயிரம்  ---  170000

கணியன் -  சோதிடன்

கழறின - சொல்லியவை

யார் கூற்று -  யார் சொன்னதை

கொண்டாய்-  ஏற்றுக்கொண்டாய்

கூர் ஈறு -  கூரான கடைசி.  அதாவது கூர்மதியால் இயன்ற

இறுதிக் கொள்கை.

நேராமை -  நடவாமல்.

துலக்குற -  விளக்கமாக

மயக்கறு  -   குழப்பம் இல்லாத

ஆர்ந்தது  -  நிறைந்தது

மகிழ்தலம் -  பூமி. மண்ணுலகு


யாப்பியல் குறிப்புகள்:

இது அறுசீர் விருத்தம்.  இந்த அடியைப் பாருங்கள்:

"இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்த"

என்று வந்துள்ளது,  இங்கு முதலடியில் இரண்டாவது மடக்கில்  இகரத்தில் தொடங்கியிருந்தால், ஒரு மோனை வந்திருக்கும்.  நான் வைக்கவில்லை. இப்படி மாற்றினால் மோனை வந்துவிடும்:

இலக்கத்தி  னோடேழ் பத்தின்

ஈரைந்து நூற்றைத் தந்தான்

என்று எழுதினால் மோனை வந்துவிடும்.  வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அதிகம் கணக்குப் போட்டு அது என்ன தொகை என்று வாசிப்பவர் கண்டுபிடிக்க வேண்டும்.  கவிதையில் 170,000 என்பதை தெளிவாக வைப்பதே கடினம். அதை மேலும் கடினமாக்கிப் படிப்பவர் திணறக்கூடாது என்பதானால் வைக்கவில்லை.  கருத்தறிதல் மிகுமழுக்கம் அடைதல் ஆகாது என்பதிலும் சற்றுக் கவனமாய் இருக்கவேண்டியுள்ளது.

கவிதையின் முதற்பாடலில் தொடக்காத்தில்:

பேர்மாற்றம்  நாளும் கோளும்

பிழையாது பார்த்துச் செய்க

என்று பாடினால் மோனை வந்துவிடும்.

பார்த்துச் செய்க என்ற  1.பேச்சுவழக்குத் தொடரில்  ஒரு கவனம் வேண்டும், 2. வேறு ஈர்ப்புகளும் கவர்ச்சிகளும் கவிதைக்கு வேண்டும் என்பன " செய்" என்ற வினை இரண்டாம் முறை வருவதால்  உணர்த்தப்படுகிறது என்னும் காரணியால் மோனையின்பால் மோகம் விடுபடுகிறது.  அதனால் மோனையை விழைந்து மாற்றவில்லை.  

இந்தச் சிந்தனைகளை அறிந்தால் கவிதைபால் ஈர்ப்பு மிகும் என்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அறிவீராக. 


HK star Jordan Chan paid fortune-teller S$170,000 to change his name for good luck

https://theindependent.sg/hk-star-jordan-chan-paid-fortune-teller-s170000-to-change-his-name-for-good-luck/

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வியாழன், 4 நவம்பர், 2021

தொற்றுநிலை மாற்றாமல் போய்விட்ட தீபாவளி இராசி

[தீபாவளி வந்தாலும் சென்றாலும் கோவிட்டின் கொடுமை

மாறவில்லை. மாற்றும் இராசிநலம் தீபாவளிக் கில்லாமல்

போய்விட்டதே!  அடுத்த தீபாவளிக்கு மாறிச் சென்றுவிடுமோ கோவிட்

தொற்று?    இக்கவிதை அந்த ஏக்கத்தைப் பதிவிடுகிறது. ]


எண்சீர்  ஆசிரிய விருத்தம்.


வருகின்றாய் வருகின்றாய் என்றார் மக்கள்

வந்தாயே தீந்தமிழால் வரவேற் றோமே

இருவருக்கு மேல்போகும் வருகை யாளர்

இருந்திடுதல் ஆகாதென் றியம்பக் கேட்டே

இருவருக்கு மேலாயின் கொடையே தந்தோம

எல்லோரும் மகிழ்ந்தேந்தும் வல்ல காலம்

கரவுருக்கும் செறிவுடனே அழகு காட்டிக்

கடுகியநீ கனிவின்றிச் சென்று விட்டாய்!


நோய்காலம் வந்திணைய நினைத்தி ருந்தார்

நுகர்ந்திடவே வடைமுறுக்குப் பலகா ரங்கள்

வாய்ச்சுவைக்கே கிட்டவில்லை அயர்ந்து விட்டார்

வணிகர்களே நலம்பெற்றார் என்றார் சில்லோர்

தாய்பிள்ளை என்றபலர் தனித்து வைகத்

தரணியெலாம் தாறுமாறாய்ப் போயிற் றன்றோ?

காய்களிலே கனிந்தவையோ சிலவே யாக

காண்பலவும் பயன்சுருங்குற் றனவே கண்டாய்.

 

அடுத்தநாடு செல்வதற்கு அணிய மானோர்

அதன்பயனை அடைந்திடவே கதவை மூடிப்

படுத்தனைய  நிலைதனிலே  இருந்த தாலே

பாரினிலே ஓர்நலமும் வாரா மையால்

கெடுதலையாய் யாவுமின்று முடிந்து போச்சே

கேடுகளை அகற்றாமல் ஓடிப் போனாய்

விடுதலையும் வியனுலகில் விஞ்சி  வந்து

விடம்களைந்து நடம்படுமோர் கடம்கா  ணோமே.


மனமாற்றம்:


தீபா வளியென்ன செய்யும்  கடுந்தொற்று

தீவை அலைக்கழிக்கும் போது.


தீபாவளிக்கு வேண்டுகோள்:


மீண்டும் வருங்கால்   மிகுதிறன்  காட்டிவிடு

தாண்டித் தடம்கண்  டிட.



மகிழ்ந்தேந்தும் -  உவகையுடன் எதிர்நோக்கிய

கரவுருக்கும் -  கரவு உருக்கும் -  மறைவானவற்றை நெகிழ்த்தி அதன்
மறை தீமையை வெளிப்படுத்தும்.

கடுகிய - விரைந்த

கனிவு -  அன்பு  (இல்லாமல் )

வந்திணைய -  வந்து கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள

காய்களிலே கனிந்தவை - காய்களில் உண்ணத்தக்கவை

கேடுகளை -  தொற்று,  பொருளியல் சரிவு முதலியவற்றை

வியனுலகில் - விரிந்த உலகில்

விஞ்சி  -  மிகுந்து

காண்பலவும் -  பார்க்கின்ற பல நிகழ்வுகளும்

கடம் -  கடமை

விடம் - தொற்று

தடம் -  செல்லும் பாதை

விடுதலையும் வியனுலகில் விஞ்சி  வந்து

விடம்களைந்து நடம்படுமோர் கடம்கா  ணோமே.

இது தடம் கண்டு மேற்செல்லாவியலாத நிலையைக் காட்டுவதால் கவிதை

கரடுமுரடாக முடிக்கப்பட்டது அறிக. எல்லாம் வல்லொலியில் வந்தது.




மெய்ப்பு பின்னர்

மறுபார்வை 09112021 1422


கதி என்ற சொல்.

 கதி என்பது செல்லுதல், செல்வழி குறிக்கும் சொல்.  

இது கடுகுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது.

கடு > கடுகு~தல்   விரைந்து செல்லுதல்..

அடிப்படைக் கருத்து:  கடுமை.

கடுகு+ தி >  (டு என்ற ஈற்று எழுத்தும் கு என்ற வினையாக்க விகுதியும் கெட்டு ) >  கதி ஆகின்றது.

கதி என்பது பேச்சில் கெதி என்றும் திரியும். " என் கெதியைப் பாரையா" என்று அழுதல் கேட்டிருக்கிறீர்களா?

கதி > கதி+ இர் >  கதிர்.  இகரம் கெட்டது.

கதிர் > கதிரவன்.

பண்டை நாட்களில் ஆறுகள், குளங்கள், மேடு பள்ளங்கள், மலை, கல்மேடுகள் என்று பல தடைகள் இருந்தன.  இவ்வாறிருந்தது மனிதனின் நகர்வினைக் கடினமானதாக்கியது.  அதனால் ஒன்றைக் கடத்தல் என்பது ஒரு கடின வேலையே  ஆயிற்று.

அதனால் கடு ( கடுமை ) என்பதிலிருந்து கடு+ அ > கட என்ற வினைச்சொல் தோன்றிற்று.  கடு என்பதன் ஈற்றுகரம் கெட்டது.

கட > கடத்தல்.

ஒன்றைக் கடந்து செல்லுதலும்  "கதி" என்றே ஆகும்.

கட > கடதி > ( இடைக்குறைந்து ) கதி.

நோக்கின், கடு+தி > கதி என்பதும் கட+ தி > கதி என்பதும் ஒன்றுதான்.

கட + தி என்ற சொல்லாக்கப் புணர்வில் வலி மிகவில்லை.

வலி மிகும் இடங்களும் உள. எ-டு:

இரும்புக் கம்பி நல்ல வெப்பக்கடத்தி.

கடத்தி என்பதில் ஏன் இங்கு  வலி மிகுகின்றது? கடத்தி என்பது பிறவினையினின்று தோன்றுவதால்.

கடத்து + இ > கடத்தி.

அறிக  மகிழ்க

மெய்ப்பு பின்பு.

  

தீபாவளி வாகன ஊர்வலம் சிங்கப்பூரில்


 [இங்கிருந்த புதுக்கவிதையை இணைக்குறளாசிரியப் பாவாக
மாற்றியுள்ளேன்.  நன்றாக இருக்கிறதா பாருங்கள்.  உங்கள் கருத்தைப்
பின்னூட்டமிடுங்கள்]

கோவிட்   டாக இருந்தா    லென்ன.

குதூக   லமுமே   குறுக்கி   விடுமே 

கடுநோய்த்   தொற்றின் தாக்கம்

குணமருந்   துக்கே   ஒப்பது 

மனம   ருந்தே உணர்ந்தமை வீரே, 

கண்வழிப் புகுந்து தெண்மை   வழிய

நெஞ்ச   கத்துச் சென்றுகொஞ்  சுவது.

தியங்கா   ததீபா    வளியே  யாக

அதுமயங்  காதமா    ணொளிவீ   சிற்று.

சீன நண்பர் சிறப்பெனக் காணவும்

ஆன மலாய்நண்   பர்மனம் மலரவும்

சாலை    வழியாக மெல்லவே,

மாலை மின்விளக்    கொளியில் 

மடுத்தோ   டியது  மந்த    கதியில்.

கண்டும கிழுங்கள் காணொ    ளியிலே

எனவாங்கு,

எப்படி நிகழ்த்துதல் செப்பமென் றெண்ணுவீர்,

அப்படி நீரே மகிழ்வதே

ஒப்பதே என்றுதான் உவந்துகொள் வீரே.



சிவமாலா



தியங்காத - தேக்கமடையாத

தெண்மை -  தெளிவு

மயங்காத - இருள்கலவாத

மடுத்து -  இணைந்து, சேர்ந்து

மந்தகதி -  மென்செலவு,  மென்மையான போக்கு.


புதன், 3 நவம்பர், 2021

மனிதன் மாந்தன் சொல்லுக்கு அமைப்புப் பொருள்.

 மக்கள் தேவர் நரகர் என்போர் உயர்திணை என்பது   பிற்காலத்து இலக்கணியர் தந்த வரையறவு  ( definition )  ஆகும்.  தேவரையும் நரகரையும் நாம் பார்த்ததில்லை என்பதில் ஓர் உண்மையுண்டு.  இவர்கள் மேலுலக, கீழுலக வாசிகள் என்றால் நாம் பார்த்ததில்லை என்பதே உண்மை.  உயர்ந்த குணங்கள் உடையோர் தேவர்;  வெறுக்கத்தக்க குணங்கள் உடையோர் நரகர்,  ஆனால் நம்முடன் தாம்  உள்ளனர் என்றால்,  பார்த்திருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.  ஆனால் நம் எதிர்பார்ப்பு அல்லது பட்டறிவு, இவர்கள் யாவரும் ஒப்புமை உடையவர்கள் என்பதுதான். மக்கள்போல் நிமிர்ந்து நடப்பவர்கள்.  உறுப்புகளிலும் ஒற்றுமை உடையவர்கள்.  ஆனால் மக்கட்சுட்டே உயர்திணை என்பது தொல்காப்பியனார் தந்த வரையறவு ஆகும்.

பிறப்பு ஒக்கும் என்பதே நாயனார் தம் குறளில் தந்த ஒளி ஆகும்.  நாய் பூனை முதலியவையும் பாலூட்டிகள்தாம்.  சில ஒப்புமைகள் உள்ளன என்றாலும் வேற்றுமைகளும் பல உள்ளன.

ஒப்புமை அல்லது ஒத்திருத்தல் என்பதற்கு இன்னொரு சொல் மானுதல் என்பது. இதன் அடிச்சொல் மான் என்பதே.

இப்போது மாந்தன், மனிதன் என்ற சொற்களைப் பார்ப்போம்.  இவற்றுக்கு நாம் முன் வேறுபொருளை  அடிச்சொல்லுக்குக் காட்டி விளக்கினோம்.  ஆயினும் ஒத்தல் என்ற  கருத்தாலும் இச்சொற்களைக் காணலாம்.

மானுதல் - ஒத்தல்.   மான் -  அடிச்சொல். பொருள்:  ஒப்புமை.

மான்+ து + அன் = மாந்தன்.

மன் என்பது மான் என்பதன் குறுக்கமெனக் கொண்டு:

௳ன் + இது + அன் = மனிதன்.

ஒப்புடையவன் : தம்முள் தாம் ஒப்புடையவர், அல்லது தேவர் நரகர் என்போருடன் ஒப்புடையவன், சீனர் ஆங்கிலேயர் என யாருடனும் ஒப்புடையவன்.  இந்த ஒப்புக்கருத்து, சில வகைகளில் விளக்க இடந்தரும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு  பின்.


செவ்வாய், 2 நவம்பர், 2021

தீபாவளிச் சாப்பாடு

 தீபாவளிப் பண்டிகை  ---  அதைக்கொண்

டாடுவதும்  எண்டிசை!

தாபாவொடு நல்லிசை ---- கனிச்சாறு

தாகமதற்  கில்லிலே.


இருப்பதும்  இருபதுபேர் ----  ஆயினும்

இருவரே வந்துசெல்வார்.

வெறுப்பதும் நோய்நுண்மியே---- அதுதரும்

வேதனை   விளைமுடிவே.


மிச்சமோ  அண்டாவிலே ---- எடுத்து

மேல்வரா  அன்பர்கட்கே,

உச்சிமுன் பைக்கட்டுகள் ---- தருவோம்

உண்ணுக என்றுசொல்வோம்.


வேறென்ன நாம்செய்வது ----- கட்டு

விலகாத  சட்டநிலை!

யாரும் உண்டுமகிழ் ---- என்பது

யாம்பாடு  தீபாவளி. 


எண்டிசை - எட்டுத்திசை மக்கள்

தா பா -  தருக பாட்டு.

இல்லிலே - வீட்டிலே

மேல் வரா - மேலே வீட்டுக்குள் வரமுடியாத

இருபதுபேர் -  விருந்தினர் அழைக்கப்பட்டவர்கள்.

விளை முடிவே -  நாம் செய்த முடிவே. விளை - விளைந்த

கட்டு =  கோவிட நடமாட்டம், கூட்டம் பற்றிய கட்டுப்பாடுகள்.

உச்சி - நண்பகல்

உச்சி முன் -  உச்சிவேளை வருவதற்கு முன்னரே.

யாம் பாடு -  நாங்கள் பாடும்


மெய்ப்பு பின்னர்.