இன்று நாம் தெரிந்துவைத்துள்ள சில நெறிமுறைகளை மறு ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்கொள்வோம்.
கொள் என்பது கொழு என்று ளகர ஒற்று ழுகரமாக மாறுவதுடைத்தென்பதை முன்னர் அறிந்து இன்புற்றோம்.
கொள் > கொழு.
கொழுப்பு உடலில் ஏற்படும்போது, திட்பமான நெய்யை உடலானது கொண்டுவைத்துக்கொள்கிறது.
கொள் > கொண்டு. திட்பநெய்யை உடல் கொள்கிறது. அப்படிக் கொள்ளப்படுவதே கொழுப்பு.
ஒரு பெண்ணைக் கொள்பவன் - அதாவது மனைவியாய்க் கொள்பவனே கொழுநன். ( கொழுந்தன் என்பது அதிலிருந்து வருவதே என்றாலும் இன்னொரு சொல்).
கொள் >( கொள்நன் )> கொழுநன்.
ஒரு செடி இளம் இலைகளைத் தன்னில் வளர்க்கின்றது. ஒவ்வோர் இள இலையையம் அச்செடி கொள்வதால் அது கொழுந்து ஆகிறது. இங்கு கொள்வதாவது வளர்த்துக் கொள்ளுதல்.
கொள் கொழு > கொழுந்து.
தன் புருடனுக்கு இளையவனைக் கொண்டிருக்கின்றபடியால் அவன் அவளுக்குக் கொழுந்தன் ஆகிறான்.
கொள் > கொழு > கொழுந்தன்.
ளகர ஒற்றில் முடிந்த சொல் ழுகர இறுதி பெறும். இதை மேலே கண்டோம்.
ஆனால் சில சொற்களில் அது ழுகரத்தில் முடியாமல் டுகரத்தில் முடியும்.
இப்படிச் சொல்கையில் ழகர டகர பரிமாற்றத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பாழை > பாடை (பாஷை).
வாழகை > வாடகை ( வாழ்தலுக்கான கூலி).
டுகரத்தில் முடிவன:
பள் > படு. (பள்ளம் > படுகை).
நீள் > நீடு. ( நெட்டிமை). நீடு வாழ்க என்பதில் பொருள் அறிக.
நீடு +அம் = நீட்டம்.
குள் என்பது ஓர் அடிச்சொல். அது குடு என்று திரியும்.
மக்கள் தனித்தனியாக இருந்தால் பரவலாக இருப்பர்; அப்போது அதிக இடம் எடுத்துக்கொள்வர் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு குறுகிய இடத்தில் பலர் இருந்தால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் இடம் சிறியதாகவே இருக்கும்.
அப்போது அவர்கள் கூடி இருக்கிறார்கள் என்று பொருள்.
குடும்பம். குடி என்பதெல்லாம் சிறிய இடத்தில் பலர் இருப்பதைக் காட்டுகிறது.
சிறிய இடம்கொண்டு பலர் உளராவதுதான் கூடியிருத்தல்.. இது இடம் ஆள் தொகை உறழ்வுக் கருத்தாகும்.
குள் > குடு
குடு > குடி.
குடு > குடும்பு. குடும்பு> குடும்பம்.
குடு > கூடு. (முதெலெழுத்து நீள்வது).
குடு >கூடு > கூட்டம்.
கூடு > கூட்டு.
குள் > குடு: குள் > குழு. குடு> குழு. ழு>டு,
ளகர டகர ழகரப் பரிமாற்றம். அறிவீர்.
பிழைத் திருத்தம் பின்
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக