பண்டைக் காலத்தில் அம்மன் வழிபாடு எங்கும் பரந்து கிடந்தது. இதனால் மூழ்கிப்போன குமரிக்கண்டத்திற்கும் "குமரி" எங்கிற பெயர் ஏற்பட்டது. அங்கு வாழ்ந்த பெருந்தொகையினர் அவைவரும் குமரித் தெயவத்தை வணங்கியோராய் இருந்தனர்.
அது கடலுள் சென்று மறைந்து அடுத்திருந்த நிலப்பரப்பிற் குடியேறிவிட்ட காலத்திலும் குமரித் தெய்வத்தினை மறந்திடாமல் அங்கிருந்த நிலமுனைக்குக் "குமரிமுனை" என்று பெயரிட்டுக் கோயிலெழுப்பி வணங்கினர். பழமை மறவாதோர் நம் தமிழரும் தமிழரின் உடன்பிறப்பாளர்களுமாம்.
பஃறுளியாற்றில் ஆற்றுவெள்ளம் அலைகள் துள்ளும்படியாக ஓடிக்கொண்டிருந்தது என்பது சொல்லாய்வில் நாம் அறிந்தது ஆகும். பஃறுளி என்பதை பிரித்து நோக்கினால் பல்+துளி என்று இருசிறு சொற்கள் எழுதரும்.
இதில் பல் என்பது ஆறு அகலமுடையதென்பதைக் காட்டுகிறது. பல்>பரு>பர> பார் என்ற திரிபடிகள் பருமையையும் பரப்பையும் ஒரே சமயத்துத் தெளிவிக்கவல்லவை ஆம். துளி என்பது சிறு திவலையையும் குறிக்குமதே பொழுதில், துள்ளுதல் என்ற செயல்வினைக்கும் இடன் தருகிறது. வினைகள் இருவகை : அசைவு குறிப்பனவும் அசைவின்மை தெளிவிப்பவையுமாம். ப்ஃறுளியில் ஆற்றலைகள் மிகுந்திருந்தன. நீர் துள்ளிக் சென்றது. பல் துள்ளி என்பது இடைக்குறைந்தாலும் துள் > துளி; துள் > துள்ளி என்றவாறு
விரித்துணர்ந்தாலும் நீரின் அடைவெல்லையைத் தொட்டுவிடுவீர்.
குமரி நிலப்பரப்ப்பில் மலையொன்றும் இருந்தது. மகிழ்வுறுத்தும் மலையுச்சியு மிருந்ததென்பதனை : "குமரிக்கோடு": என்பதாம் வரணனை நமக்குத் தெரியக்காட்டுவதாகிறது.
அம்மன் வழிபாடு மிக்கப் பழையது ஆகுமென் றறிக .
நாம் இட்டப்பட்டு வணங்குவது இட்ட தெய்வம். இட்டமாவது மனத்தை இடுவது. உங்கள் கூட்டத்துக்கு உரியது குலதெய்வம்.
கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ளக் குலதெய்வம் குறித்தல் போதாமையின் பிற்காலத்தில் சாதிகள் தோன்றின போலும், இது ஆராய்வதற்கு உரியது,
Will be edited.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக