வாக்கெடுப்பில் நம்பிக்கை மேவி நிற்க
வானுயர்ந்த ஒப்புதலைப் பெற்று வென்றார்;
தாக்கிமொழி பேசிடுவோர் தலைக விழ்ந்தார்
தக்கதிது மோடிபெற்றார் தரணி மேலே;
ஆக்கமென நாட்டிற்குச் செய்த தொண்டே
அத்தனையும் காட்டுமிதே ஆடி ஆகும்
தூக்கமதில் நாட்கழித்த அரசு முன்னாள்
தொண்டெனவே மிண்டிஎழும் அரசு இந்நாள்;
பதவியென்ற ஆசைதலைக் குள்ளே பாய்ந்து
பாரினிலே பற்பலவும் பகரும் பான்மை
உதவியென்றும் ஒப்புவதற் கில்லை அம்மா;
ஒதுக்கிவிட இயலாதார் இழிந்த வாய்கள்
பதமிழந்து மொழிவனவே பாவம் கீழோர்;
பார்த்திருப்போம் காத்திருப்போம் திருந்து வாரே
நிதம்காணும் உண்மைகளை மறைக்க லாமோ
நேர்மைபெறல் எதிர்தரப்புக் கடனு மாமே.
வானுயர்ந்த ஒப்புதலைப் பெற்று வென்றார்;
தாக்கிமொழி பேசிடுவோர் தலைக விழ்ந்தார்
தக்கதிது மோடிபெற்றார் தரணி மேலே;
ஆக்கமென நாட்டிற்குச் செய்த தொண்டே
அத்தனையும் காட்டுமிதே ஆடி ஆகும்
தூக்கமதில் நாட்கழித்த அரசு முன்னாள்
தொண்டெனவே மிண்டிஎழும் அரசு இந்நாள்;
பதவியென்ற ஆசைதலைக் குள்ளே பாய்ந்து
பாரினிலே பற்பலவும் பகரும் பான்மை
உதவியென்றும் ஒப்புவதற் கில்லை அம்மா;
ஒதுக்கிவிட இயலாதார் இழிந்த வாய்கள்
பதமிழந்து மொழிவனவே பாவம் கீழோர்;
பார்த்திருப்போம் காத்திருப்போம் திருந்து வாரே
நிதம்காணும் உண்மைகளை மறைக்க லாமோ
நேர்மைபெறல் எதிர்தரப்புக் கடனு மாமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக