சொல்லி அழுவது தவிர, வேறென்ன செய்வது?
நார்வே நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், மலேசியாவுக்கு தெற்கிலுள்ள ஒரு வளமிக்க தீவில் ஒரு குழும்பு (கம்பெனி) திறந்தார். குழும்புமூலம் காசு கொட்டும் என்று எதிர்பார்த்தார். வணிகம் ஓடவில்லை. இழுத்து மூடிவிட்டு, தமக்கு வேறு நாடுகளிலுள்ள குழும்புகளைக் கவனிப்பதில் ஆழ்ந்து ஈடுபட்டுவிட்டார்.
தீவுக் குழும்பை மூடிய போது, சில பழைய நாற்காலி மேசைகளை முறைப்படி அப்புறப்படுத்தி, அரசுக்குக் கணக்குக் காட்ட மறந்துவிட்டார். அவை அங்கேயே கிடந்துவிடவே, அரசு அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தனர். ஒரு குறிப்பிட்ட விலையை அவற்றுக்கு மதிப்பீடு செய்தனர். இவர் கூற்றுப்படி அவை குப்பைக் கிடங்குக்குப் போகவேண்டியவை. இவற்றை முறைப்படி கணக்குக்காட்டி களைவு (disposal) செய்யத் தவறியதால், அவர்மேல் ஒரு வழக்குப் போட்டனர், அவர் வழக்கறிஞர் உதவியுடன் வாதாடினார். நீதிமன்றம் "குற்றம்" என்று தீர்மானித்து நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.
இவர் பல குழும்புகளை வேறு நாடுகளில் நடத்துகிறவர். பழங்குற்றப் பின்னணி உள்ளவரா அல்லது முதல்தடவைக் குற்றவாளியா என்று தெரியவில்லை முதல்தடவைக் குற்றவாளியாயின், பெரும்பாலும் தண்டம் விதிப்பது வழக்கம்.
அது பழைய முறை. இப்போது புதுமுறைகள் நடப்புக்கு வந்திருக்கக்கூடும்.
இங்கே குழும்பு திறக்கப்போய், இப்படி ஆகிவிட்டதே என்று நண்பர்களிடம் சொல்லி அழுவது தவிர, வேறென்ன செய்வது?
இதற்குச் சில வரிகள்:-
சோர்வு தருவதொன்று சோகம்----- இடர்
சொல்லி அழுதிடிலோ ஊதியம் குலாவும்
நேர்வ தென்பவெலாம் நேரும் ----- அதை
நினைத்துக் கிடந்தவர்க்கோ உள்ளமே நோகும்!:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக