செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அம்மாவாசை பேச்சுச்சொல்.



அமாவாசை என்பது முன் விளக்கப்பட்டுள்ளது.
அமாவாசையும் ஓர் அழகிய இரவே ஆகும்.  அன்று நிலவில்லை ஆகையால் வானம் முழுக்கருமை கொள்கிறது.  ஒளியும் ஒளியின்மையும் இயற்கையின் நிலைகள் ஆகும்.  ஒளி சிவமும் இருள் விண்ணும் ஆகும்.  விண்ணு என்பது விட்ணு > விஷ்ணு எனவும் திரியும் என்பதறிக.

அம் =  அழகு. 
அம்மை அழகு.

மா =  கருமை;  அதுவே பெரிது எனவும்  பொருள்தரும்.
வானில் நிலவில்லா இரவில் இருள் பெரிது.   ஆதலின்  காரிருள் ஆகும்.  மா என்பது  சிறந்த பொருளுடன் இங்கு திகழ்கிறது,

வாய் -  இடம்.

ஐ -  விகுதி.


வாயை என்பது வாசை என்று திரியும்

நிலவில்லையேல் வானம் இரவில் ஒரு பெரிய கரிய இடமாகிவிடுகிறது
என்பது பொருள்.

அம்மாவாயை என்பது அம்மாவாசை என்றே சிற்றூர்களில் சொல்லப்படும்.  அது பின் அமாவாசை என்று குறுக்கப்பெற்றுப் பிறமொழிகளிலும்  ஏற்கப்பட்டது.

இன்னும் அம்மா-வாசெ என்றுதான் பேசும்போது சொல்வர்.

அம்மாவாயை >  அம்மாவாசை >  .அமாவாசை > அமாவாஸ்யா 

அன்று வானம் ஓர் அழகிய பெரும் இருளிடம். வேறொன்றும் இல்லை.

ஒளியிலும் அழகு;
இருளிலும் அழகு.

அம்மாவாசையில் நோன்பிருப்பது பண்டைத் தமிழர்
வழக்கம் தான். பிள்ளைப்பேறு கிட்டும் என்று நம்புவர்.




கருத்துகள் இல்லை: