சனி, 6 செப்டம்பர், 2014

Soweto (South Africa)

நெல்சன்  மண்டேலா பெருமகனார் தங்கியிருந்த  இடங்களில்  இதுவும் ஒன்று.  "சொவெட்டோ "  என்பது.

பல சொற்கள் இலக்கணக் காரர்கள் கண்டுபிடித்துச்  சொல்லிய முறைப்படி அமைவதில்லை. பகுதி விகுதி சந்தி  இடைநிலை  சாரியை  என்ற போக்கில் உருவாவதில்லை.   வெளி நாட்டுச் சொற்களிலும் இவ்வுறுப்புகள் வரக்காணலாம்.

சொவெட்டோ என்பது South Western Townships என்பதன் குறுக்கம்.(1)
 இது குறுக்கச் சொல் ஆதலின் இதைப் பகுதி விகுதி என்று பிரித்து உண்மை காண இயலாது.

இதுபோலவே நாம் வழங்கும் பல சொற்களிலும் நிலவுதலைக் காணலாம். விவாகம் என்ற சொல் இப்படிப்பட்டது என்பது முன் கூறப்பட்டது.  வி  = விழுமிய;  வா - வாழ்க்கை ;  கம்  -  ஆகு+ அம் > ஆகம் > கம். ஆனால் இதற்கு வேறு உருவாக்கம் சொல்வதும்  ஒரு   திறமைதான்.

இப்படிச் சுருக்கி அமைத்தவை பல. 

குறிப்புகள் 

1. NELSON MANDELA,  The Long Walk to Freedom, (2013), p.143.   

கருத்துகள் இல்லை: