வாஸ்தவம்:
வாஸ்தவம் என்பதை பலமுறை பேச்சில் கேட்டிருக்கிறோம். வாய்மை என்ற சொல்லும் அதையே குறித்தது. என்றாலும் அது பெரும்பாலும் இலக்கிய வழக்கில் மட்டுமே உண்டு. ஓய்வாக நண்பர்கள் வந்து பேசும்போது வாய்மை என்று சொல்வதில்லை. ஒருவேளை இலக்கியத்தைப் பற்றிய உரையாட லானால் வாய்மை என்ற சொல்லைக் கற்ற நண்பர்கள் பயன்படுத்துவ துண்டு,

வாய் > வாய்மை.
வாய் > வாய்த்துவம் > வாஸ்துவம் > வாஸ்தவம்.
இதில் இறுதியில் வந்த தவம் என்ற சொல்லை நோக்குங்கால், வாயினால்கூட ஒரு தவம் மேற்கொள்ளலாம்போல் தெரிகிறது!! உயர்த்தி என்பதை ஒரு தொழிற்பெயராகக் கொண்டு இதுவரை யாரும் போதிக்கவில்லை என்று தெரிகிறது. எல்லா போதனை இடங்களிலும் யாமில்லை ஆதலால் எமக்குத் தெரிந்தவரை இல்லை. உயர்> உயர்த்தி என்ற சொல் நாளடைவில் ஒரு முகமாவு பூசி அழகடைந்த பெண்ணைப் போல் ஒஸ்தி என்று சிலரால் உச்சரிக்கப்படுகிறது. உயர்த்தி இல்லையென்பது அவர்களுக்கு ஒஸ்தி யாகவே உள்ளது. அது எவ்வாறாயினும் வாய்த்துவம் (வாய் > வாய்த்து; இங்கு து = உரியது உணர்த்தும்; +அம் என்பது விகுதி. ) பின் வாஸ்தவம் ஆனது. துவம்> தவம் . தவமொன்றுமில்லை; து அம் > துவம் தான். இரண்டு விகுதிகள்.
வாய்த்துவம் என்பதே முன்வடிவு ஆதலின் வாஸ்தவம் என்பதை வாய்த்துவம் என்றே எழுதினால்தான் என்ன? வாய்மை என்ற செந்தமிழ்ச் சொல்லின் "வாய்" என்ற அடிச்சொல் கொண்டுதானே வாய்த்துவம் எனற்பாலதும் அமைந்துள்ளது காணீரோ?
நெய்த்தோலி:

நீங்கள் நெய்த்தோலி சாப்பிடுவதுண்டோ? அப்படியானால் நெய்த்தோலியில் யகர* ஒற்றுத் தொலைந்து, நெத்தோலி > நெத்திலி ஆனதை வாய்த்தி > வாத்தி (teacher ) யுடன் ஒப்பிட்டு மகிழ்ந்துகொண்டே சாப்பிடுங்கள்.
ஓகாரம் இகரமாகுமோ? ஆகாது என்றால் நெய்த்தோலியின் தோ(ஓ) பின் தி (இ) ஆனதைப் பார்த்து ஆகுமென்று உணர்வது கடனே.
உடல், தேகம். :
உடல், தேகம். :
நம் உடலின் உள்ளுறுப்புகள் மேலாடைபோல் தோலைப் போர்த்திக்கொண்டு , அதாவது உண்மையில் தோலை உடுத்துக்கொண்டிருப்பதால், அது உடலாகிவிட்டது. உடு> உடல். அல் என்பது ஈற்று விகுதி, என்புதோல் போர்த்த இவ்வுடல் தேய்வு கண்டு தேவு காணும். தேய்ந்து அழிவதாகலின், அது தேய்+கு+அம் = தேய்கம் ஆனது. வழக்கம்போல் இதுபோலும் சொற்களில் யகர ஒற்று வீழ்தலின், தேகம் என்று இருக்கை கொண்டது. யாக்கை நிலையாமையைத் தமிழ் நூல்கள் பல்லாற்றானும் கொணர்ந்து நிலைநாட்டுகின்றன. இதன் பின்னணியில் அமைந்த சொல்லே தேகம். ஏனை மொழியிலும் சமயங்களிலும் வலியுறுத்தப்படுவதும் இதுவாகும். சொல்லமைந்த தொடக்கத்தில் இது இறுதியழிவு வலியுறுத்தும் சொல்லாதலின் பெரிதும் வழங்கப்படவில்லை. ஒரு மணமகன் புதுப்பெண்ணைத் தொடும் காதல் காட்சிக்கு இச்சொல் பொருந்தாத சொல்லே. காரணம் ஆயிரம் காலத்துப் பயிரான மணத்தைக் குறிக்க எழும் காட்சியில் மங்கலமற்ற எண்ணத்தை அது முன்னிறுத்துகிறது. காலம் செல்லச் செல்ல அதன் தேய்வு அல்லது அழிவுக் கருத்து மறைந்தபின்னரே இது வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே பொருத்தமாகும். இச்சொல் ஏனை மொழிகளில் ஏறிய காலை இம் மனத்தடை இருக்கவில்லையாதலால் அவ்விடங்களில் இச்சொல் நன்`கு ஏற்றுக்கொள்ளப்பட்டதென்று கருதுதலே உண்மையோடு ஒட்டியதாகும்.
இராமலிங்க அடிகள் இச்சொல்லை நன்`கறிந்து பயன்படுத்தியுள்ளார். அவர்:
"உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உன்னை மறவேன்..."
என்று இறையிடம் இறைஞ்சுகின்றார். அழிவு பற்றிக் கூறுமிடத்து இச்சொல் பெய்யப்பட்டிருப்பதால் மிகுந்த பொருத்தமுடைத்தென்று ஒப்புதலே அறிவாம்.

இந்த உள்ளுறுப்புகள் யாவும் தோலை மேலாகப் போர்த்திக்கொண்டதனால் உடலாகியும் தேய்ந்தழிதலால் தேகமும் ஆனது. இன்னும் சொல்லப்போனால் ய ர ல வ ழ ள ஆகியவற்றில் ஒற்றுக்களும் பிற ஒற்றுக்களும் கெட்டுத் திரிசொற்களும் அமையும். எவனாவது வந்து சொல்வான் தெரிந்துகொள்ளலாம் என்றிருக்காமல் சொந்தமாகவே கண்டுபிடியுங்கள். அதுவே நன்று.
உடலின் மேற்புறத்தையே நாம் கண்டு அதனை உடல் என்று அறிகிறோம். அதற்கு அழகுப் பூச்சுக்களும் வாசனைகளும் தடவுகின்றோம். அதனால் மேனி என்ற சொல் இத்தகு சூழ்நிலைகளில் பொருத்தமுடைய சொல்லாகும். சந்தனத்தைத் தேகத்தில் பூசிக்கொண்டாள், யாக்கையில் பூசிக்கொண்டாள் என்பதை விட மேனியிற் பூசிக்கொண்டாள் என்பது பொருத்தமான சொல்லாட்சியாகும். மேல்> மேலி> மேனி என்றமைந்தது இது. "மேல" என்ற முற்றுச்சொல் மேன என்றே தொல்காப்பியனாரால் ஆளப்படுகிறது. லகரம் னகரமாவது சொன்னூல்படி அமைந்தது ஆகும். பிற மொழிகளிலும் இத்திரிபு உள்ளது. மேலோன் என்ற சொல்லும் மலையாளத்தில் மேனோன் எனவும், மேலன் என்பது மேனன் எனவும் வருமென்பதறிக.
மேனகை என்ற பெயருக்கு வேறு சொல்லமைப்பைப் பிறர் தந்திருப்பினும், மேல்+நகை = மேனகை எனவரும்; அது ஆகுபெயராய் மேலான நகை அல்லது சிரிப்புடையாள் என்று பொருந்தும் பொருள் தரும். ஆனால் இதில் வரும் "ன" என்பது புணர்ச்சியினால் தோன்றியதாகும். மேனகை என்பது கிட்டாதவருக்கு மேல் வருத்தம் தருபவள் என்றும் தமிழ்வழிப் பொருள் கூற ஒக்குமெனினும் அது ஈண்டு சொல்லப்படாது.
யாக்கை என்பது யாத்தல் அல்லது கட்டுதல் என்ற பொருளி லமைவுற்றதாகும். யா+கை என்று கூடிய இச்சொல்லின் கை என்பது தொழிற்பெயர் விகுதி.
சோகம், மேகம், வாத்தியம்,
சோர்தல் என்பது உடல் சோர்தல், மனம் சோர்தல் என்றிரு வகை.இதைக் குறிக்க எழுந்த சொல்லே சோகம். சோர்+கு+அம் = சோர்கம் ஆகி, பின் ரகர ஒற்று வீழ்ந்து சோகம் ஆயிற்று. ( ரகர ஒற்று ). மேலிருப்பது மேகம். மேல்+கு+அம் = மேகம் ஆயிற்று. ( லகர ஒற்று ). பழங்காலத்தில் இசைக்கருவிகளை எல்லாம் ஒன்றாக வைத்து இயக்கி மணவிழா போன்றவற்றில் வாசித்தார்கள். இயம் என்றாலே இசைக்குழு. வாழ்த்திப் பாடி இசைத்தால் அது வாழ்த்தியம். அது பின் திரிந்து வாத்தியமானது. ( இங்கு ழகர ஒற்று வீழ்ச்சி ). பின்னாளில் செத்தவீட்டில் வாசித்தாலும் வாத்தியம் ஆகிவிட்டது. இது ஒரு சிக்கன நடவடிக்கை. வாழ்த்தி இசைக்கும் கருவிகள் வாழ்த்தியமானால் அழுது இசைக்கும் கருவிகள் அழு+ இயம் = ஆழியம் என்றோ சோர்+கு+ இயம் = சோர்கியம் > சோகியம் என்றோ ஒரு சொல்லை நம் மக்கள் படைத்துக்கொள்ளவில்லை. உள்ள சொற்களையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். பிழைத்த வீட்டில் தேநீர் அருந்தினால் அது தேநீர்; இறந்த வீட்டில் தேநீர் அருந்தினால் அதுவும் தேநீர்தான். இன்னொரு சொல் தேவை இல்லை. வாழ் என்பதில் ழகரத்தை எடுத்துவிட்டால் போதும் என்று விட்டது ஒரு கெட்டிக்காரத் தனம் என்றே நாம் சொல்லிக்கொண்டிருப்போம்.
ஆனால் எல்லா இசைக்கருவிகளும் பங்குகொள்ளும்படியாக முழுமையான குழுவாய் வாசிப்பது ஆரியம் என்று சொல்லப்படும். அப்போது ஆடும் கூத்து ஆரியக் கூத்து. ஆர் = நிறைவான; இயம் = வாத்தியங்கள் அமைந்த; கூத்து = நடனம். ஆரிய என்பது ஆர் இய(ம்). மனிதர் எவரையும் குறிக்கவில்லை.

ஆரிய என்பது உயர்ந்தோன்; அறிவாளி என்ற பொருளில்தான் இந்திய நூல்களில் காணப்படுகிறது. அதுவே சரியான பொருள். ஆர் - வந்தார் போனார் என்பதும் தமிழில் பலர்பால் விகுதியாய், இன்றளவில் பணிவுப் பன்மையாய் அன்றோ பயன்படுகிறது. ஆர்தல் என்பது நிறைவை அன்றோ குறிக்கிறது. வளமார் தமிழகம் என்றால் வளம் நிறை தமிழகம். வளம் ஆர்ந்த தமிழகம்; வளம் ஆர்கின்ற தமிழகம்; வளம் ஆரும் தமிழகம் என்று முக்காலத்திலும் வரும். அறிவார்ந்த விளக்கம் இதுவே.
ஆரிய என்பது இனப்பெயர் அன்று. வெளிநாட்டான் எப்போதும் வந்துகொண்டிருப்பான்; முன்னும் வந்தான். இப்போதும் வருகிறான்; இனிமேலும் வருவான்." வந்தவன் " எல்லாம் அறிவாளி என்று ஒப்புவீரோ? அவர்களில் எத்தனை அறிவாளிகள்? எத்தனை மடையர்கள்?

ஆரியமும் ஆசிரியமும்.
ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும். எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது. வாத்தியார் அறிவாளி என்பதை ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி, ஆசிரியறிவாளி என்றாக்கி, அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி, ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் நல்ல களிப்பாக்குமன்றோ?

ஆசிரிய மேதகை என்பதினும் வேறன்று அது.
எழுத்துக்களைத் திருப்பிப்போடும் தந்திரம்
பல சொற்கள் வெறும் ஏமாற்றுவேலைகளாகியுள்ளன என்று எண்ணத்தக்கவை யாகலாம், இவற்றில் எப்படி விளையாடியிருக்கின்றனர் என்று உணர்ந்தால் உலக முற்றுகாறும் ஆனந்தமாய் இருக்கலாம். எ-டு: காவல் (கா) ஆகும் (ஆ) இல்லம் ( இல் ) > (திருப்பிப் போட்டு) இல்+ஆ+கா = இலாகா. நடவடிக்கைகள் தொடருமாறு அத்தொடர்வினைக் காக்கும் இல்லம் : இலாகா. . இது எந்த மொழிச்சொல் என்று கேட்டவன் மடையனானான். அவனை ஏமாற்றியவன் அறிவாளி,

*பிழைத்திருத்தம்.
பிழைகள் பின் திருத்தம் பெறும்.
பிழைகள் பின் திருத்தம் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக