சனி, 14 ஏப்ரல், 2018

வட என்னும் சொல்.

வடுகு என்பதோ   மொழிப்பெயர். இது வடக்கில் வழங்கும்
மொழி என்ற பொருளுடையதாகிறது. பெரிதும் தெலுங்கு
மொழியைக் குறிக்கிறது.  ஆனால் வடுகு என்ற சொற்குப்
பல பொருள் உள்ளது .  இரத்தினம் முதலிய கற்களில்
உள்ள குறையையும் குறிக்கும்.  இப்பொருளில் இது
வடு என்ற சொல்லின் தொடர்புகொண்டது.  நூலணிதலை
யும் குறிக்கும். இசையையும் குறிக்கும்.

இங்கு ஆய்வது திசைப்பெயர் மட்டுமே. இது வட என்ற
சொல்லினோடு பிறப்புத் தொடர்புடைய சொல்.

வடு  >வட > வடக்கு.  ( வடதிசை).
வடு > வடுகு   ( வடக்கில் வழங்கும் மொழி)
வடு > வடு+ஐ = வாடை.  ( வடக்குக் காற்று).
வடு> வட > வட+ ஐ = வாடை எனினுமாம்.

இங்கு சிறப்பாக வடக்கு என்று குறிக்கப்பட்டது:  தமிழ் நாட்டின்
வடக்கில் உள்ள நிலப்பகுதி.

வட திசை உயர்ந்தும் தென் திசை தாழ்ந்தும் இருப்பதால்
வடக்கிலிருந்து ஆறுகள் தெற்கு நோக்கி வடிகின்றன.
எனவே வடதிசை நீருடைய திசை ஆகும். நீருள்ள
திசையே வளமான திசையுமாகும். ( இந்தியா).

வள் > வடு > வடு+இ =  வடி.
வள் > வடு > வடக்கு.

இதன் காரணமாகவே தெற்கண மூர்த்தி ( தட்சிணா
மூர்த்தி ) வடக்கில் அமர்ந்துகொண்டு தெற்கைப்
பார்ப்பதாகத் தொன்மம் கூறும்.

தென்கண் உள்ளது தெற்கணம்.    தென் > தெற் (புணர்ச்சித்
திரிபு. கண் = இடம்; கணம் = இடம்.
தெற்கணம் > தெக்கணம் > தக்கணம்> தட்சிணம்.

பக்கி> பட்சி  ; தக்கிணை> தட்சினை.

தக்கு = நிலத்தாழ்வு எனலும் உண்டு.

இவற்றை மனத்தில் வைக்கவேண்டும்.


கருத்துகள் இல்லை: