வியாழன், 19 ஏப்ரல், 2018

மயக்குவது : ம~து > மது.

மதுவைக் குடித்துவிட்டு மயக்கம் போகாமல் ஆடிக்கொண்டு
திரிபவனை " மா-போ" என்று மலாய் மொழி பேசுங்கால் சொல்வர்.
இது "  மயக்கம் போகாதவன் "  அல்லது "  மயங்கிப் போனவன் "
என்ற தொடர்களின் முதலெழுத்துக்கோவை என்பது முன்னர்
இங்கு விளக்கப்பட்டதுண்டு. அதுபின் மாபோக் என்று ஒரு
சொல்லானது. குடிக்காத தமிழன் குடித்துவிட்டு ஆடிய தமிழனைப்
பார்த்து தமிழரல்லாதவரிடைச் செய்த வரணனையிலிருந்து
பெறப்பட்ட வடிவம் என்று சொல்வது சரியானது.

எனினும் ஹவாயி தீவிலும் குடித்துவிட்டு மயங்கி நிற்போரை
" மெதுஒ" என்பராம்.  கிரேக்க மொழி   அகரவரிசைகள் :
மெதுஒ,  மெதுஸ்கோ, மெதுசோஸ், மெதெ என்ற சொற்களைத்
தந்து அவை கிரேக்க விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில்
காணக்கிடப்பனவாய் காட்டும்.  மது -  மெது என்ற சொல்
அணுக்கத்தினால்  மது என்ற குறுக்கச்சொல் மிக்கப்
பழங்காலத்திலே பிற மொழிகட்குத் தாவிவிட்டமை
அறியப்படும்.

மயங்குவது, மயக்குவது என்ற சொற்களின் இடை எழுத்துக்களை
நீக்கிவிட மது என்பதே எஞ்சி நிற்குமென்பதை முன்னரே
எடுத்துக்காட்டியுள்ளோம்.   தமிழ்ச்சொற்களை எடுத்து
இடை நிற்கும் எழுத்துக்களையெல்லாம் அகற்றி முதலையும்
கடைசியையும் இணைத்துப் புதிய சொற்களைப் படைக்கும்
தந்திரத்தை  முன் காலத்திலே அறிந்திருந்தனர் என்பதை
அறியவேண்டும்.

இவையெல்லாம் தமிழர்தம் தொல்பழமையைக் கோடிட்டுக்
காட்டுவனவாகும்.

வில் என்பது வளைவுகுறிக்கும் தமிழ்ச்சொல்; இலத்தீன் மொழி
வில், வில்லா முதலியவும் ஆங்கில் வில்லா வரையும் எல்லாம்
இந்த வில்லென்னும் தமிழ்ச்சொல் வாயிலாகப் போந்தவை
என்பதை இலங்கை கலாநிதி (முனைவர்)  பரமு புஷ்பரட்ணம்  முன்னொருகால்
விளக்கி வரைந்திருந்தது கவனத்திற்குரியது.    உரோம் நாடு
நிறுவப்பட்ட காலை தமிழ் நாட்டிலிருந்து மொழிவல்லோர் சென்று
துணைபுரிந்த வரலாற்றை சென்னைப் பல்கலைகழக வரலாற்றுப்
பேராசிரியர் தம் நூலிற் குறித்திருந்ததை ஈண்டு ஓர் இடுகையில்
குறித்திருந்தோம்.

மயக்குவது >  ம( )து  என்பதை உறுதிசெய்வன இவை.
மது என்பது ஒரு தமிழ் இடைவிழுங்கிய சொல் என்பதறிக.
முன் இடுகை காண்க.

கருத்துகள் இல்லை: