தெற்றொன்று கண்டுயர் தேடாத் திருத்தமே
மற்றொன்று மேல்வரத்
தேங்கிற்றே---உற்றொன்று
நல்ல தியற்றிட நான்முனைந்த போதிதில்
சொல்லத் துயராம் தடை.
விளக்கம்:
ஒரு சிறு பிழை கண்டு அதைத்
திருத்தமுனைந்த போது இந்த வலைப்பூவின் மென்பொருள் திருத்தங்களைத் தடுக்கிறது.
இதன் பொருள்: தெற்றொன்று – பிழையொன்று; கண்டு – சட்டென்று
புலப்பட்டு; தேடாத் திருத்தமே -- நானே தேடிக்கண்டுபிடிக்காத ஒரு பிழைத் திருத்தம்தான்
இது; ஆதலால் உயர் என்று அடைமொழி
தரப்படுகிறது; தேடாமல் தானே
கிட்டியது ஒரு புதையல் கிடைத்தது போல;
என்பது கருத்து. மற்றொன்று மேல்வர ---- இந்த வலைப்பூவின் மென்பொருள் மூலமாக
இடுகையை முன்விரித்துத் திருத்தம் செய்ய உதவ இயலாமை அல்லது மறுப்பு ஆகிய நிகழ்வு உண்டாக; ;
தேங்கிற்றே - தாமதம் ஆகிவிட்டதே; உற்று -
மனத்தினால் திறமான நோக்கத்தைக் கொண்டு;
ஒன்று நல்லது இயற்றிட --- ஒரு
நல்ல காரியத்தைச் செய்ய; நான் முனைந்த
போது --
நான் முயற்சி மேற்கொண்ட நேரத்தில்:
இதில் --- இம்முயற்சியில்; சொல்ல =
வெளியில் எடுத்துக்கூற; துயராம் --- மனத் தொல்லையை விளைவிக்கும்; தடை --- மேற்செல்ல முடியாத குறுக்கீடு ; உண்டாகிறது என்று முடிக்கவும்.
தேடாத் திருத்தமே: பிழையைத் தேடித்தான் திருத்தம் செய்கிறோம்,
திடீரென்று ஒரு பிழை கண்முன் தோன்றும்போது அதைக் குறித்து வைத்துக்கொண்டு அப்புறம் மீண்டும் தேடினால் அது தேடிய திருத்தம்; உடன் செய்ய முனைவது இம் மென்பொருளின் சுற்றுச்சார்பில தேடாத் திருத்தம் என்று உணர்க; தேடாப் பிழைக்கு அப்புறம் செய்வது தேடித் திருத்துவது; உடன் செய்வது தேடாமல் திருத்துவது. சில பிழைகளைக் கண்டு பின் திருத்த முனைந்த போது அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிழையைக் கண்டது தொலைபேசித் திரையிலாகலாம்; அதை அங்கு திருத்த இயலவில்லை; பின்னர் மடிக்கணினியிலோ மேசைக் கணினியிலோ கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதில் சில தேடியும் தோன்றவில்லை. சில உள்ளுறைவில் ஒரு மாதிரியாகவும் வெளியீட்டில் வேறுமாதிரியாகவும் தெரிகின்றன. மென்பொருள் என்பது பல காரணங்களால் அவ்வளவு எளிதானதாக இல்லை, வைரஸ் என்னும் கள்ள மென்பொருள் ..................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக