ஒவ்வொரு
மொழிக்கும் ஓர் இயல்பு அல்லது தன்மை என்பது இருக்கின்றது. ஒரு மொழியிலிருந்து
இன்னொரு மொழிக்குத் சொல்தாவும்போது இவ்வியல்பின் காரணமாகச் சொல்லானது மாற்றமடைகிறது. இந்திய மொழிகளில் தருமம் என்ற சொல்,
"^தர்மா" என்று ஒலிக்கிறது
என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சொல் மலாய் மொழிக்குள் ஏகும்போது டெர்ம derma என்று பலுக்கப்படுகிறது. ( மென்டர்ம menderma ).
ஆங்கிலத்திலும் இது டர்மா dharma என்றே
ஒலிக்கிறது. இதனை இத்தனை கடின ஒலிகொண்டு வெளிப்படுத்துவது தமிழர்களின் நாவுக்கு ஒத்து
வருவதில்லை. தமிழர் அல்லாத அவர்களெல்லாம் ''டர்ம"
என்று ஒலித்து மகிழ்வு கொண்டாலும் நாம்
நமக்கு ஒத்தவாறு "தருமம்"
(தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்)
என்றுதான் பேசுகிறோம்.
இதே தருமம் என்ற சொல் இந்திய எல்லை
கடந்து சீனர்களிடையே போகுமானால் டர்மா என்பதுகூடப் பொருந்துவதில்லை. மண்டரின் மொழியின்
இயல்புக்கேற்ப "டம்மா" என்று மாறிவிடுகிறது. அதாவது இடைஞ்சலாகத் தெரியும் ஒலியை விட்டுவிடுவர்.
"ஊட்லி" என்ற ஆங்கிலச் சொல்லை
மண்டரின் மொழிக்குள் கொண்டுசெல்ல வேண்டுமானால், "ஊ-லி" என்றுதான் சொல்லவேண்டும். டகர ஒற்று
( ட் ) இடையில் வந்து ஒலியொழுகுதலைத் தடுப்பதுபோலிருப்பதால்,
அவர்கள் நாவிற்குத் துன்பம் விளைகிறது.
குட் கட் மட் என்றெல்லாம் வல்லெழுத்துக்களைப் போட்டுப்
பேசுவது அவர்களுக்குப் பழக்கமில்லை. கடுமையான உச்சரிப்பு. என்ன குண்டுபோடுவதுபோல் டா டூ என்கிறான்!
என்று சீனப்பாட்டி கோபித்துக்கொள்வாள். "பேசுகிறானா? எதையோ உடைக்கிறானா?......."
நம் பெயர் அவனுக்குக் கட்டமாக (கஷ்டமாக ) இருக்கிறது. அவன்பெயர் நமக்கு இன்னலாகவும் நாவிடியாகவும் உள்ளது.
நம் பெயர் அவனுக்குக் கட்டமாக (கஷ்டமாக ) இருக்கிறது. அவன்பெயர் நமக்கு இன்னலாகவும் நாவிடியாகவும் உள்ளது.
ஒருதடவை இங்கு தரப்படும் தகவுடைய எடுத்துக்காட்டுகளைக்
கேட்டுவிட்டால் மொழிகளில் ஒலிமரபு என்பது நன்றாகப் புரிந்துவிடும்.
பேசுவதற்கு
முதன்மையானது நாக்கா அல்லது உதடுகளா? பல மொழிகளில்உதடுகள்
முக்கியமானவை. "Thy own lips hath said....." என்று விவிலிய நூல் மொழிபெயர்ப்பு வருகிறது.
பத்மா என்ற பெயரை Padma
என்று ஆங்கிலத்தில் எழுதுகிறோம். மண்டரின் மொழியில் "பா-மா" என்று சொல்லவேண்டும். மதுரை என்பதை....? Madura என்று சொல்வர். மண்டரினில்
மதுரையை " மாராய்" எனலாம். டேவிட் மார்ஷல் என்பதை "தாஹுவே
மாஸியாவ்" என்றுதான் சொல்லவேண்டும்.
கேடுது
என்று அமைத்துப் பின் கேது என்று சொல்லாக்கம் செய்வதும், பீடு+ மன் (பீடுபெற்ற மன்னன்) என்பதை பீமன், வீமன் என்று மாற்றுவதும் தரும என்ற சமஸ்கிருத வடிவத்தை
தம்மா என்று பாலிமொழியில்
மாற்றுவதும் -- இப்படிப் பட்ட தந்திரம்தான். நம்மொழியில் ஒலிமரபுப் படி பீடுமன் என்றே வைத்துக்
கொள்ளலாம் என்றாலும், பீமன்
என்று மாற்றுவது:
வேற்றுமொழி இயல்புக்கேற்ப
மாற்றியமைப்பதாகவே கொள்ளலாம். மாற்றியமைத்தபின் அச்சொல் உருத்தெரியாமல் இருப்பது
கதைகளை மறைமுகமாகத் தெரிவிக்கவும் உண்மைப்பெயர்களை இரகசியப்படுத்துவதற்கும் அமைத்த விதத்தை அறியமுடியாமல் செய்வதற்கும் நன்`கு பயன்படுவன
ஆகும்.
இத்தகு
வித்தைகளை நம் முன்னோர் நம் மொழிகளில் நன்`கு கையாண்டிருக்கின்றனர்.
யானைக்குப் பெயர் ஒன்று வைக்கவேண்டி
நேர்ந்தது. அதாவது ஒரு
பொதுப்பெயர். முன்னரே பலமொழிகளி லெல்லாம்
வழங்கும் பெயர்களைக் கடன்வாங்கியிருக்கலாம். என்ன கடன்? திருப்பிக் கொடுக்கவேண்டியதில்லையே. பிறமொழிப் பெயரை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால்
பெயர் வேண்டும் என்று தீர்மானித்துவிட்டனர். யானையின் முகத்தை நோக்கினால் பல பக்கலிலும் கடைந்து
செய்யப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. வாயில் பல் (கொம்பு) நீண்டமைபற்றி பன்றி என்று
பெயரிட்ட மரபையே பின்பற்றி, கடை+ஜா
என்று வைக்கலாம் என்பது கூறப்பட்டது. டையில்
வரும் ஐகாரத்தைக் குறுக்கி, கடஜா
ஆக்கினர். அப்போதும்
சரிப்படவில்லை. டகர வல்லொலி நீங்காமல்
நின்றுவிட்டது. தமிழ்
மொழியிலிருந்து எடுத்தால் இது ஒரு வேண்டாத இடர். என்ன செய்வது. டகரத்தை எடுத்தனர். கடஜா ( முகம் கடைந்து
பிறந்தது) என்ற சொல் கஜா
என்று மாறியது. இப்போது எவ்வளவு அருமையாக உள்ளது!! கடையப்பட்டவனே என்பதினும் கஜனானனே என்பது அருமை. இந்திய சரித்திரம் எழுதிய ஜான் கே இப்பொருளைத் தம் நூலில்
முன்வைக்கிறார்.
எடுத்துக்காட்டுகள்:
இடு > இட்டம் : இடு > இடுச்சை > இச்சை .
பரி + இடுச்சை > பரீட்சை .
படி > பஜி :
எடுத்துக்காட்டுகள்:
இடு > இட்டம் : இடு > இடுச்சை > இச்சை .
பரி + இடுச்சை > பரீட்சை .
படி > பஜி :
முருகனைப்
படி மனமே - திருமால்
மருகனைப்
படி மனமே.
படி என்பது பாட்டுப் படி
என்று பொருள். படிப்பது வேறு பாடுவது வேறு என்று நீங்கள் வாதிடலாம். இரண்டும் அந்தக் காலத்தில் ஒன்றுதான்.
பாட்டுப் பாடு என்பது பாட்டுப் படி என்றாலும் அப்பொருளே
தரும். அப்போதெல்லாம் நம் மொழி பாடும் மொழியாகவே இருந்தது. எல்லா வாத்தியார்களும் தங்கள் பாடங்களைப் பாடியே கற்பித்தனர்.
படி+ அம் = பாடம் என்று கூறப்படினும்
அங்கனமின்றி பாடு+அம்
என்றாலும் பாடம் என்றே வருதல் காண்க. பேசு + ஐ = பேசை > பாசை > பாஷை என்றாலும் பாடு+ ஐ = பாடை> பாஷை என்பதும் பொருந்தியே வருகிறது. தாயும் மகளும் என்றாலும் மகளும் தாயும் என்றாலும்
ஒன்றுதான் என்று
கூறுவது இதற்கு சரியாகிறது. இவையெல்லாம் இருபிறப்பிச் சொற்கள் என்றே கொள்ளவேண்டும்.
நிற்க, முருகனைப் படி என்பதில் பாட்டுத்தான் பாடச் சொல்கிறார்கள் என்று
எடுத்துக்கொள்வோம். எதுவாயினும், வேற்றுமொழிக்கு ஊட்டமாகும்போது,
படி என்பதைப் பஜி என்று மாற்றி,
முருகனைப்
பஜி மனமே -- திருமால்
மருகனைப்
பஜி மனமே
என்பதும் அழகாகவே உள்ளது. படி பஜி அயற்செலவு உருவத்தை ஆராதிப்பீர்களாக. பஜி என்பதிலிருந்து பஜி+அன் + ஐ என்று இணக்குவித்து, பஜனை என்று புனையலாம்; பஜி+அன் = பஜன் என்று வனையலாம். எல்லாம் அழகாகவே உள்ளது.
தொல்காப்பியர் சும்மா சொல்லவில்லை.
வலிக்கும்வழி வலிக்கலாம்; மெலிக்கும்வழி மெலிக்கலாம். எப்படிச் செய்தால் சொல் அழகாய் அமையுமோ அப்படியே செய்
மனமே. நெடிது வாழ்வாய்.
இந்தமாதிரி
தந்திரங்களையெல்லாம் சீனர்களிடமிருந்தோ கற்றனர். நம் சங்கதத்திலும் சீனச்சொற்களும்
உள்ளனவே!
Note:
After writing and completing a draft post the
writer reads through and makes certain changes and
saved them. After posting the computer is switched off.
When the computer is restarted several hours later
it is surprising to find all edits missing and the
unedited version reappearing. A virus or bug
is performing this unwanted service and increasing our
workload.
Now we have edited again.
Note:
After writing and completing a draft post the
writer reads through and makes certain changes and
saved them. After posting the computer is switched off.
When the computer is restarted several hours later
it is surprising to find all edits missing and the
unedited version reappearing. A virus or bug
is performing this unwanted service and increasing our
workload.
Now we have edited again.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக