புதன், 24 செப்டம்பர், 2014

மழை பாடும் இசை

தடதட வென்றஓசை---எங்கள்
தகர அடுக்களைக் கூரையின்மேல்,
படுகிற நீர்த்துளிகள் ---மழை
பாடும் இசையெனக் கேட்கிறதே!

பகல்தரு வெப்பமதே ‍‍‍--- நீங்கி
பைங்குளிர் வந்து பரவுவதால்,
உகந்திடு சூழலிதே ‍‍‍--- நான்
உறங்கவுய்த் தே நின்று தாலாட்டுதே.


இரவில் யாமமதற் ‍---கப்பால்
இவ்வினி  மைதான் தொடர்ந்திடுமோ?
நிறைவாய் உறங்கியெழ --- எனை
நித்திரைத் தேவியும் முத்தியிட!

கரகர ஓசையிலே!‍‍--- நெடுங்
கடலிடை நீரினில் அமிழ்வதுபோல்
உறுமிது பேரின்பமே --- இந்த‌
உறக்கத் தணைப்பினை என்சொல்வனே!

கருத்துகள் இல்லை: